இந்தி எதிர்ப்பு
1937ம் ஆண்டு இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு
மக்களால் தேர்வு செய்யப்படுபவர்கள் ஆட்சியமைக்க
தகுதி மிக்கவர்கள் என அரசு அதிகார பூர்வமான
அறிவிப்பை வெளியிட்டது. களத்திலே காங்கிரஸ்
கட்சியும், நீதி கட்சியும் எதிரும் புதிருமாக நின்றன.
நீதிக்கட்சியின் முதன்மைப் பேச்சாளராக
ஈ.வெ.ரா முன் நின்றார்.
காங்கிரஸன் தரப்பில் எஸ். சத்தியமூர்த்தி,
ராஜாஜி, ப. ஜீவானந்தம் ஆகியோர் சிறந்த
பேச்சாளர்களாக விளங்கினர். நீதிக்கட்சி தன் சக்தி
அனைத்தையும் திரட்டி களத்திலே நின்றது. இருந்தும்
மிகப்பெரிய வீழ்ச்சியை நீதி கட்சி காண நேர்ந்தது.
நீதி கட்சியின் சகல கலா வல்லவரான தலைவர்
பொப்புலி மகாராஜவே தோற்கடிக்கப்பட்டார்.
நீதிக்கட்சியின் தலைவர்களான பி.டி. ராஜன், முத்தையா
முதிலியார், இராமநாதபுரம் ராஜா ஆகியோரும் வெற்றி
வாய்ப்பைப் பறிகொடுத்தனர் 215 இடங்களில்
காங்கிரஸ் கட்சி 159 இடங்களைக் கைப்பற்றியது.
நீதிக்கட்சிக்கு இஃதொரு பேரிடியாகும்.
மரண அடியாகும் நீதி கட்சியினின்றும் பலர்
ஓட்டமெடுக்கத் தொடங்கினர். ஒதுங்கத் தலைப்பட்டனர்
நீதி கட்சி பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டது.
தேர்தல் முடிவுக்குப் பின்னால் ராஜாஜி தலைமையில்
காங்கிரஸ் அமைச்சர் அவை பொறுப்பேற்றது.
ஆட்சி கைவரப்பட்டவுடன் ராஜாஜி முதல் வேலையாக
மூன்றாம் வகுப்பிலிருந்து தாய்மொழியையே
போதனா மொழியாக்கினார். அதுவரைக்கும் சரி….
ராஜாஜி நூண்மான் நூழைபுலம் மிக்கவர்தான்;
நுட்பமான ராஜதந்திரத்தில் முதிர்ச்சியுள்ளவர்தான்
ஆனால் யானைக்கும் அடிசறுக்கும் என்பார்களே?!
வல்லவனுக்கும் வழுக்குப்பாறை உண்டு தானே?!
தெரிந்தோ தெரியாமலோ ஏழாவது எட்டாவது வகுப்பில்
இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இச்செயல்
தமிழ் மண்ணில் பெருநெருப்பை மூட்டிவிட்டது
தமிழறிஞ்ரகளின் நெஞ்சில் நஞ்சு
பூசியவேல்பாய்ந்தது போலானது தமிழ்மறவர்களின்
தோள்கள் தினவெடுத்தன; மார்புகளோ படபடத்தன.
தமிழ்க் கடலான அடலேறான மறைமலை அடிகள்,
நாவலர் சோமசுந்தரம் பாரதியார்,
பேரறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன் போன்றோர்
வெகுண்டெழுந்தனர்.
ஈ. வெ. ரா. போர்க்கொடியை உயர்த்திப் பிட்த்துக் கர்ஜித்தார்.
படை திரட்டினர்; பட்டி தொட்டியெங்கும் இந்தி
எதிர்ப்புப்பாசறைகள் தோன்றின.
“இந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமாம் – நீங்கள்
எல்லோரும் வாருங்கள் நாட்டினரே!!
செந்தமிழுக்குத் தீமை வந்த பின்னும் – இந்த
தேகம் இருந்தொரு இலாபமுண்டோ?”
மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை – எமை
மாட்ட நினைக்கும் சிறைச்சாலை
என்ற இந்த வீரவரிப்பாட்டு திக்கெட்டும் பட்டுமோதி
முற்றுகையைத் தொடங்கி வைத்தது.
இப்பாட்டு மண்ணையும் விண்ணையும் தொட்டுத் தொட்டு
போர்களக் கூத்துக்குக் கட்டியம் கூறியது.
“சாவதிலும் தமிழ் படித்து சாகவேண்டும் – எந்தன்
சாம்பலது தமிழ் மணந்து வீசவேண்டும்.”
என்று இளைஞர்கள் கிழக்குத் தொடர்ச்சி மலைகளென
வரிசை வரிசையாகக் கிளர்ந்ததெழுந்தனர்.
1937 – ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 – ம் நாள்
தமிழர் மாநாடு கூட்டப்பட்டது
நாவலர் சோமசுந்தரம் பாரதியார் மாநாட்டுக்குத்
தலைமையேற்றார். முத்தமிழ்க் காவலர்
கி.ஆ.பே விஸ்வநாதனும், திருச்சி வேதாச்சலம் B.A., B.L,
ஆகியோர் முன்நிற்க ஈ.வெ.ரா, அவர்கள்
போராட்டப் பட்டியலைத் தீட்டினார்
“படைப்பெருத்ததால்
பார் சிறுத்ததோ!
பார் சிறுத்ததால்
படைபெருத்ததோ”
என்ற கலிங்கத்துப்பரணியின் வீரவரிச் சித்திரங்கள்
உயிர் பெற்று உலா வந்தன
முதல்வர் இராஜாஜி வீட்டு முன் உண்ணா நோன்பு
மறியல் தொடங்கப்பட்டது, ஈ.வெ.ரா.
அறிஞர் அண்ணா, ஈழத்து அடிகள் பாலசுப்ரமணியம்,
டி.வி. நாதன் சி.டி. நாயகம் போன்ற நலைவர்களும்,
தோள் கொடுக்கும் தொண்டர்களும்
பீடுநடை போட்டுச் சிறை ஏகினர்.
பெரியார் அவர்கள் வெளியிலிருந்து தலைமையேற்று
தனது அடுத்த கட்ட தலைவர்களையும், தொண்டர்களையும்
சிறைசெல்லப்பணித்தார்.
இந்தி எதிர்ப்பு உணர்வோடு.,
செவங்குறுதி தனிற் கமழ்ந்து வீரம் விளைந்த
தமிழே தமிழரின் – உயிர்மூச்சானது;
அமிழ்தாகும் உன்னதப் பேறானது.
