உலகம் கண்ட ஒப்புயர்வற்ற சிந்தனையாளர் சிலரில் ஒருவர். அச்சிலரில் பலருக்கு இல்லாச் சிந்தனை வளமும், செயற்பாட்டு வளமும் மிக்குச் சிறந்து மிகுபுகழ் ஈட்டிய மேன்மையாளர். இப்பெரியாரின் அன்றாட வாழ்வும் அருந்தமிழ்ப் பேச்சும் உலகில் ஒரு மூலையில் நிகழ்ந்தன. ஆனால், வாழ்வின் நடைமுறைகளும், பழக்க வழக்கங்களும், பேச்சில் எழுத்தில் வெளிப்பட்ட கருத்துக்களும், சிந்தனைகளும் உலகம் தழுவும் உயர்திறத்தன. பிறந்த நாடு, பேசும் மொழி, வாழும் சூழ்நிலை, இவைகட்கு ஆட்பட்டு அறிவுரை வழங்கியோர் உலகில் பலர். ஆனால், மேற்குறிப்பிட்ட செயற்கைப் பிடிப்புகட்கு ஆட்படாது, அப்பால் நின்று, அறிவுரை வழங்கிய ஆன்றோர் இவர்!

தன்குறை, தம்குறை காணாது பிறர்குறை கண்டும் பெருக்கிப் பேசியும் திரியும் உலகில் தன்குறை தம்குறை கண்டு திருந்துவதே தக்க வழியெனக் காட்டிய தக்கார். அஞ்சாமை, ஊக்கம், அறிவுடைமை என்ற மூன்றின் ஒருமித்த வடிவமாக விளங்கி ஊரையும் நாட்டையும் உலகையும் ஆளாது ஆண்ட ஆண்டகை. ஏட்டறிவும் துய்ப்பறிவும் இணைந்து விளங்கிய ஏந்தல். உலகம் விரும்பியதைக் கூறாது உலகுக்கு வேண்டியதைக் கூறிய வித்தகர். உலகியலில் தாழ்வொடுபட்ட ஆசைகட்கு ஆட்பட்டு வாழாது வாழ்ந்த வளர்புகழாளர்.

புகழ்ச்சியை வேண்டியும், இகழ்ச்சியை வெறுத்தும் பேசியறியாப் பெருந்தகை. தன்பெண்டு தன் பிள்ளை, தன்சுற்றம் என்று வாழும் உலகில் மானிடம் வாழ வாழ்ந்த மாபெரும் மனிதர். புளியம் பழமும் ஓடும் போல எந்த ஒன்றோடும் ஒன்றியும் ஒன்றாது இருந்து, உண்ம பல கண்ட உயர் பெரும் ஞானி.

செல்வராக பிறந்தும், செல்வராக வளர்ந்தும் செல்வச் செழிப்பிலும் செல்வக் களிப்பிலும் சிக்கிச் சீரழியாது சிக்கனமாக வாழ்ந்து செல்வம் அனைத்தையும் பொதுச் சொத்தாக்கிப் புதுப்புகழ் பூண்ட புத்தர்.
கல்லூரி காணாதவராயினும், கற்றோர் அறியா அறிவும், கற்றோர்க்குத் தாம் வரம்பனத் தகும் தலைமையும் வாய்ந்த சான்றோர்.

வல்லன், சோர்விலன், அஞ்சான் ஆகிய இயல்புள்ளவனை இகலில், வெல்லுதல் யாராலும் இயலாது என்றார் வள்ளுவர். இத்தகைய மனிதன் இருப்பானா? என்று எண்ண அளவில் ஏங்கிக் கிடந்த எமக்குத் தமது பேச்சாலும், எழுத்தாலும், செயலாலும், வெற்றியல்லாது வீழ்ச்சியறியா விறலோராக விளங்கிய வேந்தர்.

நீதி மன்றின் நீதிக்கும் நீதி சொன்ன நேர்மையாளர்.

தமிழ்நாட்டின் – ஏன்? இந்தியத் துணைக்கண்டத்தின் தாழ்மைக்கு நாம் பன்னூறு ஆண்டுகளாக்க்கைக்கொண்டு போற்றிப் பாதுகாத்து வரும் பழக்கங்களும் வழக்கங்களும் நடைமுறைகளுமே காரணம் என்று முற்றக் கண்டு முடிவு கட்டி விளக்கிய மூதறிஞர்.

உயர்ந்தவன்-தாழ்ந்தவன், ஆண்டான்-அடிமை என்னும் பேத நிலைகளைப் போக்கி ஒப்புடைமைச் சமுதாயம் காணப் பிறப்பினிலே பெரியாராகப் பிறந்து வந்த பெரியார்.

தோன்றும் பொழுதே மணமுடன் தோன்றும் துளசிச் செடி போல எதனையும் அறிதற்கு வேண்டிய அறிவையும் செய்தற்கு வேண்டிய செயல் திறத்தையும் தோன்றியபொழுதே ஒக்கப் பெற்று உயர்புகழ் நிறுவிய உரவோர்.

மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக எளிமையும், வஞ்சகர்க்குக் கொடிய நெருப்பாக அருமையும் ஒக்கப்பெற்ற ஒண்புகழாளர்.

எண்ணியதைச் சொல்லியும், சொல்லியதை எழுதியும், எழுதியதைச் செய்து காட்டியும், உலகுக்கோர் தனி எடுத்துக்காட்டாக விளங்கிய ஏந்தல்.

நின்ற சொல்லராய் நீடு தோன்றினியராய் உலகில் நீண்ட நாள் உலவிய நேர்மையாளர். சூழ்ச்சியினை, வஞ்சகத்தை பொறாமை தன்னைத் தொகையாக எதிர்நிறுத்தித் தூள் தூளாகச் செய்யும் காழ்ச்சிந்தை மறச்செயல்கள் கொண்ட காவலர்.

இவ்வாறு பெரியாரின் பெருமை இயல்புகளைப்பேசப்புகின் அது விரிப்பின் அகலும். தொகுப்பின் எஞ்சும் ஆகலின் இவை இவ்வளவில் நிற்க, எடுத்துக்கொண்ட தலைப்பிற்கு வருவோம்.

முழுப்புரட்சி என்பது என்ன?

புரட்சி யென்பது கீழுள்ளது மேலாகவும், மேலுள்ளது கீழாகவும் புரளுகின்ற செயலுக்குத் தொழிற் பெயராக முதலில் வழங்கிப் பின்னர் இதனைப் போன்றே அரசியல் சமுதாய இயல் போன்றவற்றில் தலைகீழான மாறுதல் ஏற்படுதலைப் புரட்சி என்ற கருத்தில் இப்போது வழங்குகின்றோம். முழுப்புரட்சி என்பது அரசியல் – வாழ்வியல் கூறுகளில், எச்சம் சொச்சம் இன்றி, முழுமையாக அடியோடு எல்லாவற்றையும் மாற்றுதல் என்னும் கருத்துடைய மொழியாகும். இத்தகைய முழுமையான புரட்சியைத் தமிழக மக்களின் எண்ணத்திலும் பேச்சிலும் செயலிலும் விளைவிக்க வெண்டுமெனக் கடந்த 60 ஆண்டுகட்கும்மேலாக தன்னை இடும்பைக்கே கொள்கலமாக ஆக்கிக்கொண்டு பொதுப்பணி புரிந்தார் பெரியார்.

பெரியார் மேற்கொண்ட முழுப்புரட்சியின் இயல்.

வரலாறு தெரியாத காலம் தொடங்கி, வரலாறு தெரிந்த காலம் வரை சுமார் மூவாயிரம் ஆண்டுகளாக பொதுவாக இந்திய நாடும் சிறப்பாகத் தமிழ்நாடும் இவைகளில் வாழ்ந்த – வாழ்ந்து கொண்டிருக்கிற மக்களின் வாழ்வு முறைகள் அவ்வளவும் எல்லாவகையிலும் குறையுடையவை என்பதைத் தெள்ளத் தெளியக் கண்டவர் பெரியோரேயாவர். பெரியார் ஏற்றுக்கொண்டு பாராட்டும் அளவுக்கு இந்த நாட்டு மக்களின் வாழ்வுத்துறை பற்றிய ஒரு நடவடிக்கைகூட இல்லை என்று அவரே எழுதியுள்ளார். அதுமட்டுமல்ல. இந்த நாட்டு மக்களின் பொது வாழ்க்கையையொட்டிய நடவடிக்கைகளைக் காணும் போது நாம் குறைபடுத்திப் பேசியதும், எழுதியதும் போதாது. இன்னும் சற்றுக் கடுமையாக்க் குறைபடுத்திப் பேச வேண்டுமென்றே தோன்றுகிறது என்று குறித்துள்ளார். அவருடைய சொற்களைக்கொண்டே அவர் மேற்கொண்ட புரட்சி எத்தகையது என்பதை நான் நன்குணரலாம்.

………”எனது வார்த்தைகளும், எழுத்துக்களும், செய்கைகளும் தேசத்துரோகமென்றும், வகுப்புத் துவேஈமென்றும், சிலர் சொல்லவும், ஆத்திரப்படவும் ஆளானேன். அரசியல் தலைவர்கள், தேசாபிமானிகள், தேச பக்தர்கள் என்பவர்கள் என்னை வையவும், என்னைக்கண்டித்து ஜெயிலில் வைக்கும்படி அரசாங்கத்தைக் கெஞ்சவும் ஆளானேன். இந்த இன்பமற்ற காரியங்களை நான் ஏன் செய்ய வேண்டும்? என்று யானே யோசிப்பதுண்டு.

சிற்சில சமயங்களில் யாரோ எப்படியோ போகட்டும்! நாம் ஏன் இக்கவலையும் தொல்லையும் அடைய வேண்டும்? நமக்கென்ன இதனால் ஜீவனமா? பணம், புகழ், கீர்த்தி, சம்பாதனையா? ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்? ஒரு பத்திரிகையாவது உதவி உண்டா? ஒரு தலைவராவது உதவி உண்டா? ஒரு தேச பக்தராவது உதவி உண்டா?

இமயமலை வெய்யிலில் காய்கிறது என்று குடைபிடிப்பதுபோல் இருக்கிறது என்பதாக்க்கருதி விலகி விடலாமா? என்று யோசிப்பதுண்டு.

ஆனால், விலகுவதில்தான் என்ன லாபம்? ஏறக்குறைய நமது ஆயுட்காலமும் தீர்ந்துவிட்டது. இனி நாலோ, அய்ந்தோ அதிகமாக இருந்தால் பத்து வயதுக்காலமோ இருக்கலாம். இந்தக் கொஞ்சக் காலத்தையும் ஏன் நமது மனசாட்சிக்கு கொஞ்சக் காலத்தையும் ஏன் நமது மனசாட்சிக்கு விட்டுவிடக்கூடாது? விலகித்தான் என்ன பெரிய காரியம் செய்யப்போகின்றோம்? என்பதாகக் கருதி உழன்று கொண்டிருக்கிறோமேயல்லாது வேறில்லை.

இக்கஷ்டமானதும் மனதுக்கு இன்பத்தைக்கொடுக்கக் கூடியதுமான காரியத்தில் இறங்கிவிட்டோம். உலகம் ஒப்புக்கொண்டாலும் சரி, தள்ளிவிட்டாலும் சரி. நமக்கு அதைப்பற்றி கவலையில்லை”.

-என்று பெரியார் எழுதியிருப்பது, அவருக்கிருந்த ஒட்டு மொத்தமான எதிர்ப்பைக் காட்டுகின்றன. சமுதாயத்தின் மேல் தட்டில் இருந்துகொண்டு நாட்டை இயக்கிக் கொண்டிருந்தோர்.அனைவரும் எச்சம் சொச்சம் இல்லாமல் எதிர்த்தனர். இந்த உண்மையை மிகத் தெளிவாக விளக்கும் பெரியாரின் இத்தலையங்கத்தை உலகப்புகழ் வாய்ந்த தன்னிலை விளக்கக் கட்டுரைகளில் தலைசிறந்ததாக்க் குறிக்கலாம். கற்றவர், அறிந்தவர், தெரிந்தவர், பொதுநலத் தொண்டர் யாவரும் முழுமையாக எதிர்த்தனர். என்றால், மற்றவர் நிலையை நாம் என்ன எண்ண முடியும்.

மற்றவர்கள் பெரியாருடைய கூட்டங்களை நடத்த விடாமல் கலகம் செய்யும் நிலையில் தொடங்கிப் பெரியாரை அடிக்கின்ற அளவுக்கு முன்னேறி நின்றனர். இந்திய நாட்டில் பொது வாழ்வில் ஈடுபட்ட எவரும் இவ்வளவு பெரிய எதிர்ப்பைச் சந்திக்கவில்லை. தன்னுடைய கைப்பணதைச் செலவு செய்து கொண்டுதான் அவருடைய கருத்துக்களை விளக்கினார். படித்த இளைஞரின் சிலர் அவ்வப்போது பெரியாருடன் சேருவதும் பிறகு பிரிந்து போவதும் எதிரணியில் சேர்ந்து கொள்ளுவதுமாக இருந்தனர். பொட்டுப் பூச்சிகளாய்ப் புன்மைத் தேரைகளாய் ஆமையைப் போல அடங்கி ஒடுங்கிக் கிடந்த கோடானுகோடி கண்மூடி மக்களின் எதிர்ப்பைப்பெரியார் பக்கம் திருப்பிவிடப் பகைவரால் எளிதில் முடிந்தது.

“கடவுள் இல்லை” என்கிறான்.

“மதமில்லை” என்கிறான்.

“சாத்திரங்கள் பொய்” என்கிறான்.

“சாதியில்லை” என்கிறான்.

“கடவுளின் அமைப்பான மேல் கீழ் நிலைகளைக் கண்மூடி வழக்கம்” என்கிறான்.

“முன்னோர் சொன்னது; முன்னோர் நடந்தது; அவ்வளவும் முழுப்புரட்டு” என்கிறான் – என்று பெரியாருக்கு எதிராக முழங்கினார்; பேசினார்; இவைகளைக் கேட்ட கண்மூடி மக்கள் தேள் கொட்டி நெறி ஏறுவது போல ஆத்திரப்பட்டுப் பெரியார் போகிற இடமெல்லாம் கும்பல் கும்பலாகத் திரண்டு நின்று எதிர்த்தனர். வாயில் வந்தபடி வசைபாடினர். சின்னாளப்பட்டி என்னும் ஊர்மக்கள் பெரியாரை அடித்தும் போட்டனர். இத்தகைய எதிர்ப்பைப்பெரியார் வானொலியின் சார்பில் இத்தகைய பேட்டி கண்ட திரு. மாறனிடம் பின்வருமாறு கூறுகிறார்.

மாறன்: அந்த காலத்திலே உங்களுக்கு ஆதரவு அபூர்வமாக இருந்ததே! முக்கியமான ஆதரவு எது?

பெரியார்: பிள்ளைகளைச் சேர்த்துக்கிட்டுச் சத்தம் போட்டேன். பெரிய மனுசங்க ஒருத்தரும் எங்களுக்கு ஆதரவு இல்லே. உண்மையா எல்லாம் பையங்கதான். மத்தவங்க ரொம்ப ரெலிஜியஸ் -வேஷம். பயந்தவங்க. அரசியலிலே தங்களுக்கு ஓட்டு வேணும் என்கிறவங்க ஆகையினாலே ஆதரவு கம்மிதான். பிள்ளைகள் உற்சாகமாக பின்னே வருவாங்க. இப்ப பணம் கொடுத்துக் கூப்பிடுறாங்களே. அப்போ எங்க பணம்தான் செலவு. கல்லடியெல்லாம் அடிச்சிருச்சாங்க. இங்க அடிச்ச அடி இந்தக் கையை ஆட்டி விட்டுது.

மாறன்: எந்த இடத்தில்-எந்த ஊரிலே அய்யா?

பெரியார்: ம்…சின்னாளப்பட்டின்னு தேவாங்கர் இருக்கிற ஊரு.

மாறன்: ஆமா…! அது நெசவுக்கு பெயர்போன இடம்.

பெரியார்: அடியோட அவுங்க காங்கிரசு-அப்போ-நான் பிரச்சாரம் பண்ணப்போனேன்.

மாறன்: ஆமா-! எத்தனை வரும் இருக்கும்?

பெரியார்: அது நாற்பத்தி அஞ்சு… நாற்பத்தி நாலா இருக்கும். நல்ல அடிச்சுட்டாங்க.”

பெரியாரின் இந்த வானொலிப்பேட்டி உரை எவ்வளவு சிறந்தது, எந்த அளவுகு உண்மையொடு பட்டது. என்பதனைப்பெரியாரின் கடந்த கால நண்பர் பெரியாரோடு காங்கிரசில் பல ஆண்டுகள் நெருங்கிப் பழகியவர்; பெரியார் கதர்போர்டு தலைவராக இருந்தபோது, காரியதரிசியாக இருந்து பணிபுரிந்தவர்; பெரியாரின் சுயமரியாதைக்கொள்கைகளை ஒத்துக்கொண்டவர்; “மேயோ கூற்று மெய்யா? பொய்யா? ” என்னும் நல்ல நூலை எழுதியவர்; கோவை சி.எ. அய்யாமுத்து என்னும் பெயருடையவர். பெரியாரின் வானொலி உரையைத் தன் மனைவியும் தானுமாக இருந்த கேட்டுவிட்டுப்பெரியாரை வாழ்த்திச் சில பாடலங்களை வரைந்து, நமது மதிப்பிற்குரிய திராவிடர் கழகப்பொதுச் செயலாளர் திரு. கி. வீரமணியவர்கட்கு அனுப்பி வைத்தார். அப்பாடல்களையும், வானொலிப் பாராட்டுவதற்கு உரியதாகும். நம் மதிப்பிற்குரிய அய்யா அவர்களின் உண்மையொடுபட்ட உரைக்கு முத்திரை குத்தியதுபோல அப்பாடல்கள் விளங்குகின்றன. அய்யா அவர்களின் தன்னலம் மறந்த தூய்மையான பொதுவாழ்வும், குடும்ப வாழ்வும், திண்ணிய மனநிலையும், நல்லவண்ணம் உணர்ச்சியோடு கலந்து நிழற்படம் போலப் பாடியிருக்கும் பாங்கை என்னால் உணர முடிகின்றது.

இவர் ஒரு நல்ல எழுத்தாளர் என்பதை அறிவேன். இவர் நல கருத்தமைந்த இசைப்பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளார் என்பதைப் பிறகு கேள்விப்பட்டேன். கடைசி வரையில் காங்கிரசுக்கார்ராக இருந்தவர். வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டவர். அய்யாவைப் பற்றி, “நான் கண்ட பெரியார்” என்னும் நூலை எழுதியவர். அய்யா அவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் சிலவற்றைச் சுவைபட எழுதியவர்.

இத்தகைய பெரியவர்க்கு வானொலியின் பேட்டியைக்கேட்டதும் பாட்டாகப் பாடி அனுப்பி வைத்தார் என்றால், அதற்குக்காரணமான அந்தப்பேட்டி உரையில் அய்யா அவர்கள் கையாண்ட உண்மையும், நேர்மையும், உணர்ச்சியும் கலந்த பாங்கு என்பதை நாம் தெளிவாக உணரமுடிகிறது. அப்பாடல்களில் சிலவறை காண்போம்.

வானொலி தன்னில் மாறன்
வழுத்திய கேள்விக்கெல்லாம்
வான்மழைபோன்று தாங்கள்
வழங்கிய சொற்கள் கேட்டு
நானும் என்மனையாள் தானும்
நன்மனம் நிறைவுற் றோமே!

நீங்கிலா நினைவு பூண்டு
நித்தமும் நினைப்ப தோடு
ஓங்குமுன் புகழைக் கேட்டு
உள்ளமும் மகிழ்வுற்றோமே!
எண்ணிய கருத்தைத்தாங்கள்
எவரெல்லாம் எதிர்த்த போதும்
திண்ணிய மாகச் சொல்லும்
திறத்தினை எண்ணி எண்ணிச்
சிறியனேன் இறும்பூ தெய்தித்
திளைத்திடல் இன்றும் உண்டே!

உத்தமி நாகம் மாவும்
உயிருடன் இருந்த காலை
எத்தனை நாட்கள் அங்கு
இன்னமுது உண்டோம் நாங்கள்
அத்தனே! அந்த நாட்கள்
அருந்தவப் பேறாம் அன்றோ!

