பெண்ண்டிமை தீர்ந்தால்தான் – மக்கள் அடிமை மனப்பான்மை நீங்கும் என்று கண்ட பெரியார் – பெண்களுக்கு மட்டும் என அவர்களை அடக்கி – ஒடுக்கிக் கட்டுப்படுத்தி வைப்பதற்காக்க் கூறப்பட்ட கருத்துகளை -அதனோடு கலந்த கற்பனைகளை எல்லாம் கண்டிக்கலானார்.

பெண்கள் பாவப்பிறவிகள் என்பதாக்க் கருதி அவர்களைத தேவதாசகளாக – விற்பனைப் பண்டமாக – பிள்ளை பெறும் இயந்திரமாக – தொண்டு செய்யும் தகுதியன்றி வேறு தகுதியற்றவராக – விதவையாகிவிட்டால், மறுமண உரிமை யற்றவராக – சொத்துரிமை இல்லாதவரக அடிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையை மாற்றுவதற்கான புதிய சிந்தனையை வளரச் செய்தார்.

புரோகிதச் சடங்குகள் நீக்கிய திருமணம்,
சாதி வேற்றுமை ஒழிக்கும் கலப்புத் திருமணம்,
விதவைப் பெண்ணின் மறுமணம்

முதலாக மனித வாழ்வில் இடம்பெறும் தலையாய திருமண நிகழ்ச்சியைச் சமுதாய மாற்றத்துக்கான உரிமை உணர்வு தழைக்கும் முறையில் நடத்தும் புதுமை வழிகண்டார்.

நீத்தார் நினைவு நாளாயினும், அந்நிகழ்ச்சியிலும் பகுத்தறிவுச் சிந்தனை இடம்பெறும் வழிகண்டார்.

மனித வாழ்க்கையின் பல்வேறு நிலைகளிலும், அனைத்து நிகழ்ச்சிகளிலும், மத்த்தின் பிடிப்பும், அதனால் ஏற்படும் மனப்பான்மையும் தகர்க்கப்படுவதுற்கு வழி காணும் பணியே அவரது பணியாயிற்று.

ஒழுக்கம் – நேர்மை – உண்மை – கடமை – தரும்ம் – புண்ணியம் – கல்வி – கற்பு – திருமணம் முதலான பல்வேறு பொருள் குறித்தும் – அவற்றின் அடிப்டையை – அவை மதிப்பீட்டையும் அப்படியே ஒப்புக் கொள்ளத் தேவையில்லை என்பதும், மனிதனின் அறிவு தெளிவடைய அவையெல்லாம் மறு ஆய்வு செய்யப்படவேண்டும் என்பதுமே அவரது நோக்கமாயிற்று.

பெரியாரின் குறிக்கோள், எல்லோரும் ஒரு குலம் – ஒரு சம்ம்- ஒரு நிறை என ஒக்கலாக வாழ்வதற்குத் தடையாக – இடையூறாக உள்ள எதனையும், அறிவு வழியில் தகர்த்து எறிந்து சமத்துவ- சுயமரியாதை வாழ்வை அனைவருக்கும் உரத்தாக்குவதே எனலாம்.