இத்தரை மீதில் சாதி
இழிபடும் சமயம் சாமி
முத்திரை கிழக்கும் போரில்
முற்றிலுமோடு நின்றேன்
எத்தனை துன்ப மேற்று
இடர்ப்பட நேரிட்டாலும்
சுத்த தன் மானம் காக்கத்
தொடர்ந்துயிர் ஈவே னய்யா!

……………… ……… ……….
………… …………. …
பன்னெடுங்காலம் தங்கள்
பகுத்தறிவு வியக்கம் வாழ்ந்து
நன்னெறி சூழ்ந்து மக்கள்
நலமுடன் வாழ்க! வாழ்க!

பெரியாரை முழுப்புரட்சியாளராக ஆக்கியது என்று நாம் எண்ணலாம். சாதி சமயம் இவையொட்டிய மூடப்பழக்க வழக்கங்கள் ஆகியவைகளை ஒழிக்கும் போரைத்தான் தன்னுடைய முழுப்புரட்சியாக அய்யா நடத்தினார்.

இவ்வளவு கடுமையான எதிர்ப்புக்கும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆட்பட்டுக் கொண்டும் கைக்காசைச் செலவு செய்து கொண்டும் பொதுத் தொண்டு புரிதல் என்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள்! யாரும் இந்த வழியில் போக மாட்டார்கள். கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளாக யாரும் செல்லாத வழி பெரியார் வழி. இனித்தான் யாராவது செல்ல இயலுமா? என்று எண்ணுகின்ற எமக்கு ஏக்கம்தான் விடையாக்க் கிடைக்கின்றது. திருவாய்மொழி விரிவுரையாளர் கூறுகிறபடி, “அவ்வழி (பெரியார் வழி) போவாரின்மையால் புல்லெழுந்து போயிற்றுக்காணும்” என்று கூற வேண்டியதுதான். நமக்கென்ன என்று ஆட்டு மந்தைகள் போலச் சென்ற வழியே செல்வது என்பதுதான் மனித இயல்பு. இவ்வாறு சிந்தனை சிறிதுமின்று சென்றுகொண்டிருந்த கோடிக்கணக்கான மக்களைச் சிந்திக்க வைதார். இத்தகைய முழுப்புரட்சியை அய்யாதான் செய்தார்.

மற்றவர் கூறிய புரட்சிக் கருத்தின் இயல்

மற்றவர்கள் யாரும் சொல்லவில்லையா? என்று சிலர் எண்ணலாம். நீதி, – நியாயம்-அறம் என்ற பெயரில் சிலர் சொல்லியுள்ளனர் என்பது உண்மைதான். அவர்கள் சொல்லியுள்ளமையும் ஆங்கொன்றும் ஈங்கொன்றுமாக அமைந்தவை. மனித வாழ்வின் தாழ்வுகட்கான ஒரு முழுமையான மருந்து என்று நம்மால் எண்ண முடியில்லை. புத்தர் போதனைகளையும், வள்ளுவர் வழங்கியுள்ள சில கருத்துகளையும் இந்த அளவில்தான் நம்மால் எண்ண முடிகிறது. வள்ளுவர் சில பல கருத்துகளை எழுதிவைத்துள்ளார். மக்களை அன்றாடம் சந்தித்து அவர்கள் மொழியில் விளக்கினாரா? இல்லையென்றுதான் கூற வேண்டும். புத்தர் மக்களிடத்தும், மன்னரிடத்தும் தம்முடைய புரட்சிக்கருத்துக்களை விளக்கமாகப் பேசினார் என்று அறிகின்றோம். இங்கு நாம் புத்தருக்கு இயல்பில் அமைந்த சில பல பின்னணிகளை எண்ண வேண்டும். புத்தர் மன்னர் மரபில் பிறந்து, வளர்ந்து, சிறந்தவர். அக்கால நோக்கில், மக்கள் கூட்டத்தில் அவருடைய உரைக்கு மிக்க செல்வாக்கு ஏற்பட்டதில் வியப்பில்லை. மேலும் புத்தருடைய வாழ்வில், அவருக்குத் துன்பம் என்ன? என்பதை அறியாமலேயே வாழ்வின் முற்பகுதியில் வளர்ந்தவர். அதனால் அவர், புரட்சிக்கவிஞர் பாடியதுபோல்,

“வையமல்ல இன்பக் கடலிது
வாழ்க்கையல்ல அன்பின் தொடர்பிது”

என்று எண்ணி எண்ணி இறுமாந்து கிடந்தார். இந்த உலகத்தை நாம், வையகம் அல்லது வையம் என்று கூறுகின்றோம். உண்மையில் நாம் இதில் அடையும் இன்ப்ப் பெருக்கினை எண்ணும்போது, இதற்குப் பெயர் வையகம் அல்ல. வேறு என்ன பெயர் இடவேண்டுமென்றால் “இன்பக்கடல்” என்று கூறவேண்டும். உயிரினங்கட்கு இன்பம் என்பது உலகத்தில் கடல்போப்பரந்தும், விரிந்தும், ஆழ்ந்தும் கிடக்கின்றது. ஆகவே, ‘இன்பக் கடல்’ என்றுதான் கூறவேண்டும். அதே போலத் தாய்-தந்தை-மனைவி-மக்களோடும், உற்றார் உறவினரோடும் வாழும் வாழ்வை “வாழ்க்கை” என்று கூறக்கூடாது. அதன் உண்மை இயல்பைக்குறித்துப் பெயரிடுவதாயின் ‘அன்பின் தொடர்பு’ என்றுதான் சொல்ல வேண்டும். இத்தகைய கருத்தாழம் புரட்சிக் கவிஞரின் மேற்காட்டிய பாட்டில் பொதிந்து கிடக்கின்றது. இது உலக வாழ்வில் நாமடையும் இன்பத்தின் உச்சக்கட்டம்.

இதனைப்போலவே இரண்டாவதாக்க்கூறியது மனித வாழ்வின் அன்புப் பிணைப்பின் உச்சக்கட்டம். இவ்வாறு கவிஞன் கண்ட உலக இன்பத்தின் உச்சக்கட்டத்திலும், அன்பின் தொடர்பாக விளங்கும் மனித வாழ்வின் உச்சக்கட்டத்திலும், வாழ்ந்து திளைத்தவர் புத்தர். இத்தகைய புத்தருக்கு உண்மையான உலகு என்பது இன்பக்கடலாக இல்லாமல் துன்பக் கடலாகப்பிறகுதான் தெரிந்தது. இத்தகைய புத்தருக்கு உண்மையான உலகு என்பது இன்பக் கடலாக இல்லாமல் துன்பக் கடலாகப் பிறகுதான் தெரிந்தது. மனித வாழ்வும் அன்பின் தொடர்பாக இல்லை. அது வெறுப்பு, சஞ்சலம், இவற்றின் தொடர்பாகப் பிறகுதான் தெரிந்தது. தெரிந்தவுடன் உலகத்தை இன்பக் காடலாக ஆக்குவது எப்படி? வாழ்க்கையை அன்பின் தொடர்பாக ஆக்குவது எப்படி? என்று எல்லா துன்பங்களுக்கும் தன்னைக்கொள்கலமாக ஆக்கிக் கொண்டு உறுதியான உள்ளத்துடன் தன்னுடைய இன்ப வாழ்வைத் துறந்து வெளியேறினார். புத்தருக்கு உலக வாழ்க்கையைத் துன்பக்கடலாக மாற்றியது எது? எதுஎது இன்பம் என்று பட்டதோ அது அதுதான் துன்பமாக மாற்றியது என்பதைப் பெரியாரும் கண்டார். அன்பின் தொடர்பான மனித வாழ்வை வெறுப்பின் தொடராக ஆக்கியது எது? எது? என்பதைப்புத்தரைப்போலவே இவரும் கண்டார். ஆனால், புத்தரின் பேச்சு அல்லது உபதேசம் மக்களிடையே செல்வாக்குப்பெறுவதற்கு அவர் மன்னர் மரபினர் என்பது பெரிய அளவில் உதவியிருக்குமென நாம் எண்ணலாம். அவர் பேசிய கருத்தில் மக்களுக்கு நாட்டம் இருந்ததைவிடப் புத்தரின் குடிமரபுப்பெருமைதான் மக்களுக்கு மிகுதியாகப் புலனாகியிருந்திருக்க வேண்டும். அதனால்தான் அவர் இறந்ததும் அவரது கருத்துகளும் மங்கிவிட்டன. புத்தருக்கு பின்னே வாழ்ந்த புத்த நெறியினரும், அவர் கருத்துவேறுபாடு கொள்ளுகின்ற ‘மதம்’ என்ற நிலைக்கு ஆக்கிக் கருத்துவேறுபாடு கொள்ளுகின்ற அளவிற்குக் குழப்பிவிட்டனர். இத்தகைய காரணங்களால், அவர் கொள்கைகள் மக்களின் நடைமுறை வாழ்வில் நிலைபெறாது அழிந்தன அல்லது அழிக்கப்பட்டன.

சித்தர்கள்

சித்தர்கள், பெரியாரைப் போல பல கருத்துக்களைப் பாடலாகப் பாடியுள்ளார்கள். சித்தர்களில் பலர் கடவுளை நம்புகிறவர்கள். கடவுள் – ஆன்மா இல்லை என்ற கோட்பாடு உடையவர்கள் அல்லர்; அவர்களின் மற்றைய கோட்பாடுகளும் ஒருமைப்பாடு உடையதாய் ஓர் இயக்கமாக உருப்பெறவில்லை. மேலும் இவர்களுடைய பாடல்களில், சில பாடல்களில் கருத்துக்கள் வெளிப்படையாக இல்லை. குழுக்குறிபோல பாடிச் செல்கின்றனர். கடவுள் பெயரால் நிகழும், சடங்குகளைக் கண்டித்தார்கள் என்று கூறலாம். அடுத்து இவர்கள் தங்கள் கருத்துக்குப்பொறுப்பேற்றுக்கொண்டு பாடியும் பேசியும் மக்களிடையே பரப்பவில்லை. “ஓடிவிட்டுப்போகிறவன் பாடிவிட்டுப் போனான்” என்உற பழமொழிப்படி புலம்பிச் சென்றனர் என்று கூறலாம். இதனால் இவர்களுடைய கருத்தை யாரும் எடுத்துக் கொள்ளவில்லை. அரைப்பைத்தியம் என்று ஒதுக்கிவிட்டனர். கடந்தகால மனித இயல்பையும் முற்றக்கண்டு, தீமைகள் இவை; இவை; அவைகளைப்போக்கும் வழிமுறைகள் இவை;இவை;என்று முழுப்பொறுப்பேற்றுக்கொண்டு பேசியும், எழுதியும் நடந்து காட்டியும் முழுப்புரட்சி செய்தார் என்று நாம் உறுதியாக எண்ணலாம்.

பெரியார் மேற்கொண்ட புரட்சியின் இயல்

பெரியார் மேற்கொண்ட முழுப்புரட்சி என்பது உலகில் நிகழ்ந்த புரட்சிக்கு வேறானது. நீடித்து நின்று நிறை பயனை மக்களினத்துக்கு நல்க வல்லது. பெரியார் கண்ட முழுப் புரட்சியில் அடிதடியில்லை. கொலை, களவு இல்லை. பொருட்களை நாசமாக்கும் செயல்களுக்கு இடமில்லை. வன்முறை என்பதில் அவருக்கு அறவே நம்பிக்கையில்லை. தனி மனித வெறுப்பில்லை. மூடக்கொள்கை, மூடக் கோட்பாடு இவைகளை வெறுப்பார். அக்கொள்கை உடையோரை வெறுக்கமாட்டார். அவர்கள் நிலைக்கு வெட்கி இரக்கப்படுவார். பெரியாருடைய முழுப்புரட்சி என்பது முழுக்க முழக்க மனித அறிவில் அடிப்பைடியில் அமைக்கப்பட்டது. மனிதனுக்கு அமைந்த அறிவு நிலையானது. ஆற்றலுடையது.

அது சரியாக்கப்படுமானால், மனித வாழ்வின் எல்லா நிலைகளும் தானாகவே சீர்பட்டுவிடும்-என்ற திடமான நம்பிக்கை உடையவர் பெரியார். அவர் பேச்சு வன்மையாக இருக்கும். அவர் எழுந்து கடுமையாக இருக்கும். செயலளவில் வருகின்றபோது அது எளிமையாகிவிடும். பகையாக அல்லது எதிராக உள்ளவொன்றை வன்முறையால் அழித்தொழிப்பதை விட அது இன்னின்ன காரணங்களால், அழித்தொழிக்கத் தக்கது, போற்றிப்புகழ்ந்து கொண்டாடத் தக்கது அன்று என்று மக்கள் உணரும்படிச் செய்துவிட்டால் போதும். எவ்வளவு வன்மையோடு எவ்வளவு காலமாக உள்ள பகையும் தானாகவே அழிந்து போகும் என்ற திடமான கருத்துடையவர் பெரியார். பொதுவாக எல்லா மனிதருக்கும் நல்லது இது… கெட்டது இது… என்று புரிந்துகொள்ளச் செய்துவிட்டால் நிச்சயம் கெட்டவற்றில் மனிதன் ஈடுபடமாட்டான். மனிதன் இயல்பில் நல்லவனே. சூழ்நிலைகள் அவனைக்கெட்டவனாக்குகின்றன என்பதை தெள்ளத் தெளிய கண்டவர் பெரியார். பெரிய பெரிய எதிர்ப்புகளையெல்லாம் அவர் எப்படிச் சமாளித்தார்? அவருக்கு எதிர்ப்பு எவ்வளவு பலமாக ஆகிறதோ அந்த அளவுக்கு அதனை எதிர்க்கும் ஆற்றலும் வன்மை பெற்றுவிடும். அவருடைய எதிர்க்கும் வன்மை என்ன? ஆட்கள் பலமா? ஆயுதங்கள் பலமா? பண பலமா? பின்பற்றுவோர் பலமா? அவருக்கிருந்த எதிர்ப்பின் வன்மைக்கு முன்னே பெரியாருக்கமைந்த ஆள்-ஆயுதம்-பணம்-பின்பற்றுவோர் ஆகிய வன்மைக்கூறுகள் சிறிதும் போதா. இவைகளை நம்பியிருந்தால் பெரியார் எப்பொழுதோ அழிக்கப்பட்டிருப்பார்-அல்லது அழிந்திருப்பார். பிறகு என்ன? இங்குதான் நாம் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

பெரியார் தன்னுடைய வாழ்நாள் முழுமையிலும் தான் எடுத்துக்கொண்ட எக்காரியமானாலும் யாரிடமிருந்தும் எதனையும் எதிர்ப்பார்த்துச் செய்வதில்லை. அதாவது தன்னலம் என்பது அறவே இருக்காது. தான் எதிர்க்கும் கருத்து-அல்லது நடைமுறை அவர் கருத்துப்படி வெற்றி பெற்றுவிட்டால் பெரும்பாலான மக்களுக்கு நன்மையாக முடியும். தான் எதிர்க்கும் கருத்து அல்லது நடைமுறைகளைப் பின்பற்றுவதால் இன்னின்ன தீங்குகள் ஏற்படுகின்றன என்பவைகளைத் தெள்ளத்தெளிய மக்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் அவர்கள் மொழியில் உணர்ச்சியைக் கலந்து வெளிப்படையாக அய்யத்திற்கு இடமின்றி அழுத்தம் திருத்தமாகப் பேசிவிடுவார். அவருடைய இத்தகைய உரையைக் கேட்ட மக்கள் தங்களால் பின்பற்ற முடியவில்லையென்றாலும் அந்த மனிதன் சொல்லுவது நியாயம்தான் என்று சொல்லும்படிச் செய்துவிடுவார். இதற்கேற்ற இயல்புகளை அவர் கருவிலேயே குறைவறப் பெற்றுக்கொண்டு பிறந்துவிட்டார். தன்னுடைய உலகம் தழுவிய பட்டறிவுகளால் அவ்வியல்புகளை வளர்த்துக் கொண்டார். ஆகவேதான் யார் வருகிறார்கள்? யார் போகிறார்கள்? யார் பின்பற்றுகிறார்கள்? என்று அவர் கவலைப்பட்டது கிடையாது. அவர் தன்னுடைய பேச்சை பின்வருமாறு தொடங்குவார்.

“ஏ மனிதனே! என்னுடைய கருத்தை நான் சொல்ல எனக்கு உரிமை உண்டு. என்னுடைய கருத்தைக் கொள்ளவோ அல்லது தள்ளவோ உனக்கு உரிமையுண்டு. நான் சொல்லுவதெல்லாம் நீ நம்ப வேண்டுமென்றோ அல்லது பின்பற்ற வேண்டுமென்றோ யான் கூறவில்லை. உன்னுடைய அறிவைக் கொண்டு சிந்தித்துப்பார். தக்கது என்று பட்டால் ஏற்றுக்கொள். தகாத்து என்று பட்டால் தள்ளிவிடு” -என்றுதான் பேச்சைத் தொடங்குவார். தன்னுடைய பேச்சை முடிக்கும் போதும் மறந்துவிடாமல் இக்கருத்தைக் கூறுவார். இந்தத் தொடக்கமும் முடிவும் எதனைக் காட்டுகின்றது? மானிடத் தன்மையில் பெரியாருக்கிருந்த ஈடுபாட்டையும் நம்பிக்கையையும் இது நன்கு விளக்குகின்றது.

“சிந்தித்துப்பார்! உன்னுடைய அறிவுக்கு முதலில் நீ விடுதலை கொடு! முன்னோர் சொன்னது, முன்னோர் நடந்தது என்று எதனையும் நம்பாதே! உன்னுடைய அறிவுக்கும், கண்கூடான அனுபவத்துக்கும் ஒத்து வருகின்றதா? என்று ஆராய்ந்து பார்! ஒத்து வந்தால் ஏற்றுக்கொள். ஒத்துவராத எதனையும் எவர் சொன்னாலும் கேளாதே!

நாலாம் சாதியாய் நாயினும் கீழாய் நின்று நலியும் மனிதனே! நீயும் மனிதன்தான், மண்ணன்று, உணர்ச்சியற்றுக் கிடக்க. கண்களைத் திற! இமைகளை விலக்கு! விழித்த உன்னுடைய விழியால் இந்த உலகுக்கே ஒளி செய்! இங்கு பேதம் இல்லை. பிரிவில்லை. யாரும் நிகர். அனைத்தும் சரிபங்கென்று ஆக்கு! உழைப்பவனே! உலகம் உன்னுடையது. உழைப்பை வழிவழியாக வெறுத்து மற்றவர் உழைப்பில் வாழ்ந்த உலுத்தர் கூட்டம் கடவுள்- மதம்- சாத்திரம் முதலிய பொய்களை விரித்துப் புலன்களை மறைத்துவிட்டனர். அறிவுக்கு தளையிட்டு அடிமைகளாக்கிவிட்டனர்.

ஆண்டே என்றும் சாமி என்றும் கூனிக்குறுகிக் கும்பிட வைத்துவிட்டனர். முதலில் இத்தளைகளை அகற்ற முயற்சி செய்! அன்னியர் ஆட்சி தானே அகலும். அன்னியர் ஆட்சி இந்நாட்டில் அமையவும் அது நெடுங்காலம் நிலைதிருக்கவும் வழிசெய்தவை மக்களுக்குள் அமைந்திருக்கும் சாதிப்பிரிவுகளும் சமயப்பிரிவுகளும்தான் என்பதை உணர்ந்துகொள். ஆயிரம் உண்டிக்கு சாதியென்று பாட்டுப் பாடுகின்றாயே! ஆயிரம் சாதியுள்ள நாட்டில் அன்னியன் வராமல் என்ன செய்வான்? இந்த அன்னியம் போனால் இன்னொரு அன்னியன் வருவான். அவனும் இலையென்றால், உள்நாட்டில் பெரும்பான்மையான உழைப்பாளி மக்களை நாலாம் சாதியாக்கிய அன்னியன்தான் ஆளுவான். அன்னிய ஆதிக்கமும் மத ஆதிக்கமும் ஒரே அடிப்படையில் அமைந்தவை என்பதை அறிந்துகொள்” என்று மகள்ள் பேசும் மொழியில் உணர்ச்சியையும் உள்ளக்குமறலையும் தன்னுரையோடு கலந்து ஊர்தோறும் நாடுகள் தோறும் நகரங்கள்தோறும் முழங்கினார். ஊரும் நாடும் உலகும் ஒருவாறு அமைதியடைந்து, அவர் உரையைக் கேட்பது; அவர் எழுத்துக்களைப் படிப்பது என்ற நிலைக்கு வந்தது.

இதுகாறும் வரைந்தவற்றால்பெரியார் இயலையும் அவர் செய்த முழுப்புரட்சியின் இயலையும், அதன் எதிர் விளைவுகளையும் ஒருவாறு கண்டோம். இனி அவர் எவ்வெற்றாறு முழுப்புரட்சியாளராக மாறினார் என்ற உண்மைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.

பெரியார் முழுப்புரட்சியாளர் ஆனதற்குப் பல முதல் நிலைகள் உண்டு. எல்லாவற்றிலும் சிறந்து முன்னிற்பது அவருடைய அறிவு வன்மையேயாகும். மனிதன் அறிவு பெறுவதற்கு 2 வாயில்கள் உள்ளன. முதல் தான் காணும் அல்லது துய்க்கும் பொருள்களைக்கொண்டு அறிவு பெறுவது மற்றொன்று தான் காதால் கேட்கும் பொருள்கள், செய்திகள் இவைகளைக்கொண்டு அறிவு பெறுவது. இவை இரண்டும் தவிர பிறவாயில்கள் இல்லை. இது வள்ளுவர் கருத்து. அறிவு பெறுதல் என்றால் தன்னிடத்தில் இல்லாத ஒன்றைப் பெற்றுக்கொள்வது என்பதில்லை. தன்னிடத்தில் இயல்பாக அமைந்த ஒன்றைப்புதுபித்துப் பட்டை தீட்டிக்கொள்ளுதல் என்று கூறலாம்.

காண்தலாலும், கேட்டாலும் அறிவைப் பெற்றான் என்றால், அவன் உள்ளத்தில் இயல்பாக அமைந்த அறிவடைதற்கான இயற்கைக்கூறுகள் உள்ளது. சிறத்தலாக்க் காண்டலாலும் கேட்டலாலும் சிறந்து வெளிப்பட்டுத்தோன்றின என்பதே கருத்தாகும்.

இந்த அடிப்படையில் சிந்திக்கின்ற நமக்கு, ஒரு மனிதன் முழுப் பகுத்தறிவாளராக வளர்ந்து சிறத்தற்கு வேண்டிய அவ்வளவு வாய்ப்புகளையும் வசதிகளையும் பெரியார் குறைவறப் பெற்றுச் சிறந்தார் என்று உறுதியாக முடிவுகு வரலாம். முழுப் பகுத்தறிவாளராக ஆவதற்கு பெரியாருக்கு இயல்பில் வந்தமைந்த வாழ்வின் எல்லை (Range) மிகப் பெரியது.

விரிந்து பரந்து விளங்கும் மனித வாழ்வின் கூறுகள் (Aspects) பலவாகும். நுண்ணறிவினரும் நிலையா நீந்தா அலையாழியாக விளங்கும் மனித வாழ்வுக்கூறுகளில் நிலைத்தும் நீந்தியும் வெளிப்போந்தவர்பெரியார் என்று கூறலாம்.

பெரியார் அளவுக்கு ஒருவர் கண்டும் கேட்டும் அறிவு பெற நிறைய செல்வம் வேண்டும். செல்வம் இருப்பவருக்கு மனித வாழ்வுக்கான பொதுக்காரியங்களில் ஈடுபடுதற்குரிய மனநிலை வேண்டும். செல்வமும் வாய்த்து மனநிலையும் அமைந்து விடுவதாக வைத்துக்கொள்வோம். பட்டன்-பதவி- செல்வம் போன்றவற்றில் பற்றற்ற மனநிலையும் இதன் காரணமாக நடுவு நிற்கும் உளத்திண்மையும் வேண்டும். யாம் மேலே குறித்த அளவுகோல்களைக் கொண்டு நம்நாட்டில் பொதுவாழ்வில் ஈடுபட்டோர் அனைவரையும் ஒவ்வொருவராக அளந்து பார்த்தால் ஒருவர் அல்லது இருவர் கூடத் தேறமாட்டார்கள் என்பது தெற்றென விளங்கும்.

இக்காலத்தில் தமிழ்நாட்டு அரசியலையும், இந்திய நாட்டு அரசியலையும் பதவிப் பித்தர்கள் படுத்தும்பாடு யாவரும் அறிந்த ஒன்றாகும். பதவி கிடைக்கும் என்றால் எதனையும் செய்யத்துணியும் எத்தர்கள் சூழ்ந்த இடமாக இந்திய நாட்டு அரசியல் விளங்குகிறது. பெரியார் கருத்தை மாற்றிக் கொள்ளுதல் என்பது பற்றிப்பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

“ஒன்றை ஒப்புக்கொள்ளுகிறேன். அதாவது நான் பல விஷயங்களில் அறிவுக்குறைவு உள்ளவனாக இருக்க்கூடும். பல தவறுகள் செய்திருக்கக்கூடும். பல கருத்துக்களை மாற்றியும் இருக்கின்றேன். இவைகள் எல்லாம் எனது கண்ணியமான அனுபவம் ஆராய்ச்சியைக்கொண்டே இருக்கமே தவிர, பணம் சேர்க்கவோ, பதவி பெறவோ, வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவோ, பெரிய ஆள் ஆகவோ, இழிவை மறைத்துக்கொள்ளவோ கடுகளவுகூடக் காரணம் கொண்டதாக இருக்காது”.

என்னைப்பற்றி….. என்ற பகுதியில் பெரியார் மேற்கண்டவற்றை எழுதியுள்ளார். இப்பகுதியில் தான் கருத்தை மாற்றிக்கொண்டதற்கும் -சுயநலக்கார்ர்கள் கருத்தை மாற்றிக் கொள்வதற்கும் உரிய காரணங்களைத் தெள்ளத் தெளிவாக விளக்குகிறார். தான் கருத்தை மாற்றிக்கொண்டதறகுக் காரணம் தன்னுடைய அறிவும், அனுபவமுமே என்றும் இதில் சுயநலம் கடுகளவு கூட இருக்காது என்றும் சொல்லிவிட்டார். பொதுவாழ்வில் ஈடுபட்ட சுயநலக்கார்ர்கள் எவை எவைகளுக்காக்க்கருத்தை மாற்றிக்கொள்ளுவார்கள் என்று பெரியார் வரையறுத்துச் சுட்டிக்காட்டும் திறம் வியக்கத்தக்கது. சுயநலக்கார்கள் அய்ந்து காரணங்களுக்காக்க் கருத்தை மாற்றிக் கொள்கின்றார்கள்.

1. பணம் சேர்க்க
2. பதவி பெற
3. வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள
4. ‘பெரிய ஆள்’ ஆக
5. இழிவை மறைத்துக்கொள்ள

இனி இவைகளுக்கு மேலே நம்மால் ஒருகாரணத்தையும் கூறமுடியாது. பொதுவாழ்வில் புகுந்துகொண்டு இன்று ஒரு கருத்து-நாளை ஒரு கருத்து என்று மாறிக்கொண்டு அலையும் பச்சோந்தி மனிதர்களைப் பெரியார் சுட்டியுள்ள இந்த அளவுகோல்கள் அய்ந்தில் அடக்கிவிடலாம்.

மனிதர்கள் தங்களுடைய சுயநலத்தின் பொருட்டுக் கருத்துக்களை மாற்றிக்கொள்ளும் காரணங்கள் அய்ந்து என்பதைப்பெரியார் சிந்தனையின் வழிநின்று கண்டோம். இதற்கு அடுத்த கட்டமாக அமைவதுதான் கட்சி மாறுதல் என்பது. பொதுவாழ்வில் ஈடுபட்டோர் பலரிடம் எளிதில் காணக்கூடிய ஒன்று. 1937 சனவரியில் ஒரு பொதுத் தேர்தல் நடந்தது. அதில் காங்கிரசாரும், நீதிக்கட்சியாரும் போட்டியிட்டனர். பெரியார் நீதிக்கட்சியாளரை ஆதரித்தார். தேர்தலின் முடிவு காங்கிரசாருக்குச சாதகமாக முடிந்தது. காங்கிரசை எதிர்த்து நின்ற எல்லாப் பெரிய மனிதரும் தோற்றனர். பெரியார் தேர்தலில் தலையிட்டது தவறு என்றனர். பலர் பொதுவாழ்வினின்றும் விலகினர். காங்கிரசில் சிலர் சேர்ந்தனர். அப்போது கட்சி மாறுகின்றவர்களைப்பற்றி பெரியார்ந எழுதியுள்ளார். இது அன்றைக்கிருந்த சூழ்நிலைக்கு எழுதியதுதான். ஆனால் கட்சி அரசியல் இந்த நாட்டில் உள்ளவரைக்கும் அழித்தெழுத வேண்டாத உண்மைகளாக உள்ளன. அவர் உரையினைப்பார்ப்போம்.

“இப்போது பலர் கட்சிவிட்டுக் கட்சி மாறுகிறார்கள். உத்தியோகம் பதவி வேண்டுமானால் காங்கிரசில் சேர்ந்தால்தான் கிடைக்கும் என்ற எண்ணத்தைச் சிலருக்குச்சமீபத்தில் நடந்த முட்டாள் தேர்தல்காட்டி விட்டதால், அவசரத்தில் யார் யாருக்கு பதவி வேண்டுமோ அவர்களும், பதவிகள் இல்லவிட்டால் யார்யாருக்கு மதிப்பும்,மரியாஐயும் இருக்காதோ அவர்களும் தங்களது வாழ்வுக்கு வேறு யோக்கியமான வழியில்லாதவர்களும் இப்போது காங்கிரசில் வேகமாச் சேர்ந்து வருகிறார்கள்.”

கட்சி மாறுகின்றவர்களை மூன்று வகைப்படுத்திப்பெரியார் எழுதியுள்ளார்.

1. அவசரத்தில் தனக்குப் பதவி வேண்டம் என்பவர்கள்.

2. பதவியால் மதிப்பும் மரியாதையும் பெற்றுப் பதவியில்லாவிட்டால் மக்களிடையே மதிப்பும் மரியாதையும் பெற இயலாதவர்கள்.

3. தங்களுடைய சொந்த வாழ்வுக்கு வேறு வழியில்லாதவர்கள்.

பெரியார் வரையறுத்துக் காட்டிய இந்த மூன்று உண்மைகளை இன்றைக்கும் கட்சி மாறியுளவர்களோடு ஒப்பிட்டுப் பாருங்கள். இன்று மட்டுமன்று கட்சி அரசியல் உள்ள வரைக்கும் இவைகள் நிலைத்த உண்மைகளாக விளங்கும். இப்படிப்பட்ட உண்மைகளைப் பெரியார் கூறியுள்ளமைக்கு காரணம் அவர் பதவி, பணம் போன்றவற்றுக்கு ஆட்படாது அப்பால் நின்று காண்பதால், அவர் அறிவுக்கு இந்த உண்மைகள் தோன்றுகின்றன. மேலும் பெரியார் அறிவும் அனுபவமும் பெறுதற்குரிய எல்லையின் விரிவைக்காண்போம்.

கடவுள் மத உணர்வுகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்னர்த் தோன்றியவை. ஆதிகால மனிதனின் அறியாமையும், அதனையொட்டி எழுந்த பயமும் பெற்றெடுத்த பிள்ளைகள்தாம் கடவுளும் மதமும், கடவுள் மதங்களை மூலமாக்க்கொண்டுதான் பல்வேறு வகையான மூடநம்பிக்கைகள் இடம் தோறும் பல்வேறு வடிவங்களில் விளங்குகின்றன. மன்னர்களும் செல்வர்களும் காலந்தொறும் இவைகளைக் கட்டிக்காட்டு வளர்த்து வந்தனர். இவ்வாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளர்ந்த கடவுள் மத மூடநம்பிக்கைகள் எல்லாமும் விளங்கு பிடமாகப் பெரியார் இல்லம் திகழ்ந்தது.

கடவுள் மத நம்பிக்கைகளின் எல்லா வகையான மாதிரிகளையும் (Specimen) பெரியாரின் வீட்டிலேயே நாள்தோறும் காணலாம். இவைகளைக் கட்டிக்காப்பதற்கு வேண்டிய செல்வ வசதிகள் பெரியாரின் தாய்-தந்தையர்க்குத் தாம் மேற்கொண்ட வாணிகத்தின் மூலம் பெருகிவிட்டன. கடவுள் மத மூடநம்பிக்கைகளை வளர்ப்பதில் வல்லமை பெற்ற பண்டிதர்கட்கும், புலவர்கட்கும், ஆச்சாரியர்கட்கும், புகலிடமாய்ப் பெரியாரின் இல்லம் திகழ்ந்தது. பல ஆண்டுகள் படித்தறிய வேண்டிய உண்மைகளைத்தமக்கே உரிய பகுத்தறிவின் உந்துதலால் அவர்களிடம் பலவகையில் கேள்விகள் கேடுக் கேட்டுத்த் தடைவிடையாடி அய்யமறத் தெரிந்துகொண்டார். “கற்றிலனாயினும் கேட்க”, “கற்றிற் கேட்டலே நன்று” என்ற உண்மைகள் பெரியார் வாழ்வில் பெரிய அளவில் அமைந்துவிட்டன என்று கூறாலாம்.

மேலும் இவருடைய கேள்வி ஞானம் கதாகாலட்சேபம் கேட்பது போல் இல்லை. தனைவிடையாடிய (Questions and Answers) வளர்ந்தமையால் அய்யம் என்ற ஒன்றுக்கு வழியே இல்லாமல் வளர்ந்து கொண்டே இருந்தது. இதனை வானொலிக்குப் பேட்டியளிக்கும்போது மாறன் என்பவர் கேட்ட கேள்விகளுக்கு பெரியார் கூறிய விடையில் காணலாம்.

ஊர் நாடு உலக அனுபவங்கள்

பெரியாரின் குடும்பத்தினர் மேற்கொண்டிருந்த பெரிய செல்வாக்குப்பெற்ற வாணிகத்தின்மூலமும், அவ்வாணிகச் செல்வாக்கால் தான் மேற்கொண்டு பார்த்த பல்வேறு பொது அமைப்புக்ள மூலமும், தான் வாழும் ஊர், தன்னுடைய ஊரைச் சார்ந்துள்ள ஊர்கள் ஆகியவைகளில் வாழும் மக்களின் இயல்புகளைத்தெள்ளத் தெளிவாக அறிந்துகொண்டார். இச்செய்திகளை ‘தமிழர் தலைவர்’ என்னும் நூலில் பெரியார் ‘என்னைப்பற்றி’ என்னும் தலைப்பில் எழுதியுள்ளமை கொண்டு நன்கு தெரிந்துகொள்ளலாம். இவர்களுடைய வாணிகம் தென்னாடு தழுவிய வாணிகம் ஆதலின் தமிழகத்தைச் சூழ்ந்துள்ள ஆந்திரம், கன்னடம், கேரளம் ஆகிய நாடுகளோடு தொடர்பு ஏற்பட்டது. அய்யாவின் தாய்மொழி கன்னடம், தெலுங்கு மொழியை நன்றாகப்பேசுவார். மலையாளமும் நன்கு பேசக்கற்றுக்கொண்டார். அய்யா அவர்கள் பேசும் மலையாளம் தமிழுடன் கலந்து விளங்கும். ஆனால் மலையாளம்பயின்றவர்கள்பெரிதும் வடமொழி கலந்து பேசுவதால் பொதுமக்கள் புரிந்துகொள்ளத்தயங்குவார்கள். ஆனால் அய்யாவின் தமிழுடன் கலந்த மலையாள மொழிபேச்சை அந்நாட்டு மக்கள் எளிதில் புரிந்துகொண்டனர். இதன் காரணமாக வைக்கத்தில் நடந்த மறியல்போர் பெரிதும் வெற்றிபெற்றது என்று எண்ண இடமுண்டு. திராவிட மொழிகளைப் பேசுவதில் பெரியாருக்கமைந்த திறைமையை “நாயகர் பெரியார்” -என்ற தலைப்பில் சிதம்பரம் என். தண்டபாணி அவர்கள், பெரியாரின் 86-ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா மலரில் எழுதியுள்ளமையால் அறியலாம்.

பெரியார் தம் 25-ம் வயதில் துறவுக்கோலம் பூண்டார். மூன்று அய்யர்களுடன் கூடிக்கொண்டு பிச்சையெடுத்துச் சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டு காசிவரை சென்றார். இப்பயணத்தால் பெரியாருக்கு நாடு தழுவிய அநுபவமும், புண்ணியத்தலங்கள் – தீர்த்தம்- துறவிகள் ஆகியவை பற்றிய தெளிவான பல உண்மைகளும் தோன்றலாயின.

இதனை ‘தமிழர் தலைவர்’ என்ற அய்யாவின் வரலாற்று நூலில் ‘துறவுக்கோலம்’ என்ற தலைப்பில் எழுதியுள்ள செய்திகளால் நன்குணரலாம்.

இவர் காங்கிரசில் சேருவதற்கு முன்னரே காங்கிரசு மாநாடு நடந்த இடங்களுக்கெல்லாம் தோழர்களுடன் சென்று வந்தார். 1919-லிருந்து 1925 முடிய காங்கிரசுத் தலைவர் -செயலாளர் – போன்ற பொறுப்புள்ள பதவிகள் பலவற்றை ஏற்றிருந்தார். இவர் காங்கிரசில் சேருவதற்கு முன்னும் பின்னும் அவ்வியக்கத்துக்காக செலவழித்த கைப்பணம் ஏராளம். காங்கிரசு இயக்கத்துக்காக அவர் வழங்கிய உழைப்பும் மிக அதிகம். இந்தியாவிலேயே கதர்த்துணிகளை மக்களிடத்துச் செல்வாக்குப் பெறும் நிலையில் விற்பனைக் கூடங்களை ஆங்காங்கு ஏற்படுத்தி முறைப்படுத்தியவர் பெரியார் என்பதை நாம் உணர வேண்டும்.

தமிழக காதி போர்டை நிறுவியவர் பெரியார். கதர்த்துணிகளை மூட்டையாக்க்கட்டித்தோளில் சுமந்து கொண்டு சந்தைகளில் சென்று விற்றுவந்தவர் பெரியார். கள்ளுக்கடை மறியலுக்காக தம் மனைவி நாகம்மை யாரையும், உடன்பிறந்தவரான கண்ணம்மாள் அவர்களையும் ஈடுபடுத்திச் சிறைக்கு அனுப்பியவர் பெரியார். இந்தியாவிலேயே தீண்டாமை ஒழிப்புப் போருக்காக நாடுவிட்டு நாடு சென்று மறியல் செய்து தாம் சிறைப்பட்டதோடு, தன்னுடைய மனைவியையும், தங்கையையும் ஈடுபடச் செய்தவர் பெரியார் மட்டுமே யாகும். காந்தியடிகள் தொடர்பும், காங்கிரசின் மிக மூத்த வடநாட்டுத் தலைவர்கள் தொடர்பும் நட்பும் பெரியாருக்கு அமைந்தது. இந்த வகையில் பெரியாரைப் போல ஆழ்ந்தகன்ற நுணுக்கமான அநுபவத்தோடு கூடிய அறிவைப் பெற்றவர் அலது பெறுதற்குரிய வாய்ப்பு வசதிகளைப் பெற்றவர் தமிழ் நாட்டில் அவர் காலத்தில் மட்டுமன்று, இப்போதும் இல்லையென்று கூறிவிடலாம். ஆகவேதான் சாதி-சமயம் சாத்திரம் புராணம் பற்றியோ காங்கிரசு இயக்கம் பற்றியோ பெரியார் கூறியுள்ள கணிப்புகள் மறுக்க இயலாத இன்றும் விளங்குகின்ற இயல்புகளைக் காணுகின்றோம்.

இவ்வளவோடு நில்லாது உலகநாடுகளில் ஓராண்டுக்காலம் சுறி, நல்ல புலமை அடைந்தார். இவ்வாறு பெரியார் அவர்கள் ஊரில் தொடங்கி நாடு பல கண்டு உலகளாவிய அரசியல் சமுதாய இயல்களைப்பற்றிய துய்ப்புணர்வுடன் கூடிய அறிவைப் பெற்றவரானார். பெரியார் அளவுக்கு விரிவான உலக வாழ்க்கை அனுபவம் பெற்றவர் இல்லை என்று கூறிவிடலாம். மனித வாழ்வின் எல்லா நிலைகளிலும் அவருக்கு நேரிடையான துய்ப்பறிவுண்டு. அரசியல், வாணிகம், இல்லறம், துறவறம், இவைப்பற்றி அய்யாவுக்கமைந்த தொடர்புகளை முன்னர்க்கண்டோம். இவை மட்டுமா? இன்னுங் காண்போம். அதிகாரிகள், பணக்கார்ர்கள் கூடிய உயர்ந்த உல்லாச வாழ்வின் உச்சியைக் காண்டவர் பெரியார். தாழ்ந்த குற்றவாளிகளுடன் கூடிய (Criminals) சிறை வாழ்வும் நன்கு தெரிந்தவர். சுருங்கச் சொன்னால், இயற்கை மனிதனுக்கு எங்கெங்கெல்லாம் வழிவிடுகின்றதோ அந்த வழிகளிலெல்லாம் தங்கு தடையின்றி அலுப்போ சலிப்போ இல்லாமல், மான அவமானம் பாராமல், நாணமும் கூச்சமும் கொள்ளாமல் முற்றச் சென்று முழுமையான அறிவைப் பெற்றவர் என்று கூறிவிடலாம்.

இதுகாறும் பெரியார் அவர்களுடைய இயற்கையறிவானது அனுபவம் பெறுவதற்கான வாய்ப்பு வசதிகளைப்பார்த்தோம்.

இனி, அய்யா அவர்களின் இயற்கையறிவைப் பற்றிச் சற்று எண்ணுவோம்.

பொதுவாகப் பெரும்பாலான மனிதர் எல்லோருக்கும் அமைந்த இயற்கை அறிவு முன்னால் ஒன்றைச் செய்துவிட்டுப் பின்னால் ஆர அமர இருந்து கொண்டு எண்ணும்போது -அய்யோ இப்படிச் செய்துவிட்டோமே! இப்படிச் செய்திருக்ககூடாதா? என்று வருத்தப்படும் அறிவுதான். இதனை வள்ளுவர் “என்றென்று இரங்கும்” அறிவென்பார். இப்படிச் செய்து விட்டோமே! என்று நாமே எண்ணி எண்ணி இரங்கும் அறிவு என்பது பொருள். நாம் ஒவ்வொருவரும் நமக்கமைந்த வாழ்வின் மிக்க் குறுகிய எல்லையில் செயல்படும் போதே பல தடவை நம்முடைய இரங்கும் அறிவுக்கு ஆட்பட்டிருக்கிறோம். நாம் இரங்கி வருந்தாத வகையில் கொண்டு செலுத்தும் திறம் நம்மறிவுக்கு அமையப் போவதில்லை.

அடுத்தாற்போல் தவறுபடாமல் செய்வோம்! செய்வோம் என்று நம்மை நானே தட்டிக் கொடுத்து கொண்டு மேலும் தவறுகட்கு ஆளாகிச் சாவதைத் தவிர நமக்கு வேறு வழியே இல்லை. அய்யா வழியில் சிந்திக்கின்ற நமக்கு உண்மையை அப்படியே ஒத்துக்கொள்வதில் தயக்கம் வேண்டுவதில்லை. உண்மையை ஒத்துக்கொள்ளாமல் மேலும் தவறுகட்கு ஆளாகி வருந்திக் கொண்டிருப்பதைவிட உண்மையை ஒத்துக்கொள்வதால் மேலும் தவறுகட்கு ஆட்படாமல் இருக்க வழியுண்டு என்பதை நாம் உறுதியாக நம்ப வேண்டும். இப்பொழுது பெரியாரைப் பார்ப்போம். நம்முடைய வாழ்வின் எல்லைக் கோட்டைவிடப் பெரியாருடைய வாழ்வின் எல்லைக்கோடு விரிந்தது.

நாம் செய்யும் தவறு நம்மையோ அல்லது நம் குடும்பத்தையோ பாதிக்கும். அவ்வளவுதான். ஏன்? நம்மில் பலர் அமைத்துக்கொண்டிருக்கு வாழ்வின் எல்லைக்கோடு எத்தகையது? அதனைப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் பின்வருமாறு பாடுவார். “தன்பெண்டு தன்பிள்ளை – சோறு வீடு சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டு” என்னும் எல்லைக்கோடுதான். ஆகவே நாம் செய்யும் தவறு நம்மையும் நம் குடும்பத்தையுமே பாதிக்கும். பெரியார் வாழ்வின் எல்லை என்ன? இதனை அவரே கூறுகின்றார்.

“ஈ.வெ.ராமசாமியாகிய யான்திராவிட மக்களைத் திருத்தி உலகிலுள்ள மற்ற மக்களைப் போலமானமும் அறிவும் உள்ள மக்களாக ஆக்கும்பணியில் ஈடுபட்டிருப்பவன்”….

பெரியார் தன்னுடைய அறிவு கொண்டு எடுக்கும் முடிவுகளில் தவறுபட்டால், அத்தவறு கோடிக்கணக்கான மக்களைப் பாதிக்கும். அத்தகைய பெரிய பொறுப்பில் பெரியார் அரைநூற்றாண்டுக் காலத்திற்கு மேலாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இவ்வளவு பெரிய காலப் பகுதியில் பெரியார் ஒருமுறைதான் வருத்தப்பட்டிருக்கின்றார். திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த திராவிட முன்னேற்றக்கழகத்தினர் திரு. இராசாசியைத் துணையாக்க் கொண்டு ஆட்சியைப் பிடிக்க மிக்க வேகத்தில் முயன்று கொண்டிருந்தனர். திரு . இராசாசியவர்களை ஆட்சியிலிருந்து விலக்கிவிட்டுக் காமராசர் வருவதற்கு வேண்டித் தம்மானவற்றையெல்லாம் பெரியார் செய்தார். அதில் வெற்றியும் பெற்றார். திரு. காமராசரும் அய்யா எதிர்பார்த்த வண்ணம் ஆட்சியை சீரும் சிறப்புமாக இனவுணர்வோடு நடத்திக் கொண்டிருந்தார். இதனால் அளவுக்கு மீறிக் காமராசரையும் அவர் தலைமையிலான காங்கிரசையும் ஆதரித்தார். அய்யா எதிர்பார்த்தது போலத் தொடர்ந்து இல்லாமல் காமராசர் பக்தவச்சலத்தை முதன் மந்திரியாக அமைத்துவிட்டு அனைத்திந்திய காங்கிரசின் தலைவராகப் போய்விட்டார். சிறிது காலப் பக்தவச்சலத்தின் ஆட்சி பெரியாரை மனம் இரங்கும்படிச் செய்துவிட்டது. அவரே பின்வருமாறு எழுதுகின்றார்.

“இன்றைய ஆட்சியின் (பக்தவச்சலம் ஆட்சி) பயனாய் நம் சமுதாயத்திற்கு எவ்வளவு கேடும் இழிவும் ஏற்பட்டாலும் அதை மனதார வெளியில் சொல்லி அழுது திருப்தி அடையக் கூட வாய்பில்லாத நிலையில் நான் காங்கிரசை ஆதரித்துத் தீர வேண்டியவனாய் இருக்கிறேன்.” இது ஒரு சாதாரண நிகழ்ச்சிதான். இதற்கே பெரியார் மிகவும் வருந்துகின்றார். மற்றபடி இவர் தமக்கே உரியதாக அமைத்துக்கொண்டு வெளியிட்ட கொள்கை கோட்பாடுகள் – பற்றிச் சொல்லிவிட்டோமே என்று வருந்தியதில்லை. சில சான்றுகளைப்பார்ப்போம்.

“கடவுளை கற்பித்தவன் முட்டாள்” இது பெரியார் உருவாக்கிய கொள்கை. இதனைக்கேட்ட அன்பர்கள் மிக்க் கடுமையா இருக்கின்றதே! கொஞ்சம் மென்மையாக இருக்கக் கூடாதா? என்று மற்றவர் சார்பாக்க் கேட்டனர். இதற்கு அய்யாவின் விடை என்ன? “நீங்க் சொல்லுவதற்கு முன்னர் முட்டால் என்று மட்டும் சொன்னேன். இனி இரட்டை முட்டாள் என்றுதான் சொல்லுவேன்” என்பது விடை.

இப்படிக் கூறவேண்டிய கருத்தையும் அவர் விளக்கிய பிறகுதான் இதிலுள்ள உணைமை புரிகின்றது.

“கடவுளைப் பற்றிக் கடவுள் பக்தர்கள் என்ன சொல்லுகின்றார்கள்? கடவுள் சுயம்புவாகவுள்ளவன். அதாவது தானாகத் தோன்றியவன் என்பதுதான். அப்படியிருக்க நான் கற்பித்தவன் அல்லதுத உண்டாக்கியவன் முட்டாள் என்றால் அவனுக்கென்ன நோக்காடு? நோக்காடு உண்டாக்குகிறது என்று சொன்னால் அவன் இரட்டை முட்டாள்தானே!” என்று விளக்குகின்றார்.

சிதம்பரத்தில் அய்யா பேசிக்கொண்டிருக்கிறார். “கோயிலில் உள்ள குழவிக்கல்லுக்கு மனிதர்களின் அரிய உழைப்பால் வந்த பொருளைக்கொட்டி வீணாக்கலாமா? இது பெரிய தவறல்லவா?” கூட்டத்தில் உள்ள பார்ப்பான் ஒருவர் கேள்வி கேட்கிறார். “கோவிலுள்ளது குழவிக்கல்தானா?” – என்று . “ஆம்! குழவிக்கல்லேதான்! இதிலென்ன உங்களுக்கு சந்தேகம்? என்னுடன் வாருங்கள்! இது கல் என்பதைக்காட்டுகின்றேன்” என்று கைத் தடியை எடுத்துக்ககொண்டு புறப்பட்டார். இதனைக்கண்ட அய்யர் ஒருவாறு சமாளிக்க எண்ணி, “அக்கல்லுக்கு மந்திர உச்சாடன் செய்யப்பட்டிருக்கிறது” என்று கூறினார். அதற்குப் பெரியார்-

“அப்படியா? கல்லுக்குமந்திர உச்சாடனம் பண்ணுவதால் சாமியாகுமானால், எதிரே உட்கார்ந்திருக்கும் இந்த மனிதருக்கு மந்திர உச்சாடனம் செய்து நீங்கள் சாமியாக்க வேண்டாம். சாமிக்கு முன்னால் நின்று செய்யும் பூசை அந்தணராகவாவது ஆங்குங்கள்” என்றார். அய்யர் பேசாமல் வாயடங்கிவிட்டார். இதனால் மனிதரில் புகுந்து மாற்றத்தைச்செய்ய இயலாத மந்திர உச்சாடனம் கல்லில் புகுந்து எப்படி சாமியாக ஆக்கும்? ஆகவே அது வெறும் கல்லே என்றே முன்பு சொல்லியதையே நிறுவிக் காட்டிய நுணுக்கத்தைக்காணுகின்றோம்.

“தமிழைப்பெரியார் காட்டுமிராண்டி மொழி” – என்று கூறினார்.

அதற்குப் பெரியாரை வைத்துக்கொண்டே ஒருவர் விளக்கம் சொன்னார். “இது பழங்காலத்து மொழி. ஆகவே பெரியார் அப்படிக்கூறினார்” என்று கூறினார்.

அதற்கு பெரியார் உடனே மறுப்புச் சொன்னார். “இலை, நான் இந்தக்கருத்தில் கூறவில்லை. குறைப்படுத்தித்தான் கூறினேன்” என்று கூறினார்.

வாழ்வுத்துறை முழுவதிலும் தமிழைப் பயன்படுத்த முடியவில்லை. மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கு அடிப்படையான அறிவியல்(Science) தமிழில் இல்லை. தமிழில் வணங்கவோ பூசை செய்யவோ தமிழ்நாட்டுக்கோயில்களில் தமிழ் பன்னெடுங்காலமாகப் பயன்படுத்தப்படவில்லை. திருமணம் போன்ற மனித வாழ்வின் சிறப்புக்கு அடையாளமாக மக்களால் கருதப்படும் சடங்குகளில் தமிழ் இல்லை. உயர் கல்வி கற்ற்ற்கும் உலகத்தோடு அளவளாவுதற்கும் தமிழ் பயன்படவில்லை. மத்த் தொடர்புடைய முழுக்க முழக்க பொய்யும் புளுகுமான சில பல இலக்கியங்கள் உண்டு. இவைகளை நல்ல பா வடிவில் இலக்கிய நயஞ்செறியப் பாடியுள்ளார்கள் என்பதில் வேறுபாடில்லை. இவைகளைக் கடந்த ஆயிரம் ஆண்டுகளாகப் பாடிப்பாடி உரை எழுதி விரிவுரையாகப் பேசி பேசி நாட்டு மக்கள் அடைந்த நன்மைகள் என்ன? தமிழில் உள்ள அறநூல்களின் அடிப்படையில் தமிழ்நாட்டில் சட்டங்கள் செய்து மன்னர்கள் ஆண்டார்கள் என்பதற்குச் சான்றுண்டா? தமிழில் உள்ள அறிநூல்களுக்கும் தமிழ்நாட்டு நீதிமன்றங்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எவ்வகையான தொடர்பும் இல்லையே! உரிமைபெற்ற வாழும் இக்காலத்திலாவது தொடர்புண்டா?

இவ்வாறாக மக்கள் வாழ்வுக்கு வேண்டிய மிகவும் கருதப்படும் கலைத்துறைகள் தமிழில் இல்லாத்தோடு, இருக்கின்றதாக்க் கூறப்படும், இலக்கியத் தொகுதிகளும் அறநூல்களின் அறவுரைகளும் தமிழ் மக்களின் வாழ்வில் சிறிதும் நல பயன்களை விளைக்கவில்லையே! உண்மைகள் இப்படியிருக்க இந்த உண்மைகளை உணர்ந்த தமிழ் அறிஞர்கள் தமிழ் மக்கள் இருக்கின்றார்களா? தமிழ் எல்லாம் உடைய மொழு போலவும் அதற்குத் தமிழ் மக்கள் செய்ய வேண்டியது ஒன்றுமில்லை என்பதுபோலவும் தருக்கிச் செம்மாந்து திரியும் பித்தர்களைதான் நம்மால் கணாமுடிகிறது. இச்சூழ்நிலையில் அவர்கட்கு விழிப்பை ஏற்பட்டதலே பெரியார் காட்டுமிராண்டி மொழி என்றார். குதிரையை ஓட்டச் சாட்டையைச் சொடுக்கினாலே போதும். எருமையை ஓட்டத் அங்குசத்தால் குத்த வேண்டும். உணைமைகளை உள்ளவாறு உணராது போலிப் பெருமைக்கு ஆட்பட்டு நெட்டுறக்கம் கொண்டவர்களை எழுப்புவது எப்படி? ஆகவே இவ்வாறு கூறினார் என்று நாமுணர வேண்டும்.

1947 ஆகஸ்ட் 15ல் நமக்குச் சுதந்திரம் வந்தது என்றார்கள். இமயம் முதல் குமரி வரை எல்லோரும் ஆடிப்பாடிக்கொண்டாடினார்கள். ஆனால் பெரியார் ‘துக்கநாள்’ என்றார்.

இந்த நிலையில் பல எதிர்ப்புகள் இருந்தும் பெரியார் தன்னுடைய நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. கடந்த 31 ஆண்டுகளாக நம்மவர் ஆண்ட முறையும் அதன் பயன்களையும் எண்ணும்போது பெரியார் சொன்னது உண்மை என்றே தோன்றுகிறது.

மனிதரில் இவ்வாறு வியக்கத்தக்க அறிவுத் தெளிவைப் பெரியார் பெற்றிருப்பதற்கு அவருடைய உடலமைப்பில் அமைந்த பஞ்ச பூதக்கூட்டுக்களுக்கும்பெரும் பங்கு உண்டு என்று கூறலாம்.

வைணவ நெறியில் ஆண்டாள் அம்மையாரின் வியக்கத்தக்க அறிவின் சிறப்பைக் கூறும்போது பின்வருமாறு கூறுவர். ஆழ்வார்கள் இறைவன் அருள் செய்த பிறகே மயர்வற மதிநலம் உடையவரானார்கள். ஆண்டாள் அப்படியில்லாமல், “தோன்றும் பொழுதே மணமுடன் தோன்றும் துளசிச் செடிபோல பிறவியிலேயே தமக்கு வேண்டிய அறிவுக்கூறுகள் அனைத்தையும் பெற்றுப் பிறந்தார்” என்று கூறுவார்கள். அது ஏற்றுக்கொள்ளக் கூடிய கூற்றாக இல்லையெனினும் உவமைக்காக இதனைப் போன்றே பெரியாரும் உலகம் வியக்கும் அறிவின் திறத்தைப் பிறவியிலேயே பெற்றுப் பிறந்தார் என்று கூறலாம். பெரியார் இவ்வாறு அறிவின் பிழம்பாக விளங்கும் இயல்பினைப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மிகத் திறம்படக்குறித்துப்பாடியுள்ளார்.

பெரியாரின் கொள்கைகளைப் பல படியாக பல கோணங்களில் விரித்துப் பல பாடல்களில் பாடிய கவிஞர், பெரியாரின் புகழ்ச்சிக்குரிய தனித்த இயல்புகளைக் குறித்து விரிவாகப் பல பாடல்களில் பாடாமல் குறிப்பிட்ட சில பாடல்களில்மட்டும் பாடியுள்ளார். அவற்றுள் ஒரு பாடலில் பெரியாரின் அறிவின் திறத்தைச்சுட்டிப்பாடியுள்ளார். தில்லையில் பெரியாரை நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் தில்லையில் பெரியாரை நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். இந்நிகழ்ச்சியை நம் புரட்சிக் கவிஞர் தில்லை சென்று கண்ணாரக் கண்டு அவர் உரையினைக் காதாரக் கேட்டு ளுமாரக் கருத்தினை அமைத்துக் கொண்டு ஊருக்குத் திரும்பினார். சிறப்புக்குரிய இச்செய்தியைச் சாகாவரம் பெற்ற இலக்கிய வடிவமாக ஆக்கினார் கவிஞர். இப்பாடலைத் தக்க இசையறிஞரைக் கொண்டு பாடச் செய்து இசைத்தட்டில் ஒலிப்பதிவு செய்துள்ளார்.

அக்கவிதையின் கருத்து வருமாறு:-

தில்லைக்கு பெரியார் வருவதை அறிந்த நாட்டுப்புறத்துத்தொழிலாளி ஒருவன் தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு பெரியாரைக் காணவும் உரை கேட்கவும் வந்தான். அப்படி வந்தவன் தன் மனைவிக்கு பெரியாரை அறிமுகப்படுத்திப் பேசுவதுபோல கவிஞர் இந்தப்பாட்டைப் பாடியுள்ளார். இது தொழிலாளி தன்னுடைய மனைவிக்கு பெரியாரை அறிமுகப்படுத்துவது மட்டுமல்ல. இப்படி பாடுவதன்மூலம் தமிழகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் பெரியாரை நன்கு அறிமுகப்படுத்தி பாடியுள்ளார் என்று நாம் எண்ண இடமுண்டு. கீழே உள்ள இப்பாடலை புரட்சிக் கவிஞரின் குயி ஏட்டில் காணலாம்.”

“அவர்தாம் பெரியார் – பார்
அவர்தாம் பெரியார்
அன்பு மக்கள் கடலின் மீதில்
அறிவுத் தேக்கம் தங்கத் தேரில் – அவர்தாம்”

இங்குநாம் ஆய்வதற்கு எடுத்துக்கொண்ட பெரியாரின் அறிவின் வன்மையை இப்பாட்டின் ஓரடியில் குறித்து விடுகின்றார். ஓரடி முழுமையாகவும் இல்லை. இரண்டு சொற்கள் “அறிவுத்தேக்கம்” – என்பதுதான். சொற்செட்டும் கருத்தாழமும் அமையப்பாடுவதுதான் கவிதைக் கலையின் முதிர்ச்சிக்கு அடையாளம் என்பர். புரடிசிக் கவிஞர் ‘அறிவுத் தேக்கம்’ என்று கையாண்ட சொற்றொடரால் பெரியாரின் அறிவு வன்மை, அறிவின் ஆழ்ம், அறிவின் பரப்பு முழுவதையும் சுட்டிக்காட்டும் திறம் வியக்கத்தக்கது. இக்காலத்தில் அறிவியல் முறைகொண்டு உலக நடைமுறைகளில் பெரிய பெரிய மாற்றங்களைச் செய்துள்ளனர். இதன் விளைவுதான் பெரிய பெரிய நீர்த்தேக்கங்கள். சிறிய அளவில் நீர் தேங்கி நிற்குமானால் ‘குளம்’ என்போம். நீர் இதனைவிடப்பெரிய அளவில் தேங்கி நிற்குமானால் தமிழில் ‘ஏரி’ என்று சொல்லுவோம். இதற்குமேல் பழைய இலக்கியங்களில் சொல் இல்லை. வழக்காற்றிலும் சொல் இல்லை. பல ஏரிகளைத் தன்னுள் அடக்கிக் கொண்டு விளங்கும் மிகப்பெரிய நீர்ப்பரப்பினை இக்காலத்தில் உருவாக்கிவிட்டனர். அதற்கு ஏரி என்ற பழைய சொல் போதவில்லை. ஆகவே புதிய சொல் தேவைப்பட்டது. அப்படிப் பிறந்த சொல்தான் நீர்த்தேக்கம் என்பது. Dam என்ற ஆங்கிலச் சொல்லால் குறிக்கின்றோம். இதனைப் போன்றே புதியொரு சொல்லமைப்பைத் தானே யாக்கிப் பெரியாரைச் சுட்டியுள்ளார். பெரிய அளவில் நீர் தேங்கியுள்ள இடத்தைக்காட்டும்போது நீர்த்தேக்கம் என்று சொல்லுகின்றோம். பெரிய அளவில் அறிவு தேங்கியிருக்கும் பெரியாரின் உருவத்தை ‘அறிவுத்தேக்கம்’ என்று சொற்றொடரால் குறித்தார். இதுவும் ஒரு சொல்லாக்கம் என்று கூறலாம்.(Coinage)

பெரியாரின் அறிவுத்திறத்தைச் சுட்டிக்காட்ட கவிஞர் கையாண்ட அடியின் கருத்து வருமாறு;

“அடி பெண்ணே! தேரில் அமர்ந்திருப்பது சாதாரணமாக நாம் காணும் மனித உருவமன்று. மிக்க பரப்பும்மிக்க ஆழமும் கொண்ட நீர்த்தேக்கம் போல மிக விரிந்தும் மிக ஆழ்ந்தும் விளங்கும் மனித அறிவு முழுமையாக நம்மதிப்பிற்குரிய அய்யாவின் வடிவில் விளங்குகிறது”-

என்ற கருத்துப்பட “அறிவுத் தேக்கம் தங்கத் தேரில் பார்” என்று சுட்டிக்காட்டுவது போலப்பாடியுள்ளார். இயல்பாகத் தமக்கமைந்த விரிந்து பரந்த ஆழமான துய்ப்புணர்வுடன் கூடிய கூர்மையான அறிவை முழுப் பகுத்தறிவுப் பிழம்பா ஆக்கிக் கூர்மையான அறிவை முழுப் பகுத்தறிவுப் பிழம்பாக ஆக்கிக் கொண்டார். அதனைப் பிறிதொரு உவமையால் காண்போம்.

புளியம்பழம் புளியமரத்தில்தான் தோன்றுகிறது. அது பழமாதற்கு வேண்டிய அவ்வளவையும் மரத்தோடு ஒன்றியிருந்து மரத்தினிடமே பெற்றுக்கொள்ளுகின்றது. மரத்தில் பழுக்கும் புளியம்பழத்திலன் முதல் வடிவம் மொட்டு பிறகு ‘பூ’ என்று கூறலாம். இதற்கு அடுத்த நிலை பிஞ்சு . ‘பூ’ பிஞ்சாகும்போது பூவின் இயல்பினின்றும் விடுபட்டு விடுகின்றது. அடுத்த நிலை காய். பிஞ்சின் நிலையிலிருந்து விடுபட்ட பிறிதொரு தோற்றமே காய் என்பது. பின்னர்காய் பழமாகின்றது. அப்போது காயின்தன்மைகள் பழத்தில் இல்லை. பழமாகும்போது தோலும் விடுபட்டு விடுகின்றது. இதற்கு அடுத்துத் தோலின் உள்ளிருக்கும் சதையும் அதற்கு அடுத்துச் சதையின் உள்ளிருக்கும் கொட்டையும், விடுபட்டு விடுகின்றது. கடைசியில் புளியங்கொட்டை மட்டும் தன்னந் தனியாக நின்றுவிடுகின்றது. புளியங்கொட்டையின் இயல்பைக் பார்த்தால்-மரத்தினின்றும் தோன்றிய மொட்டோடும், பூவோடும், பிஞ்சோடும், காயோடும தான் முற்றதற்கு வேண்டிய காலம் வரைக்கும் ஒட்டியிருந்து பின்னர் தன்னைப் படிப்படியாக விடுவித்துக் கொண்ட ஓரியல்பைக்காண்கிறோம்.

இதனைப் போன்றே பெரியாரும் ஏதோ ஒரு குறிப்பிட்ட ஊரில் குறிப்பிட்ட தாய், தந்தையருக்குப்பிள்ளையாப் பிறந்தார். பெற்றோர் தொடர்பு எல்லாம் உடையவர் போல விளங்கினார். இயல்பாகத் தனக்குள்ள துய்ப்புணர்வும் பகுத்தறிவும் மிகமிக எல்லாவற்றின் தொடர்பினின்றும் தன்னை விடுவித்துக் கொண்டார். முடிவில் உலகம் போற்றும் பகுத்தறிவுப் பிழம்பாக விளங்கினார்.

அறிஞரும், பொதுநலத் தொண்டருமான ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்கள் பெரிய பதவி பெற்று லண்டனுக்கு விமானத்தில்பயணமாகச் செல்லும்போது, ஓமான் கடலில் விழுந்து மாண்டார். அப்போது மனம் வருந்திய பெரியார் ‘குடி அரசு’ இதழில் தலையங்கம் எழுதினார்.

அத்தலையங்களம் அய்யா அவர்கள் உலகியலான பந்தபாசங்களினின்றும் விலகித் தூய பகுத்தறிவுப் பிழம்பாக விளங்கிய தன்மையைக் காட்டுகிறது.

“நமது உண்மைத் தோழரும், உற்ற துணைவரும் உள்ளும் புறமும் ஒன்றாய் இருப்பவரும், தமிழர் இயக்கதில் உறுதியான பற்றுக்கொண்டு அல்லும் பகலும் உழைத்து வந்தவரும், நம்மிடத்தில்களங்கமற்ற அன்பும் பற்றுதலும் விசுவாசமும் கொண்டிருந்தவரும், நினைத்தால் திடுக்கிடும்படி எதிரிகள் நெஞ்சில் எப்பொழுதும் திகிலை உண்டாக்கிக் கொண்டிருந்தவருமான அருமை பன்னீர் செல்வம் அவர்களை இன்று காலஞ்சென்ற பன்னீர் செல்வமென்றெழுத நேரிட்டதற்கு மனம் பதைக்கிறது. நெஞ்சு திக், திக் என்று அடித்துக் கொள்கிறது. மெய் நடுங்குகிறது. எழுதக் கையோடவில்லை. கண்கலங்கி மறைக்கின்றது.”

என் மனைவி முடிவெய்திய போதும், நான் சிறிதும் மனம் கலங்கவில்லை. ஒரு சொட்டு கண்ணீர் விடக்கவில்லை. என் தாயார் இறந்த போதும் – இயற்கைதானே! 95 வயதுக்கு மேலும் மக்கள் வாழவில்லையே என்று கருதலாமா? இது பேராசை அல்லவா என்று கருதினேன். 10 வயதிலேயே லண்டனுக்கு அனுப்பி படிக்க வைத்த ஒரே அண்ணன் மகன் – படித்துவிட்டு, இந்தியா வந்து சேர்ந்து சரியாக 20வது வயதில் இறந்து போனதற்காவும் பதறவில்லை. கதறவில்லை;

இவ்வாறு எழுதும் பெரியார் – மறைவி, தாய்- தந்தை, உற்றார்- உறவினர் என்ற பன்னீர்செல்வம் மனைந்ததை மிகவும் பெரிதாக்கிக்காட்டுகின்றார். பெரியார் கூறும் காரணத்தைக் காண்போம்.

“முன் சொல்லப்பட்ட மனைவி, தாய், குழந்தை ஆகியவர்களின் மறைவு என் தனிபட்ட சுக துக்கத்தைப் பொறுத்தது. தன்னலம் மறையும்போது அவர்களின் மறைவின் நினைவும் மறந்து போகும் பன்னீர்செல்வத்தின் மறைவு பொதுநலத்தைப் பொறுத்தது. தமிழர்களின் நிலையைப் பொறுத்தது. எனவே தமிழர்களைக் காணும்தோறும், நினைக்கும்தோறும் பன்னீர்செல்வம் நினைவுக்கு வருகின்றார். இது என்று மறைவது? இவருக்குப்பதிலாக யார்? என்றே திகைக்கின்ற்து. பாழாய்போன உத்தியோகம் சர்க்கரை பூசிய நஞ்சுருண்டை குத்திய தூண்டில் முள்ளாக இருந்தது. அம்முள்ளில் பட்ட மீனாக ஆகிவிட்டார் செல்வம்.”

இப்பகுதியில் பெரியார் மனநிலை புளியமரத்தின் புளியம்பழத்தில் உள்ள கொட்டை கொஞ்சம் கொஞ்சமாகப்பக்குவப்பட நிலையில் விடுபடுதல்போல, பந்தபாசம் களிலிருந்து படிப்பிடியாக விலகி உலகளாவும் உள்ளத்தைப் பெற்று பந்த்பாசங்கட்கு அப்பாற்பட்டபகுத்தறிவுப் பிழம்பாக ஆகிய தன்மையைக்காணலாம். இவ்வெடுத்துக்காட்டால் பெரியார்தமக்கே உரிய அறிவின் வன்மையால் சுற்றத் தொடர்புகளினின்று எவ்வெவ்வாறு விலகுகின்றார் என்பதை அறியலாம். அறிவின் துணைகொண்டு காலம் ஆக ஆகப் பற்று பாசங்களை விரிவுபடுத்தி மக்கள்நலம் நாட்டுநலம் என்ற் பெரிய நோக்கில் எத்துணைப் பெரியவர் சிந்தித்து செயல்பட்டனர்? எவ்வளவு படித்தவனும், எவ்வளவு துறந்தவனும், எவ்வளவு தியாகியும் சாகும்வரையில் தன்னுடைய பற்று பாசத்தை குடும்ப அளவிலேயே வைத்துவிட்டு மறைந்ததைத் தான் நம்மால் காணமுடிகின்றது.

பெரியாரின் பந்தபாசங் கடந்த நிலையை அவருடைய அறிவில்மட்டுமல்லாமல் வாழ்வின் நடைமுறைகிலும் நம்மால் காணமுடிகின்றது. அவருடைய சொத்துக்கள் முழுவதையும் கல்விக் கூடங்களாக ஆக்கி அதனைக்கண்டு மகிழ்ந்தார். இவைகட்குப் பக எஞ்சிய சொத்துக்களை நாட்டு மக்கள் அனைவருகும் நலம்பயக்கும் கருத்துக்களை விளக்கும் நாளிதழ்-கிழமையிதழ் நடத்துவதற்கும் மற்றும் பலவகையாக மக்கள் எல்லோருக்கும் பயன்படும் வகையில் எளிய விலையில் புத்தகங்கள் வெளியிடுவதுற்கும் அற்க்கட்டளைகளாக (trust) அமைத்தும் மறைந்த செய்தியை எண்ணிப்பாருங்கள்! தந்தை பெரியாரின் வழியே அன்னை மணியம்மையாரும் தமக்கென அமைந்தசொத்தை அறக்கட்டளையாக அமைத்ததோடு, தனக்குப் பிறுகு இவையெல்லாவற்றையும் நடத்துவதற்கு முற்றிலும் கொள்கை அடிப்டையில் பந்தபாசங்களுக்கு ஆட்படாமல் நமதுமதிப்பிற்குரிந பொதுச் செயலாளரை நியமித்திருப்பதும் அவர்களும்ம அய்யா வழியில் அன்னையார் வழியில் கழகத்தின்நடைமுறைகளைக் கொண்டு செலுத்திக் கொண்டிருப்பதும் உலக அதிசயங்களில்ஒன்றாகும். இவ்வாறு முழுமையான ஒருபகுத்தறிவு பிழம்பாக அல்லது வடிவமாக அதற்கேற்ற செயல்முறைகளோடுபெரியார் விளங்கியமையால் அவர் ஒரு முழுப்புரட்சியாளராக விளங்க முடிந்தது என்று நாம் திண்ணமாக நம்பலாம்.

முழுப்புரட்சியாளர் ஆதற்குரிய பிறிதொரு காரணம்

பெரியாரின் அறிவு வளத்தையும் அதனைக் கொண்டுசெலுத்தும் செயற்பாட்டு வளத்தையும் கண்டோம். முழுப்புரட்சியாளர் ஆதற்கு இவை இரண்டும் போதா. முழும்புரட்சியாளர் ஆதற்கு இவை இரண்டும் போதா. தன்னுடைய அறிவு வளத்தையும், செயற்பாட்டு வளத்தையும் புரட்சியில் கொண்டு செலுத்தும் துணிவும் பெரியாரிடம் மிகுதியும் சிந்திருந்தது. பெரியாருடைய துணிவு சாதாரணமாக எல்லோரிடமும் காணக்கூடிய ஒன்றாக இல்லை. யான் கண்டு வியந்த நிகழ்ச்சியொன்றை இங்குக் குறிப்பிடுகின்றேன்.

தஞ்சைக்கரந்தை தமிழ் சக்த்தில்பெரியார்கூட்டம்ஒன்று நிகழ்ந்தது. பெரியார் அதில்கலந்துகொண்டுபேசினார். பெரிய கூட்டம் நிறைந்திருந்தது. பெரிய கூட்டம் என்றால் அகாலத்தில்இருண்டு வகையான கூட்டம் திரண்டிருக்கும். ஒன்று அவரை ஆதரிக்கும் கூட்டம்.மற்றொன்று அவரை முழுமையாக எதிர்க்கும் கூட்டம். எதிர்க்கும் கூட்டம் அங்கு வருவதன் நோக்கம் பெரியாரின் பேச்சைக்கேட்க விடாமலும், பெரியாரைப் பேசவிடாமலும் செய்வதே அவர்களின்நோக்கம். நடுவில் ஒருவர் எழுந்து ஏதோ ஒரு கேள்வியைக்கேட்டார். இவர் பெரியாருக்கு எதிர் அணியினர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆகவே ஆதரவாளர்கள், “கேள்வி கேட்க்க் கூடாது உட்கார்!” என்று கத்தினர். கேள்வி கேட்க எழுந்து நின்றவரும் ஏதோ கேட்டுக்கொண்டே ருந்தார். கூட்டத்தாரின் இந்த இயல்பைக்கண நேரத்தில்பெரியார் புரிந்து கொண்டார்” சடக்கென ஆதரவாளர்களைப் பார்த்து பின்வருமாறு கூறினார்.

“உங்களை நம்பி நான் இங்கு வரவில்லை. என்னை நம்பியே வந்துள்ளேன். அவர் கேள்வி கேட்டால் கேட்கட்டும். நீங்கள் உட்காருங்கள்!”

-என்று அழுத்தமாகப் பேசினார்.

அவ்வளவுதான். பெரியாரின் ஆதரவாளரகள் அடங்கினர். அமைதி திரும்பியது. இது ஆச்சரியமல்ல. கேள்வி கேட்டவரும் அவர்களோடு உட்கார்ந்து விட்டார். கேளவி கேடகவில்லை. இறுதிவரை கூட்டம், அமைதியாக நடந்தது. இப்படியொரு துணிச்சல் யாருக்கு வரும்? தன்னைச் சார்ந்தவர்களை இப்படிப் பேசிப் பகைத்துக்கொள்ளுவார்களா? எதிர்ப்பாக உளவர்களைத்தான் குறைபடுத்தி நையாண்டி செய்து பேசுவார்கள். இதனால் கேள்வி கேட்டவர்மனம் புழுங்கி உட்கார்ந்திருப்பார்களே தவிர அவர்களின் மனம் இவர்களின் பக்கம், ஒருகாலும் திரும்பாது. பெரியாரின் எல்லையற்ற துணிவுதான் இவ்வாறு பேச்ச் செய்தது. இத்துணிவுக்கு அவருடைய எல்லையற்ற பகுத்தறிவுதான் காரணம் ஆகும்.

பெரியாருக்கு எதிர்ப்பாளர்கள் யார்?

பெரியாரை நன்கு புரிந்து கொண்டு, சுயநலத்தால் எதிர்ப்பவர்களைத்தான் எதிர்ப்பாளராக கருதுவார்.

சாதாரண மக்கள் எதிர்க்கின்றார்கள் என்றால், அவர்கள் நன்கு புரிந்து கொள்ளாமையால் எதிர்க்கின்றார்கள். அவர்களும் நன்கறிந்து கொள்ளுவார்களேயானால், தன்னை நிச்சயம் பின்பற்றுவார்கள் என்ற மானிட இயல்பில் திடமான நம்பிக்கை பெரியாருக்கு உண்டு. தன்னடைய கொள்கைகளில் எந்தவகையான சுயநலமும் இல்லை. எல்லோருக்கும் நன்மையளிக்கும் கொள்கைகளை நாம் சொல்லி வருகிறோம். ஆகவே அஞ்ச வேண்டிய தேவையில்லையென்று திடமாக நம்பினார். பேராசிரியர் எஸ்.சிவசாமி என்பவரும் தன்னுடைய “Patriarch Dravida Nad” என்னும் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

‘What is the Secret of the greatness of Periyar? First is his feariessness. He isnot afraid of any form of opposition. He is loyal to his principles. He belives ad uphold man’s basic rights”

பெரியாரின் துணிவுக்கு பிறிதொரு சான்றைக்காண்போம்.

பெரியார் அவர்களின் துணிவுபற்றி அவருடன் பொதுவாழ்வில் பல ஆண்டுகள் ஒன்றிநின்று உழைத்த பெரியாரின் உள்ள நண்பர் திரு.வி.க. அவர்கள் பெரியாரின் துணிவைப் பற்றிக்கூறியுள்ளார்.

“1924ல் நாயக்கர் மயிலாப்பூர் மந்தைவெளியில் ஒரு பிரசங்கம் புரிந்தார். அதற்காக 124 ஏ. பிரிவின்படி அரசு வெறுப்பு வழக்கு தொடரப்பட்டது. வழுகு விசாரணையின் பொருட்டு அவர் ஈரோட்டிலிருந்து சென்னைக்கு வந்திருந்தார்கள். நாளை வழக்கு விசாரணை. எத்தனை ஆண்டுகள் தண்டனை விதிக்கப்போகின்றார்களோ என்ற கவலை எனக்கு. இரவு உண்டிக்குப் பின் பாலசுப்ரமணி பக்த ஜன சபையின் வெளித் திண்ணையில் படுத்திருந்தோம். நாயக்கர் கவலையின்றி குறட்டைவிட்டுக கொண்டு தூங்குகிறார். நடு இரவில் விடாமழை பெய்த்து. குளிர்காற்றும் வீசியது. நான் எழுந்து உட்கார்ந்து கொண்டேன். நாயக்கர் அப்பொழுதும் கவலையின்றி உறங்குவதைக் கண்டேன். அவருடைய மனம் இரும்பு மனம் என்றுநினைத்தேன். காலையில் எழுந்ததும் “இரவில் மழை பெய்த்து தெரியுமா?” என்றேன். “தெரியாது நன்றாய் தூங்கிவிட்டேன்” என்று சொன்னார். அப்பொழுதுதான் நாயக்கரின் அஞ்சா நெஞ்சத்தை அறிந்தேன். துன்பத்தைப் பற்றிக் கவலைப்படாத வீரத்தையும் உணர்ந்தேன்” என்று திரு.வி.க குறித்துள்ளார். தோழர் ‘சங்கமித்திரா’ அவர்கள் பெரியாருடைய துணிவைப்பற்றி பின்வருமாறு எழுதுகின்றார்.

“துணிவு-மனித இனத்தில் லட்சத்தில் ஒருவரிடம்கூடக் கோடியில் ஒருவரிடம்கூட பார்க்கமுடியாத துணிவு-துன்பமேற்று, தன்னை மறுத்து, இயற்கையின் முதல் த்துவமான சொந்தப் பாதுகாப்பு என்ற த்துவத்திற்கே சவாலாக அமைந்த அவருடைய துணிவு உலகத்தில் மிக அரிதாக டக்கின்ற அதிசயங்களில் ஒன்று. “The Courage and abneigationn and self denial that Challenged even the first law of nature”

தோழர் சங்கமித்ரா குறித்துள்ள குறிப்பு விருதுநகரில் உண்மையாக நடந்தது என்று ஒரு நிகழ்ச்சியை பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி அவர்கள் “இதோ பெரியாரில் பெரியார்” என்ற தலைப்பில் பேசிய பேச்சில் குறித்துள்ளார். இத்தலைப்பிலேயே சிறு புத்தகமாகச்சுயமரியாதைப் பிரசார நிறுவனதால் வெளியிடப்பட்டுள்ளது.

கடவுள் மத மூடநம்பிக்கையகளில் சிக்கிச் சீரழியும் மக்களின் இயல்புகளைக் கடுமையாக சாடிப் பெரியார் பேசிக் கொண்டிருந்தார். இவ்வுரையைக்கேட்டு, பக்தன் ஒருவன் மனம் பொறுக்காதவனானான்.

அவன் உடனே ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு ஓடி வந்தான். பெரியார் அவனைக் கவனித்துவிட்டார். மற்றவர் அவ்வளவாக முதலில் கவனிக்கவில்லை.

பெரியார் ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருந்தார். குத்த வந்த வெறியனின் கையைப் பிடித்துக்கொண்டார். பிறகு மக்கள் அவனை நோக்கி “அடி!, உதை!!” என்று ஓடிவந்தனர். பெரியார் என்ன செய்தார்? அவனை அடிக்கவும் விடவில்லை. உதைக்கவும் விடவில்லை. அவனை அப்படியே நாற்காலியில் சிறிது நேரம் உட்கார வைத்துவிட்டுப் பிறகு வேண்டியவர்களைக் கொண்டு அவனை அவனுடைய வீட்டுக்கு அழைத்துப் போகச்சொன்னார். மற்ற பெரிய மனிதரானால், போலிசில் பிடித்துக் கொடுத்திருப்பார்கள். அல்லது அடிக்க, உதைக்கச்சொல்லி வேடிக்கை பார்த்திருப்பர்கள். இங்கு பெரியாரின் மனநிலை என்ன? நாம் இங்கு சிந்திக்க வேண்டும். இவன் அறியாமையால் வெறிகொண்டு ஓடிவருகின்றான். உண்மையில் நம்மீது பகைமை உணர்வு கொள்ள ஒரு நியாயமும் இல்லை. நாம் சொல்லும் உண்மைகளைச் சற்று ஆர அமர இருந்து சிந்திப்பானாயின் அவன் நமக்கு அல்லது நம் கொள்களைகட்குப் பக்தனாக மாறிவிடுவான் என்று திடமாக நம்பினார். இத்தகைய மானிட இயல்பில் பெரியாருக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது. இதனைச்சுட்டிப்பேசிய பெருந்தகை அழகிரி அவர்கள், “இதனால்தான் தந்தை பெரியார அவர்கள் பெரியாரில் பெரியாராக விளங்குகிறார்.” – என்று பேசியுள்ளார்.

தெரியாத அல்லது அறியாத மக்கள்தான் எதிர்த்தனர் என்பதில்லை. புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரே இவ்வுண்மையை ஒத்துக்கொண்டு அழகாகக் பாடியுள்ளார்.

‘எமையகத்தும் புறத்தினிலும் திருத்துதற்கே
எம்பெருமான் சொன்ன தெல்லாம்
இமயமலை இல்லையென்று சொன்னதுபோல்
எண்ணினோம் பின் தெளிந்தோம்.”

எண்ணங்களிலும் நம் வாழ்வில் திருத்தமில்லை, எண்ணங்களையொட்டிய புறவாழ்விலும் திருத்தமில்லை. நம்மை நாமே தாழ்த்திக்கொள்ளும் எண்ணங்களையும், செயல்களையும் உடையவராக வாழ்ந்தோம். இந்த இரண்டிலும் நம் நாட்டு மக்கட்குத் திருத்தம் வேண்டும் என்று நோக்கில்தான்பெரியார் பேசினார்-எழுதினார். ஆனால் முதலில் நாம் இதனை உணர்ந்து கொளவில்லை. பெரியார் கூறிவரும் உண்மைகள் முதில் எமக்கு எப்படித்தோன்றியது? எல்லோருமறிய உலக மலைகளிலெல்லாம் உயர்ந்தும், நீண்டும் நிலைத்தும் விளக்கமுற்றுத் தோன்றும் இமயத்தை ஒருவன் இல்லையென்று சொன்னால் எப்படியோ அப்படி இருந்தது என்று கூறுகின்றார். கடவுளும் மதமும் இவைகளையொட்டிய மூடப்பழக்க வழக்கங்களும் இமயமலைபோல மக்களிடையே நின்று நிலைத்துப்போன உண்மைகள். இவைகளை இல்லையென்றோ, அழிக்கவேண்டுமென்றோ, கைவிடவேண்டுமென்றோ பெரியார் கூறும்போது புரட்சிக்கவிஞர் போன்றவருக்கே இவ்வாறுதோன்றுமானால் மற்ற மக்களைப்பற்றி நாம் என்ன கூறமுடியும?

பெரியார் ஒரு முழுப்புரட்சியாளர்:

மற்றொரு சான்று:-

குடி அரசு இதழுக்கு 16வது ஆண்டு தொடங்குகிறது. குடி அரசின் 15 ஆண்டுகாலம் எவ்வாறு கழிந்தது என்று எண்ணுகின்றார். கடந்த காலத்தில் குடி அரசுக்கெதிராக பெரியாருக்கெதிராக எழுந்த எதிர்ப்பலைகள் ஒன்றன்பின் ஒன்றாக நினைவிகு வருகின்றன.

கடந்த காலம் இப்படி என்றால், இனி எதிர்காலம் எப்படி இருக்கும்? கடந்த காலத்தில் முழுமையாக நாம் நினைக்கின்ற அளவுக்கு நம்முடைய கருத்துக்களைக் கூறவில்லையே! இதற்கே இவ்வளவ எதிர்ப்பா? இனி நம்முடைய கருத்துக்களை முழுவதுமாக நம்முடைய போக்கில்நாம் ‘குடி அரசு’ இதழ் வாயிலாக எழுதி வெளியிட்டால் அல்லது மேடைகளில் பேசினால் அதன் விளைவு எப்படியிருக்கும் என்று எண்ணுகின்ற பெரியார் பல்வேறு வகையான துன்பங்கள் தமக்கென காத்துக்கிடப்பதை உணருகின்றார். அந்த உணர்வுகளை ஒன்றன்பின் ஒன்றாக ‘குடி அரசு’ இதழின் 16 ஆவது ஆண்டில் தொடக்க இதழில் ஆசிரியர் உரையில் எழுதுகின்றார். இதோ அவருடைய எழுத்து பின்வருமாறு செல்லுகின்றது.

“பயங்கரமான பாதை!
பயமா அது என்னை என்ன செய்யும்?
சறுக்கு நிலம்! சந்திரனில்லா இரவு!!
காலை ஊன்றி நடப்பேன்! கண்ணை அகலதிறந்து பார்ப்பேன்!!

பசியும் தாகமும் வாட்டும்
கிடைத்ததைப் புசிப்பேன்
புதர்களிலிருந்து பலர் வெளிவந்து தாக்குவர்!
நான் கோழையல்ல!!

உனக்குமுன் பலர் இப்படித்தான் சென்று மாண்டனர்!!
நானும் அந்த வழியே செல்லுகிறேன்.
உயிர் வெல்லமல்ல.

நீ வெளி அடைவது கஷடம்!
நாம் என் கடமையை செய்கின்றேன்.

மேலே கண்ட குடி அரசு இதழில் தலையங்கத்தின் ஒரு பகுதியைக் கீழே நாடக உரையாடல் முறையில் பேசுகிறேன்.

வேறுகுரல்: பெரியாரே, வணக்கம்! குடிஅரசு இதழோடு 15 ஆண்டுகள் எப்படியோ கடந்து வந்துவிட்டீர்! இனி நீர் செல்ல இருக்கும்பாதை எளிமையும் இனிமையும் கலந்த்தல்ல! அது துன்பமும் சோகமும் கலந்தது. “பயங்கரமான பாதை!”

பெரியார்: ஓ! அப்படியா! பயமா? அப்படியொரு உணர்வு என்னுள்ளத்தில் இல்லையே! அப்படியே நீ சொல்வது என்னை நோக்கி வருமானால் அந்த பயத்துக்கே பயத்தை உண்டாக்குவேன். ஆகவே அது என்னை என்ன செய்யும்?

வேறுகுரல்: அப்படியா! பெரியாரே! நீ செல்லும் பாதை சேறும் சகதியும் அழுக்கும் பாசியும் அடர்ந்த சறுக்கு நிலமாயிற்றே, அது உம் கண்ணுக்குத் தெரியவில்லையா?

பெரியார்: ஆம்! உண்மைதான்! தெரிகிறது. நான செல்லும் பாதை சறுக்கு நிலம்தான்! வழுக்கும் நிலம்தான்! ஆயினும் என்ன? காலை நன்றாக ஊன்றி நடப்பேன்.

வேறுகுரல்: அப்படியா! பெரியாரே! காலை ஊன்றியா நடப்பீர்! இம்…! நீர் செல்லும் நேரம் பகல் இரவுக்காலம்! நிலவுக்காலமல்ல! அடந்த இருளோடு கூடிய இரவுக்காலம்!

பெரியார்: இம்..! ஆயினும் என்னழ என் கண்களை அகலத்திற்நுத பார்க்கின்றேன். நன்றாகத் தெரியும்.

வேறுகுரல்: ஊன்றி நடப்பீரா? கண்ணைத் திறந்து பார்ப்பீரா? உமக்கு உடலில் வலுவிருந்தால்தானே ஊன்றி நடப்பீர்! நீர் செல்லும் பாதையில் உண்டும் உணவு கிடைக்காது! அதமட்டுமல்ல! பருக்கும் நீரும் கிடைக்காது! உணவும் நீரும் இல்லையென்றால் உடம்பில் வலு ஏது ஊன்றி நடக்க-கண்ணைத்திறந்து பார்க்க!!

பெரியார்: தெரியும் அன்பரே! சமைத்து உண்ணும் உணவுதான் உணவா? காயும் கனியும் இலையும் தளிரும் உணவில்லையா? நீரில்லா நிலமேது? ஆகவே கிடைத்ததைப் புசிப்பேன்! கழுள்ள நீரைக் குடிப்பேன்.

வேறு குரல்: சரி… சரி… இவை இருக்கட்டும். உமக்கு .. ‘பகை’ உண்டே! அது தெரியுமா? அந்தப் பகையென்ன முறையான பகையா? முறையுடன் உம்மை எதிர்க்க அறியாமை உடையவர் ஒருபுறம் அதன் விளைவால் ஆத்திரப்பட்டோர் ஒருபுறம்! இது மட்டுமல்ல அன்பரே! உட்பகையும் உமக்கு உண்டு! அறியாமையால் ஆத்திரப்பட்டோர் பகையும், இலேசல்ல.. அன்பரே! அவ்விரு பகையும் ஒன்று சேர்ந்த்ல் அது வெளிப்படையாக வராது. காலம் வயாக்கும்போது புதருக்குள்ளிருந்து புறப்பட்டுப் பலராக வந்துதான் தாக்கும். அதை சமாளிப்பது எப்படி?

பெரியார்: மறைந்து நின்று காலம் வரும்போது வெளிவந்துதானே தாக்கும்? தாக்கட்டும். நான் ஒன்றும் கோழையல்ல! அவர்களைப் போல….!

வேறுகுரல்: பெரியாரே! உமக்கு அறிவிருக்கின்றது. ஆற்றல் இருக்கின்றது. அஞ்சாமைக் குணமும் இருக்கின்றது! ஆனால் நீர் வெள்ளை மனிதர்! வெளிப்படையானவர். சூழ்ச்சி அறியாதவர்! உம்மைப்போல அறிவும் – ஆற்றலும் அஞ்சாமையும் இருந்தும் சூழ்ச்சியில்லாமையால் மாண்டோர் வரலாறு உமக்குத்தெரியுமா?

பெரியார்: தெரியும்…! நன்றாகத் தெரியும். பொறாமையும் சூழ்ச்சியும் அறியாமையும் வெல்லுமா? அது அந்தக் காலம்! இப்போது அப்படி அல்ல- இது அறிவு ஆட்சி செய்யும் காலம். ஆபத்து ஒன்றும் வராது. வந்தாலும் அதுவும் எனக்கு வெற்றிக்கு வழியாகவே முடியும். ஆகவே நானும் அந்த வழியிலேயே செல்லுகின்றேன். எனக்கு உயிர் ஒன்றும் வெல்லமல்ல!

வேறுகுரல்: என்றாலும் நீர் வெற்றியடைவது கஷ்டம், முடியாது.

பெரியார்: வெற்றியா? அடைவது கஷ்டமா? வெற்றி ஒன்றையே விரும்புவது வீரனுக்கு அழகல்ல. வீழ்ச்சியும் வரட்டும். ஆனால் முறைப்படி கடமைகளைச் செய்தால் வீழ்ச்சி வராது. வெற்றிதான் வரும். ஆகவே நான் என் கடைமையைச் செய்கிறேன்.

வேறுகுரல்: பெரியாரே! உம்முடைய உள்ளம் இப்போது தான் நன்றாகப் புரிகிறது. உண்மையும், அஞ்சாமையும் தியாகமும் கலந்த உமது வாழ்வு – நேர்மையும், நீதியும் விரவிய உமது கோட்பாடுகளை உலகில் நிலைநிறுத்தியே தீரும். நீர் உடலால் அழிந்தாலும் உயிருள்ள உண்மையுள்ள உமது கோட்பாடுகள் உலகில் நிலை பெறும். நிலைபெற்றெ தீரும். நீர் உமது வழியில் செல்க! வெற்றி பெறுக! வாழ்க!

பெரியார் தன்னுடைய உரையாலும் கருத்தாலும் ஊரவரறிய நாட்டவரறிய புகழடைந்த காலம் மனித வாழ்வின் பிற்பகுதியே ஆகும். அவர் கையில் தலைப்பக்கம் வளைந்துள்ள பிரம்புத்தடியுடன் உலவிய காலம்தான் ஊரவரும், நாட்டவரும், உலகவரும் ஒக்க அறிந்த காலமாகும். பெஇரயாருடைய உடல் – உள்ளம் உரை இவை எல்லாமும் ஒன்றாக்க் கூடிய தோற்றம் (Personality) கோடிக்ணக்கான மக்களில் அறவே வேறுபட்டு தோன்றக்கூடியவை. நம்மில் பலரை ஒருசிறிய கூட்டத்திலும் சடக்கென்று கண்டுகொள்ள முடியாது. நம்மை தேடித்தேடி பார்த்துத்தான் கண்டுபிடிக்க வேண்டும். உலக வழக்கில்கூட இத்தகைய பேச்சை நாம் கேட்டிருக்கின்றோம்.

“அடேயப்பா! உன்னை எவ்வளவு நேரமா தேடுகின்றேன்! நீ இங்கேதான் இருக்கிறாயா?

“ஆம்! நான் இங்கேதான் இருக்கின்றேன். நாம் என்ன மறைத்துக் கொண்டா இருந்தேன்? வெளியில்தான் இந்தக் கூட்டத்தில் சுற்றிக்கொண்டு இருந்தேன்.”

“அப்பா உன்னைக் கண்டுபிடிக்க இவ்வளவு நேரம் ஆயிற்றே!”

இவ்வாறு பேசும் உரைகளை நாம் பலமுறை பல கூட்டங்களில் கேட்டிருக்கின்றோம். இப்பேச்சு என்ன உண்மையைக் காட்டுகிறது.? எல்லா மனிதர்களைப் போலவே நம்முடைய உடல் உருவ அமைப்புக்கள் இருப்பதால், சட்டென்று கண்டுபிடிக்கமுடியவில்லை. செம்மறி ஆட்டுக் கூட்டம் மொற்உ போகின்றது. அக்கூட்டதில் குறிப்பிட்ட ஒரு ஆட்டைப்பிடித்து ஒருவருக்குக் காட்டிவிட்டு பிறகு அந்த ஆட்டை ஆட்டுக்கூட்டத்தினுள் விட்டுவிட்டால், அந்தக் குறிப்பிட்ட ஆட்டைப் பார்த்தவரால் காட்ட முடியாது. ஆடு மேய்ப்பவனால் கூடக்கண்டுபிடிக்கமுடியாது. ஆட்டுக்காரன் எண்ணிக்கையை கொண்டுதான் ஆட்டு மந்தையைக் காப்பாற்றுகிறான். ஒவ்வொரு ஆடாக அடையாளங் கண்டல்ல. இந்த உண்மையை நான் நன்கு அறிவேன்.

இந்த செம்மறியாட்டுக் கூட்டம்போல் நாம் இருக்கின்றோம். ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் , பெரியார் தன்னுடைய கைத்தடியோடு நடந்து வருகின்றார் என்று வைத்துக்கொள்வோம். உடனே அவரைக் கண்டு கொள்ளலாம்.

காரணம், நம் எல்லோரையும் போல அவருடைய உருவ அமைப்பு இல்லை என்பதுதான். கோடிக்கணக்கான மனிதரில் அவர் உள்ளம் தனிப்பட்டது. அவர் சிந்தனை தனிப்பட்டது. அவர் உரை தனிப்பட்டது. இந்த இயல்புகளைத் தாங்கி நிற்கின்ற அவர் உருவமும் தனிப்பட்டது. மனிதர் வாழும் எந்த இடத்திலும், எந்த ஊரிலும், அவரை ஒளித்து வைக்க முடியாது. ஞாயிற்றை மறைத்து வைக்கமுடியுமா? இங்களைமறைத்து வைக்கமுடியுமா?

இத்தகைய உருவத்தின் இயல்பை, அவர் உள்ளத்திலும் காணலாம். உரையிலும் காணலாம். அவர் உள்ளத்தில் எதையும் அஞ்சி-கெஞ்சி -நாணி-கோணி மறைத்துவைக்கும் எண்ணங்கள் இல்லை. உரையிலும் அப்படியே. எல்லாம் வெளிப்படையானவைகளே! வெள்ளிடை விலங்கல் போலவும், உள்ளங்களையில் நெல்லிக்கனி போலவும், அய்யந்திரிபிற்கிடமின்றி அப்பட்டமாகத் தோன்றக்கூடியவைகளே!

மேற்காட்டிய இவைகள் எல்லாம், தனிப்பட்ட வகையில், பெரியாருக்கு அமைந்த இயல்புதான். காரணம் அவைகளெல்லாம் பெரியாரோடு உடன்பிறந்து, உடன் வளர்ந்து, உடன் சிறந்தவைகள். என்ன ஆச்சரியம்? அவருடைய கைத்தடியுமா தனிச் சிறப்பிற்குரியதாக வேண்டும்! எனக்கும் 58 வயது ஆகிறது. எந்தப் பெரிய மனிதரும் பெரியார் வைத்திருந்த கைத்தடியைப் போல கைத்தடியை வைத்துக்கொண்டிருக்கப் பார்த்ததில்லை. ஒருமுறை பெரியாரே என்னிடம் கூறினார். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

“காரில் பயணம் செய்யும்போது தருமபுரி பக்கத்தில் என்னுடைய கைத்தடி நழுவி விழுந்துவிட்டது. அதனை எடுத்தவர்கள் என்னுடைய தடிதான் என்பதை அடையாளமே தெரிந்து கொண்டு திரும்பிக் கொடுத்துவிட்டார்கள்” என்றார்.

இதிலும் எனக்கு சில எண்ணங்கள் எனக்குத் தோன்றுகின்றன. பெரியாருடைய கைத்தடியை எடுத்தவர் பெரியாருடைய தடிதான் என்று அடையாளங்கண்டு, பெரிஆர்மீது வைதுள்ள பற்றால், கொடுத்திருக்கலாம். அல்லது இதக் கைத்தடியை ஊன்றிக் கொண்டு எந்தச் சிற்றூரிலும் எந்தப் பேரூரிலும் நடமாட முடியாது. எதிர்ப்டுகிற எவனும், எவளும் இது பெரியார் கைத்தடி! உனக்கு எப்படி கிடைத்தது? என்று கேட்டு விடுவார்கள். ஆகவே, இது நமக்குப்பயன்படாது. பெரியாரிடத்திலேயே கொடுத்து விடுவோம் என்றும் கொடுத்திருக்கலாம்.

இத்தகைய சிறப்புக்கள் பெரியாருடைய கைத்தடிக்கும் இருப்பதால், பெரியார் மட்டுமல்லாமல், அவருடைய கைத்தடியும் புலவர்பாடும் புகழுடையதாக ஆயிற்று. பெரியாரின் 86-வது ஆண்டு மலருக்குப் பாடல் எழுத எண்ணுகின்றார் கவிஞர் கண்ணதாசன். உடனே பெரியார் கைத்தடியை ஊன்றிக்கொண்டு, வருகிற தற்றம் மனக்கண்முற் புலனாகின்றது. பெரியார் வருவதற்கு முன்னே “யானை வரும் பின்னே! மணியோசை வரும் முன்னே!” என்பார்களே. அதுபோல பெரியாருடைய கைத்தடி தோன்றுகின்றது. பெரியார் மட்டுமோ?-அவர் கொள்கைகள்-கோட்பாடுகள் -நடைமுறைகள் மட்டுமே கவிஞனுக்குக் கவர்ச்சிப் பொருளாகப் படவில்லை.

அவர் கைத்தடியும், தனிச் சிறப்பிற்குரியதுதான் என்பதைக் கவிஞனில் உள்ளம் உணர்கின்றது. கைத்தடியிலிருந்தே பாட்டுத் தொடங்குகின்றது. அவர் வரும்போது பெரியாரின் முதுமையால் கையசைய, கையோடு கொண்ட தடியும் அசைகின்றது. இதனைக் கண்ட கவிஞன் காலம் விளைவிக்கும் கோலம் இது என்று எண்ணுவதற்கு முன்னே பெரியாரின் உள்ளம் தோன்றுகின்றது. எல்லா உயிர்களையும், ஒக்கப்பற்றி, தன்னுடைய சுவடுகளைப் பதிக்கும் காலத்துக்கும், பெரியாருடைய உள்ளத்தைப் பற்றி முதுமையாக்க முடியவில்லை. அது முன்னிலும் அனுபவம் ஏற ஏற ஆற்றல் பெற்று துளக்கலாகா மலைபோல இளமைத் துடிப்புடன் விளங்குவதைக் கவிஞர் உணருகின்றார். இந்த உணர்வுகள்தான் பாடலின் முதல் இரண்டு அடிகளாக வருகின்றன.

“ஊன்றிவரும் தடிசற்றே நடுங்கக்கூடும்
உள்ளத்தின் உரத்தினிலே நடுக்கமில்லை!”

முதலில் கைத்தடியைக் கண்டு, பிறகு அதனைப்பற்றியுள்ள வகையையும் கண்ட கவிஞர், அதன் வாயிலாகப் பெரியார்-எனக்கண்டு அவர் உடல் முழுவதையுமே பார்க்கின்றார். அந்த உடலிலும் காலம் விளைக்கும் கோலமான நடுக்கத்தைக்காணுகின்றார்.

ஓ! காலமே! எங்கள் பெரியாரின் உடலையும் பற்றி நடுங்க வைக்கின்றாயா? என்று தோன்றுவதற்கு முன்னர் அவர் வாழுங்காலத்தில் மட்டுமல்ல. அவர் இவ்வுலகில் வாழாத காலம் ஒன்று வரும். அந்தக் காலத்திலும் நடுக்கம் எனபதைச் சிறிதும் அறியாத கொள்கைக் குவியல்கள் புலனாகின்றன. இப்புலப்பாட்டின்… வெளிப்பாடுதான் அடுத்துவரும் இரண்டு அடிகள்.

“தோன்ற வரும் விடிவினிலே நடுக்கத் தோன்றும்
துவளாத கொள்கையிலே நடுக்கமில்லை!”

அடுத்து அந்தக் கவிஞருக்குப் பெரியாரின் முகமும் அம்முகத்தில்தோன்றும் வெண்தாடியும் தோன்றுகின்றது. தாடி முளைப்பதும், அது கறுத்தத் தோன்றுவதும் பின்னர் வெளுத்துத் தோன்றுவதும் காம் விளைக்கும் கோலங்களே. பெரியாரின் உருவத்துக்கு மேலே முகத்தில் வெண்தாடி தோற்றம் பெற்று அசைவது தெரிகின்றது. அவர் அருள் செய்யும்போது அழுகு செய்யும் முழுமதி போலவும், மக்கள் வாழ்வின் அறியாமைக் கூறுகளைக் கடியும்போது செஞ்ஞாயிறு போலவும் தோன்றும் அவர் முகத்தில் வெண்தாடி அசைவது திங்களும் – ஞாயிறும் ஒக்கத்திகழும் வானத்தில் வெண்ணிற பேகம் தவழ்ந்து வருதல் போன்று தோன்றுகிறது,

அந்த மேகத்தைக் காற்றுத்தான் தவழ வைக்கின்றது. பெரியாரின் முகத்தில் தவழ்ந்தாடும் தாடியையும், அந்தக் காற்றுத்தான் அசையும்படிச் செய்கின்றது. “வளிமிகின் வலியும் இல்லை”* என்றாற்போலப் பஞ்சபூதங்களில் வலிமையில் சிற்ந்து விளங்கும் காற்றே! நீ வானத்தில் தாவி மேகத்தை அசைத்து வானவெளியில் தவழ வைக்கின்றாய்! அதே சமயத்தில் பெரியார் முகத்தில் பாய்ந்து அவருடைய வெண்ணிறத் தாடியையும் அசைக்கின்றாய்! உண்மைதான்.. உன்னையொன்று கேட்கின்றேன். பெரியாருடைய வளமான சிந்தனை ஓட்டத்தை உன்னால் அசைக்கவோ அல்லது தடுக்கவோ முடியுமா? நிச்சயம் முடியாது என்று எண்ணிய கவிஞரின் கருத்து வெளிப்பாடுதான் அடுத்து வரும் இரண்டு அடிகள்.

“வான் தவழும் வெண்மேகத் தாடியாடும்
வளமான சிந்தனைக்கோர் ஆட்டமில்லை.”

அடுத்து, கவிஞர், பெரியாருக்கு யாரையாவது உலமையாகச் சொல்லி, பெரியார் இயல்பைப் புலப்படுத்தலாமா என்று எண்ணத்தை ஓடவிடுகின்றார். அந்தக் கவிஞனின் எண்ணம் முதலில் தமிழ்நாட்டைத் துழாவுகின்றது. இங்கு யாரும் இல்லை. அடுத்து இந்தியப்பெருநிலத்தை துழாவுகின்றது. அங்கும் யாரும் தென்படவில்லை. யாமறிந்த வரையில், உலகையே பார்ப்போமென உலகம் முழுவதையும் தேடுகின்றது. அங்கும் யாரும் புலப்படவில்லை. மீண்டும் கவிஞரிடமே வந்உத தன் முடியமையைச்சொல்லி முறையிடுகின்றது. இம்முறையீட்டை எண்ணிய கவிஞருக்கு தமிழ் இலக்கியம் கையாளும் மரபு ஒன்று புலனாகின்றது. தான் பாட எடுத்துக்கொண்ட பொருளுக்கு அந்தப் பொருளுக்கு அந்தப் பொருளையே உவமையாக்க் கூறலாம். என்பதுதான் அந்த மரபு. இந்த போராட்ட முடிவின் வெளிப்பாடுதான் அடுத்து வரும் இரண்டடிகள். இங்கு “ஆன்றிந்த பெரியார்” என்ற தொடரைக்கையாண்டிருப்பது மிகவும் நோக்கத்தக்கது. ஆன்றவிதல் என்பது கல்வி, கேள்வி, ஒழுக்கம் யாவற்றானும் நிறைந்து, அவாறு நிறைந்ததன்பயனாகப் பொறிகளால் புலன்களால் அடங்கியிருத்தல் என்பது கருத்து. இவ்வாறு ஆன்று அவிந்த பெரியார்கள் பலர் இருந்தாலும் அவர் எல்லாரினும் பெரியவராக நமது பெரியார் விளங்குகின்றார். ஆகவே அவருக்கு இணை அல்லது ஒப்பு உலகில் யாருமில்லை. அவருக்கு அவரே இணையாவாரெனப் பாடி முடிக்கின்றார்.

ஆன்றவிந்த பெரியாருக்கும் பெரியார் எங்கள்
அய்யாவுக் கிணை அவரே மற்றொரு இல்லை.”

அடுத்து பெரியாருடைய புரட்சியான செயன்முறைகள் நினைவுக்கு வருகின்றன. செயன்முறைகள் நினைவுக்கு வருகின்றன. செயன்முறைகள் என்று எண்ணும்போது, எவ்வளவோ கூறலாம். என்றாலும் ஒன்றே ஒன்று தலைசிறந்ததாக்க் கவிஞர் உணர்விற்குப்படுகின்றது. அதுதான் நீதிமன்றத்தின் நீதிக்கும நீதி கூறிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி. ஆகவே அதனையே முதற்கண் பாடுகின்றார். அக்கருத்து பின்வருமாறு ‘பா’ வடிவில் அமைகின்றது.

“நீதிமன்றின் நீதிக்கும் நீதி சொல்வார்!”

என்பதுதான் அது. அரசாள்வோரால் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தல் நிற்பவருக்குத் தமீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டும், அதைனையொட்டி அதினின்றும் தப்பிக்கிற வழிமுறைகளும்தான் நினைவுக்கு வரும். குற்றச் சாட்டுக்களுக்குத்தான் விடை கூறவார்கள். ஆனால், பெரியார் அப்படி இல்லை. நீதி மன்றத்தை அவமதித்தல் (Contempt of Court) என்ற குற்றம் சாட்டப்பட்டுச் சென்னை உயர்நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டார். அப்போது பெரியார் தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தைப் பற்றிய கவலையோ கருத்தோ கொள்ளாமல் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மாநகரில் அமைந்துள்ள உயர்நீதிமன்றமும் நீதிபதிகளும் எவ்வெவ்வாறு நடந்து கொண்டனர். எவ்வெவ்வாறு இனி அமைந்து நடைபெற வேண்டுமென்ற கருத்துக்களடங்கிய அறிக்கை கொடுத்து வாதாடி நின்ற- உலகிலெங்குமில்லாத புதுமையைக் கண்டு வியந்து நின்றோம். பெரிய முழுப்புரட்சியாளராக விளங்கும் பெரியாரின் இச்செயலையே ‘நீதிமன்றின் நீதிக்கும் நீதி சொல்வார்” என்று கவிஞர் கண்ணதாசன் குறித்துப் பாடினார்.

அடுத்துப் பின்வரும் அடிகளாக பாடலாக வருகின்றன.

“சாதியெனும் நாகத்தைத் தாக்கித தாக்கிச்
சாகடித்த பெருமை அவர் தடிக்கே உண்டு.”
பொதுவாக இந்திய நாட்டிலும் சிறப்பாகத் தமிழ்நாட்டிலும் சாதி என்னும் நாகப்பாம்புக்குச்செல்வாக்கு மிக இருந்தது. அச்செல்வாக்கு முழுவதையும் மலையாள நாட்டில் உள்ள வைக்கத்தில் தொடங்கிச்சாகும் வரையிலும் எதிர்த்துப் போராடினார். இதனால் உலக நடைமுறையில்பெரும்பாலமு சாதியின் நச்சுத் தன்மை ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அந்த நச்சுப்பாம்பு அரசியல் சட்டத்தைத்துணைகு அழைத்துக் கொண்டு பெரிய பெரிய கோவில்களின் கருவறைகளில் குடிபுகுந்து கிடக்கின்றது. இதன் நச்சுத் தன்மையை இப்போது யாவரும் நன்கு உணர்ந்துவிட்டனர். ஆதாலால் கருவறைகளிலும் இதனுடைய நச்சுத்தன்மையின் கெடுதிகளைப் பலர் பாட்டாக பாடினாரகள். அறவுரையாக்க்கூறினார்கள். சிலர் உபதேசமும் செய்தார்கள். னால்,பெரியார்தான் அதன்ற தீமைக்களை யாவரும் நன்கறியும் வண்ணம் எடுத்துக்காட்டியதோடு, உலக நடைமுறைகளிலும் அற்றுப் போகும் செயல்முறைகளைத் தொடருந்து செயது வந்தார்.

“நாதியிலார் நாதி பெற நாப்படைத்தார்
நாற்பத்து அயங்கோடி மக்களுக்கும்
பேதமிலா வாழ்வுதரப்பறந்உத வந்தார்.
பிறப்பினிலே பெரியாராய்த் தான்பிறந்தார்!”

பெரியாரின் நா பொதுமக்களுக்காக எண்ணற்ற மேடைகளில் முழங்கியது.

அவர் முழக்கத்தால் இதுவரை நாதியற்றுக்கிடந்த மக்கள் நாதி உடையவராக ஆனார்கள். அது மட்டுமல்ல! தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் இந்துயப்பெருநிலப்பரப்பு முழுவதுக்குமே பேதங்களற்ற ரு நல்வாழ்வைத் தருதற்காகப்பிறவிப் பெரியாராக பெரியார் தோன்றினார் என்று பாடுகின்றார். பெரியூருக்கு அமைந்த தலைமைக் கூறுகள் செயற்கையால் அமைந்தவையல்ல, இயற்கையாகவே தலைம்கள் கூறுகள் அவரிடம் பொதிந்துள்ளன் என்று பாடியுள்ளார்.

இத்தகு பாடலைப் பாடிய கவிஞர் கண்ணதாசனின் நிலை இப்பொழுது எற்றென்று எண்ணிப் எண்ணி இருங்உகம் நிலையக இருக்கின்றது. பெரியார் கொள்கையிலும் நடவடிக்கைகளிலும் ஊறித்திளைத்துப்பொங்கி வந்த இப்பாடல்களே அக்கவிஞரின் தற்கால பிழைப்புக்கு இரங்கி நகுமென நாம் நம்புவோமாக.

இப்பாடலில் பெரியாருடைய மூத்துத் தளர்ந்த உடலியலும், உள்ள இயலும் செயற்பாட்டியல்களும் அப்படியே படம் பிடித்தது போலப் பாடியுள்ள அழகைக் காணுகின்றோம்.

பெரியாரின்முழுப் புரட்சியான கருத்துக்களில் ஆண் பெண் பற்றிய கருத்துக்களை மட்டும் பார்ப்போமாக.

எல்லா உயிரினங்களைப் போலவே மக்களும் ஆணும் பெண்ணுமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த ஆண் பெண் பற்றிய கருத்துக்களில் பெரியாருடைய புரட்சிக்கருத்துக்க்ளை காணலாம். தமிழில் அமைந்த் இச்சொற்களி ஆணைவிடப் பெண் குறைந்தவள். அதாவது ஆணுடைய தலைமையில் அடங்கி வாழ வேண்டியவள் என்ற கருத்து இருக்கின்றது.
ஆண், பெண் முதலான எல்லாப்பொருள்களையும் ஆளுதற்கு உரியவன் என்ற கருத்துடைய சொல். பெண் என்ற சொல்லை இருவகையில் ஆயலாம். பெண்-பெட்பு-அதாவது ஆணால் விரும்பப்படுபவள் என்ற கருத்து இச்சொல்லின் அடிப்படையில் அமைந்திருக்கின்றது. (Etymologival Meaning)

பெண் என்ற சொல், பேண் என்ற சொல்லிருந்து வந்ததாக்க்கூறலாம். அதாவது உயிரினங்களில் பின் சந்ததிகளைப் பேணும் இயல்பு பெண்களுக்கே அமைந்துள்ளது. ஆகவே பேணும் இயல்புடைமையால், பெண் என்றும் கூறலாம். எப்படியிருந்தாலும் ஆண்,பெண் என்று தமிழில் அமைந்த இச்சொற்கள் ஆணுக்கு உயர்வையும், பண்ணுக்கு தாழையும் கொடுக்கும் கருத்துங்களையும் உட்கொண்டுள்ளன.

இக்கருத்து மக்கள் காட்டுமிராண்டிகளாய்த் திருந்த காலத்துக் கருத்து. இச்சொல்லாட்சியும் நாட்டு நடைமுறைகளும்தான் ‘காட்டுமிராண்டி மொழி தமிழ்’ என்று சொல்ல வைத்தது என்று சொன்னால் நாம் எவ்வாறு மறுக்க இயலும்?

தலைவன் – தலைவி என்றாற்போல், ஆண் பெண் என்று சொற்களில் சமநிலைக் கருத்து இல்லை.

உலகம் எங்கணுமே பெண்கள் ஆண்களைப்போல உரிமைகளை இன்னும் முழுமையாக அடையவில்லை. அரைகுறையாகவே ஆங்காங்கு சில பல உரிமைகளை அடைந்துள்ளனர். உலக மதங்களும், மத வழிப்பட்ட சிந்தனைகளும பெண்ணுரிமையை மறுத்தே வந்துள்ளன. பெண்ணைத் தாழ்வு பட்டுதலை, மேற்கண்ட சொற்கள் விளக்குவதைக்கண்ட்ஓம். பெணைக் குறிக்க அமைந்த இச்சொற்கள் மட்டுமன்று. பெண்ணுக்கு அமைக்கப்பட்டுள்ள உனவு-உடை-அணிகலன் பற்றிய நடைமுறைகள் எலாமே பெண்டிமையை வற்புறத்துவனவாகவுள்ளன என்றுபெரியார் கூறுகின்றார். உண்மையில் ஆணுக்குப்பெண் எல்லாவகையிலும் ஒத்த இயல்புள்ளவளே தவிர குறைந்த இயல்புள்ளவளல்ல என்பது பெரியாருடைய அசைக்கமுடியாத கருத்தாக பல இடங்களில் வற்புறுத்திக் கூறப்படுகின்றது.

இவ்வாறு பெரியார் கூறுவதற்குப்பெருந்தடையா விளங்குவது பிள்ளைப் பேறாகும். இவை ஒவ்வொன்றையும் பெரியார்நோக்கில் பார்ப்போம்.

உணவு

ஆணைப் போலப்பெண் உண்ணக்கூடாது என்பது நெடுநாளைய வழக்கமாகும். குறைவாகவே உண்ண வேண்டும். ‘உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு’ – என்று பழமொழி போலப் பாடியுள்ளனர். ஆண்களுக்கு இத்தகைய நடைமுறை இல்லை. பெண்ணும் ஆணைப்போலவே உணவை உண்டு உடல்வளமுடையவளானால், ஆண்பெண்ணை அடக்கி வைக்கமுடியாத என்று கருத்தில் இப்படிக்கூறியிருக்கலாம். உள்ளனபோது ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் அடங்கி அன்போடு வாழ்வதைப்பெரியார் ஒருபோதும் மறுக்கவில்லை.

ஆனால், ஆணாகப் பிறந்துவிட்ட காரணத்தாலேயே ஆண்மகன் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதும், பெண் பொறுத்துக்கொண்டு அடங்கித்தான் இருக்க வேண்டுமென்பதும் உடல் உள உயிரியல்புப்படி எவ்வாறு பொருந்தும் என்பது பெரியார் கேள்வியாகும்.

குறைந்த அளவான உண்டியை உண்ணுவதால் பெண்களின் அழகு நிலைபெறும் என்று கருதுவாரும் உண்டு. குறைந்த அளவான உண்டி என்பது அகவையைப்பொறுத்து அமைவது. இளம் வயதினர்ர் அதிகமாக உண்ணுவதில் தவறில்லை. வயது ஏற ஏற உணவைக் குறைத்துக் கொள்ளவது நலம் பயக்கலாம். இது ஆண்-பெண் இருவருக்கும் பொதுவேயொழிய பெண்ணுக்கு மட்டும் என்பது எவ்வாறு பொருந்தும்?

அழகைப் பேணுதல் என்பது பெண்களுக்குமட்டும் சிறப்பாக உரிமையக்குவதற்கு ஒரு நியாயமும் இல்லை. ஆண்-மகன் அளவுக்குப் பெண்மகளும் அழகைப் பேணக் கொள்ளுவதில் தவறில்லை. ஆண்களைவிட அதிக்க் கவலை எடுத்துக்கொண்டு, ஆண்களைக் கவரப் பெண்கள் முயற்சிப் பார்களேயானால், அதுபெண்ண்டிமையில்தான் கொண்டுபோய் விடும். பெண் என்ற பெயரின் அடிக்கருத்தாகவுள்ள ஆடவனால் விரும்ப몮படுபவள் என்ற அடிமைக் கருத்துக்கே வழிவகுக்கும்.

அகநானூற்றுப் பாடல் ஒன்றில் குறிக்கப்பட்டுள்ளது. மக்களைப் பெற்றெடுத்த நான்குபெணக்ள்கூடத் திருமண நிகழ்ச்சியை நடத்துகின்றனர். அவர்கள் மணமக்களைப் பொதுவாக வாழ்த்தாமல் அல்லது அறிவுரை கூறாமல் பெண்ணுக்குமட்டும் அறிவுரை கூறுகின்றனர்.

அவ்வறிவுரை, “பெற்றோன் பெட்கும் பிணையை ஆக” என்பாதகும். இதன் கருத்து இன்னைக்கொண்டோன் விரும்பும வண்ணம் நீ நடந்துகொள் என்பது. இது பெண்ண்டிமையை வற்புறுத்துகின்றது. ஆணுக்கு அதுபோலக் கூறவில்லை.

நம்நாட்டிலும் உலகின்பல பகுதிகளிலும் பிளை பெறவும், ஈடுகளில் சமயல் செய்யவும்தான் பெண்களுக்கு வாய்ப்பளிக்கின்றனர். இவை இரண்டிற்கும் பெண்கள் உரியவர்கள் என்று கூறும்படியாக அவர்கட்கு வாழ்கையில் அமைந்துள்ள நடைமுறைகளும் உள்ளன. இப்பழக்க வழக்கத்தால் மக்களினத்தில் ஒரு பகுதியினரின் முழுமையான ஆற்றல் உலகதிற்குப்பயன்படாமலே அழிக்கப்படுகின்றது. என்று பெரியார் கூறுகின்றார். சோவியத் ரஷ்யாவில் ஆண்களுக்கு அமைந்துள்ள எல்லா வேலைகளிலும் பெண்களுக்கும் இடமுண்டு என்று அறிகின்றோம். நம் நாட்டிலும் பொறியியல்துறை-காவல்துறை ஆகியவற்றில் பெணகளுக்கும் இப்போது இடம் கொடுத்திருப்பதை அறிகின்றோம். இம்முறை இன்னும் பெலுக வேண்டும். ஆணும், பெண்ணும் ஒரே வைகயான உடையை அணிதல் வேண்டுமென்பார், பெரியார் சட்டென்று ஆணா, பெண்ணா என்று பிரித்தறியா வகையில் உடையிதல் வேண்டும். இப்படி அணிவதால் ஆணும் பெண்ணும் சமம் என்ற உண்மை நடுமுறையிலும் வரும். பெண்ணுக்கு 18 முழச்சேலை உடுத்திக்கள்ளச்செய்யும் பழக்கம் பெண்ண்டிமையின் சின்னம் என்பது பெரியாரின் கருத்தாகும். விரைந்து ஓடவிடாதவாறு தடுக்கவே இவ்வாறு செய்தனர் என்பார். மேற்கு நாட்டில் காலில் அணியும் செருப்பின் குதி உயர்ந்திருப்பதும் அடிமையின் சின்னம் என்பார்.

அணிகலன்கள்

பன்னெடுங்காலமாகத் தங்கத்தாலும் வெள்ளியாலும் பல்வேறு வகையான அணிகலன்களைச்செய்து பெணகளை அணிந்து கொள்ளச்செயவ்து இந்நாட்டினு பழக்கமாகும். தங்கத்தில் அணிகலன் செய்யும்போது உயர்ந்த மணிவகைகளை அதில் வைத்து அழுத்தச்செய்து அணிந்து கொள்ளுவதும் நம்நாட்டுப் பழக்கமாகும். விலை உயர்ந்த உடைகளையும், விலையுயர்ந்து அசிகலன்களையும் ணாண்கள் வாங்கிக் கொடுப்பது எதற்காக என்ற்ஆல் நல்ல அடிமைஆக வைத்துக் கொளவே என்று பெரியார் கூறுவார். மூக்கிலும் காதிலும் துளையிட்டு உயர்ந்த அணிகலன்களை அவைகளில் அணிவிப்பதன் உட்கருத்தைப் பெரியார் பின்வருமாறு விள்குகவார். ஆண்கள் முரட்டுத் தனமா அடிக்கும்பொழுது திருப்பி அடிக்காமல் முதுகை காடி அடிகளைப் பெண்கள் வாங்கிக் கொள்ளவே இவ்வாறு செய்துள்ளனர் என்பார். எதிராக நின்று சண்டையிட்டால் மூக்கிலும் காதிலும் அடிபடும்போது, அவைகளல் அணியப்பட்டிருக்கும உயர்ந்த அணிகலன்களுக்கு அழிவுவரும். அல்லது மூக்கோ, காதோ கிழிந்து போகலாம். இதற்காகப்பயந்து கொண்டு குனிந்து கொடுப்பதே பெரும்பாலான பெண்களின் வழக்கமாகும். ஆகவே பெண்கள் காதிலும் மூக்கிலும் துளையிட்டுக்கொள்வதும் விலையுயர்ந்த அணிகலன்களை அணிந்து கொள்ளுவதும் அடிமையின் சின்னம் என்று கூறவார். இலக்கியங்களில் பெச்களுக்கென அமைந்துள்ள உடை வகைகளையும் அணிகலன்களின் வகைகளையும் மிகுதியாக்க்கூறியுள்ளனர். இவைகளைச்சிறப்பத்துக்கூறுவதற்கே பல பாடல்கள் பாடப்பட்டுள்ளன.

பெரியார் நோக்கில் பார்க்கின்ற நமக்கு இவையெல்லாம் வீணானவை என்பதும் பெண்களை வீட்டினுள்ளும் அடுப்பினுள்ளும் முடக்கிப்போடும் கொடுமைச் சின்னங்கள் என்பதும் தெள்ளத்தெளியப்புலனாகின்றன. பெணகள் தாலி அணிந்துகொள்ளுவதை அடிமைச் சின்னம் என்பார். வைதிக முறைத் திருமணமோ அல்லது புரோகித முறைத் திருமணமோ இரண்டும் பெண்ண்டிமையை என்றென்றும் நிலைநிறுத்தும் நோக்குடையன என்று கூறுவார். திருமணமே கூடாது என்ற நிலை வரவேண்டுமென்பார். இன்னும் ஒருபடி மேலே சென்று திருமணம் செய்து கொள்ளவதைக்குற்றமாக (Crime) கருத வேண்டும் – அத்தோடு சட்டமாகவும் ஆகவேண்டும் என்பார். இக்கருத்துக்களெல்லாம் நடைமுறைக்கு வரும்போது இன்றுள்ள குடித்தன பாங்குகள் அழிந்துபோகும் தலைகீழான இப்புரட்சிக்கருத்துக்களை இந்திய நாட்டில் தமிழ்நாட்டிலோ யாரும் கூறியதில்லை.

பெரியார் வழியில் புரட்சிக் கவிஞர்

புரட்சிக் கவிஞர் பழைய குடும்ப முறைப் பாங்கில் ‘குடும்ப விளக்கு’ என்னும் எடுத்துக்காட்டான இல்லற வாழ்வை இலக்கியமாகப்பாடியுள்ளார். நல்ல குடும்பப்ப பாங்கை வலியுறுத்தவே ‘இருண்ட வீடு’ என்ற இலக்கியத்தையும் எதிர்மறைமுகத்தான் படைத்துள்ளார். தமிழக மக்களில் பலர், கருத்து வேறுபாடின்றி படித்துச்சுவைத்துக் கூறிக் கொண்டே இருப்பதை நேரில் நன்கறிவேன். எனக்கும் பல பாடல்களும் அதன் அழகுகளும் தெரியும். மேலே யான் குறித்த பெரியாரின் புரட்சிக் கருத்தைச்சிந்தித்த கவிஞர் இதுதான்சரி என்பை ஒத்துக்கொண்டு இக்கருத்தையே அழகான இலக்கியமாகப்பாடியுள்ளார். ‘அமைதியுலகம்’ – என்று இப்பாடலுக்குத் தலைப்புக்கொடுத்துள்ளார்.

கணவனும் மனைவியும் குழந்தைகளுமாக வாழ்கின்றனர். வீட்டில் வேலைக்காரி ஒருத்தி வேலை செய்கிறார். அந்த வேலைக்காரி சரிவர வேலை செய்வதில்லை. ஆகவே வீட்டுக்காரி பின்வருமாறு பேசலானாள்:

“நீ செய்யும் வேலையில் அழகில்லை-திருத்தம் இல்லை – பொறுப்பும் இல்லை” என்று கூறினாள். இதற்கு மறுமொழியாக வேலைக்காரி “பொழுதெல்லாம் செக்கு மாடு போல என் உடம்பு கெட்டுப்போகும் வண்ணம் வேலை செய்வதால் நீங்கள் குறை சொல்லுகிறீர்கள்” என்று கூறினாள். “நானும் அப்படித்தானே வேலை செய்கின்றேன்” என்று வீட்டுக்காரி கூற அதற்கு எதிராக ஒன்றும் கூறாமல முகத்தால் எரிந்து விழுவாள் போலச் செய்கையால் காட்டிவிட்டு வீட்டைவிட்டு வேலைக்காரி போய்விட்டாள். இச்செய்தியைக்கணவனிடம் சொன்னாள். கணவன் கூறுகின்றான்:-

“ஒருத்திக்கும் ஒருவனுக்கும்
வாழ்க்கையின் உடன்பா டென்னும்
திருமணம் ஒழிய வேண்டும்
தெரிந்தவர் கூடி அன்பு
புரிவதால் தோன்றும் மக்கள்
பொதுமக்கள் ஆதல் வேண்டும்
அருந்துதல் உறைதல் எல்லாம்
பொதுவென அமைதல் வேண்டும்
கட்டய வேலை வேண்டும்
கட்டாயக் கல்வி வேண்டும்
மட்டான அறிவு கொண்ட
வையகம் நான்கு றித்த
தெட்டிலா அமைதி நோக்கிச்
செல்வதே: சென்ற பின்னர்
தட்டில்லை எவ்வே லைக்கும்
தடையொன்றும் இருக்காதென்றான்

இப்பாடல்வரிகளைத் திருப்பித் திருப்பிப்படித்துப்பாருங்கள். இதன் கருத்தாழத்தைக் கண்டு கொண்டால் நம் நாட்டில் வழி வழியாக வரும் குடும்ப몮பாங்கு என்னவாகும் என்பை எண்ணிப் பாருங்கள்.

அடுத்துப் பெரியாருடைய நுணுக்கமான இன்னொரு கருத்தைக்காணுவோம். உலக நடைமுறையில் இன்ன பெயருடைய ஆண்மகன் பிறந்தான் அல்லது பெண்மகள் பிறந்தாள் என்று காட்டத் தகப்பன் பெயரிலுள்ள முதல் எழுத்தை மக்கள் பெயருக்கு முன்னால் எழுதுவது வழக்கமாக இருக்கின்றது. இது குறித்துப்பெரியார் – தாய்ப்பெயரின் முதலெழுதைத்தான் குழந்தைகளுடைய பெயரின் முன்னால் இட்டு எழுத வேண்டும் என்பார். இதுபற்றி விளக்கும்போது, இன்ன பெயருடையவர் அலது இன்ன பெயருடைய தாய பெற்றாள் என்பதுதான் உண்மை. அசைக்க முடியாத அய்யத்திற்கிடமில்லாத உண்மை. ஆனால், இன்ன பெயருடையவனை அல்லது இன்ன பெயருடையவளை இன்ன பெயருடை தகப்பன் பெற்றான் என்பது உண்மையாகவும் இருக்கலாம். உண்மையில்லாமலும் இருக்கலாம். ஆகவே தாயின் பெயரின் முதலெழுத்தையே குறிக்க வேண்டுமென்று கூறுவார்.

தஞ்சை மாவட்டத்தில் கொரடாச்சேரிக்கு பக்கத்தில், விடயபுரம் என்று ஒருசிற்றூர் இருக்கின்றது. அந்த ஊரில் பெருநிலக்காரக் குடும்பத்துக்குச் சொந்தமான வீடொன்றில் பெரியார் மாணவர்களுக்காகப் பயிற்சி வகுப்பு நடத்தினார்கள். அந்தக் குடம்பத்தாரின் செலவில் அது நிகழ்ந்தது. குடும்பத் தலைவர் பெரியாரிடன் மிக்க ஈடுபாடு கொண்டவர். ஈடுபாடு என்றால் சாதாரணமாக இல்லை. பெரியாரிடம் பேசும் போதெல்லாம் கைகட்டி வாய்பொத்திக் கவனித்துக்கொண்டுதான் பேசுவார். பெரியாரின் அன்றாட நடைமுறைகளைக் கவனித்துக் கொண்டிருந்த அவருக்கு ஓர் அய்யம் தோன்றியது. பெரியார் கடைசிக் காலத்தில் சில சமயம் உடலில் சில வலித் தொந்தரவு ஏற்பட்டு முக்கி முணகி… அம்மா! என்று வாய்விட்டு அலறுவார். இதனைக் கேட்ட அந்தப் பெரியவர் பெரியாரிடம் சென்று கைகட்டி, வாய்பொத்தி நின்று பின்வருமாறு கேட்டார்.

“அய்யா! நீங்கள் வலிதாளாமல் அலறும்பொழுது
அம்மா! என்றுதான் அலறுகிறீர்கள்!
அப்பா! என்று அலறக்கூடாதா?” என்றார்.

சட்டென்று அய்யா கூறிய விடை வருமாறு.
“அம்மாதானுங்களே தெரியும். அப்பாவை யாரு கண்டா? அப்பா யாராயிருந்தால் என்ன?அம்மா சொன்னபிறகுதான் அப்பாவைத் தெரியும்.

இந்த விடை கேட்பதற்கு எளிதாகத் தோன்றும். ஆனால் பெரியாருடைய தலைகீழான புரட்சியை குறிக்கும் கருத்து இதில் பொதிந்து கிடக்கின்றது. இந்த விடையில் குழந்தையைப் பத்து மாதம் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்துப் பாலூட்டி வளர்த்துப் பிறகு உண்டி கொடுத்துப் பேணும் பொறுப்பைத் தாய்தான் ஏற்றுக் கொள்கிறாள். ஆகவே தாய்தான் முதலில் நினைவுக்கு வருகிறாள் என்பது ஒருகருத்து. “இவனுக்குப்பிறந்தான். இவனுக்குப் பிறந்திருப்பானா? இவனுக்கே பிறந்தான். இவனுக்குப் பிறக்கவில்லை. வேறு ஒருவனுக்குப் பிறந்தான்.”

இத்தொடர் மொழிகள் குறிக்கும் கருத்துக்காகச் சமுதாயத்தில் எவ்வளவோ குத்துக்களும் வெட்டுக்களும் – கொலைகளும்-இவைகளை ஒட்டிய வழக்குகளும் நடந்த வண்ணம் இருக்கின்றன. இவைகளைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. யாருக்குப் பிறந்தால் என்ன? யாரோ ஒரு ஆண். அவ்வளவுதானே! இதனால் சமுதாயத்தில் கற்பு என்றும் விபச்சாரம் என்றும் வழங்கும் சொற்களுக்கு மதிக்கத்தக்க அல்லது இகழத்தக்க எந்தப்பொருளும் இல்லை என்பது பெறப்படுகின்றது.

ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் ஆழமான அன்பு கொண்டு அதவாது உடனுயிர் போகுமளவுக்கு அன்பு கண்டு வாழும் வாழ்க்கையைப் பற்றிய பேச்சே ல்லை. அவர்கள் நன்றாக வாழட்டும். ஆனால், ஆணும், பெண்ணும் ஒருவர்மீது ஒருவர் உணைமையான அன்பு கொள்ளாமல் திருமணம் செய்து கொண்டோமே என்பதற்கா மனவெறுப்போடு வாழுவது தேவையா? அப்படி உள்ள நிலையில் ஒரு பெண்ணோ ஒரு ஆடவணோ இன்னொரு ஆடவனையோ, பெண்ணையோ விரும்புவது அல்லது மணந்து கொள்வது குற்றமாகுமா? இதுதான் பெரியாருடைய சிந்தனை. ஆணும் பெண்ணுமாக ஒருவரை ஒருவர் விரும்பாதவர்கள் விலகி, விரும்பியவர்களோடு வாழ்வது சமுதாயத்தில் குற்றமில்லை-தாழ்வில்லை என்றாகிவிட்டால் ‘கற்பு’, ‘விபச்சாரம்’ என்று குடிகெடுக்கும் சொற்கள் இரண்டிற்கும் பொருளுமில்லை; யாதொரு மதிப்புமில்லை. கற்பு என்றும், விபசாரம் என்றும், பெண்கள் தலையில் மட்டும் சுமத்தி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சமுதாயத்தைச் சீரழித்து விட்டனர். இந்திய மத்திய அரசு புல்குரேணுகாதேவி என்ற அம்மையார் தலைமையில் ‘பெண்கள் நிலை ஆய்வுக்குழு’ ஒன்றை அமைத்தது. அந்தக் குழுவின் அறிக்கையில் சோரம்போதல் அல்லது விபசாரம் என்னும் பிரிவை (Adultery) குற்றப் பிரிவுகளிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று வற்புறுத்துவது அய்யாவின் பல ஆண்டுகட்கு முந்திய கருத்தென்பதை நாமுணரலாம்.

“We recommend that continuing to regard adultery as a Criminal offence is agaist the dignity of an individual and should be removed from the indian enl code (Report page-144)”

ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தனக்கு விருப்பமுள்ள உணவை உண்பதற்கும் – விருப்பமில்லாத உணவை விலக்கிவிடுவதற்கும் – இதனைப் போன்றே தனக்கு விருப்பமான துணிகளை வாங்கிக் கொள்ளுவதற்கும் விரும்பாத துணிகளை விலக்கிவிடுவதற்கும், விரும்பிய ஆடவனோடு விரும்பிய பெண்ணும்- விரும்பிய பெண்ணோடு விரும்பிய ஆடவனும் சேர்ந்து வாழ்வதற்கும் விரும்பாதபோது விலகி விடுவதற்கும் வேறுபாடே இல்லை. இவையெல்லாம் ஒரே தன்மையுடையன எனபது பெரியார் கருத்து.

இந்த நிலைமை சமுதாய வாழ்வில் வந்துவிடுமானால், ஆண்கள் பெண்கள் இடையே உண்மையான அன்பைத் தவிர வேறு போலியான அன்பிற்கு வழியே இல்லை. எல்லோரும் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள். மேலே யாம் குறித்த சிந்தனைகள் முழுவதும் பெரியாருடைய முழுப் பரட்சியான சிந்தனைகளாகும். இந்த நோக்கில் கலைகளையும் இலக்கியங்களையும் ஆக்க வேண்டும். சட்டங்களையும் இயற்றுதல் வேண்டும்.

இவ்வாறு மனித வாழ்வை எளிதாக்காமல் கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடுமையாக்கிவிட்டனர். ஆணுக்கும் பெண்ணுக்கும் அமையும் தொடர்பு பிறவிதறும் தொடர்வது என்று, வழிவழியாக்க் கூறிவந்துள்ளனர்.

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனா
கண்ணிறை நீர்கொண் டனள்.”*

தலைமகன் யான் உன்னை இப்பிறவியில் பிரிய மாட்டேன் என்று கூறினான். இதனைக்கேட்ட பெண் அடுத பிறவியில் பிரிந்து விடுவேன் என்ற கருத்து இதனால் புலனாகின்றதே என்று அழுதாள் என்று திருவள்ளுவர் பாடியுள்ள மேற்காட்டிய பாடலின் கருத்தால் காதல் என்பது பல பிறவிகளில் தொடர்ந்து வருவது என்று கூறப்படுகிறது.

மணிமேகலையில்,
“நினக்கிவன் மகனாத் தோன்றி யதூஉம்
மனக்கினி யாற்குநீ மகளா யதூஉம்
பண்டும் பண்டும் பலபிறப் புளவால்
கண்ட பிறவியே யல்ல காரிகை”

என்று வரும் அடிகளால் ஆண் பெண் தொடர்பென்பது பல பிறவிகளில் தொடரும் என்ற கருத்து வற்புறுத்தப் பட்டிருப்பதைக் காணலாம்.

இவ்வாறாக இலக்கிய்களும், புராணங்களும் பெரியவர்களின் வாய்ச்சொறுகளும் வற்புறுத்துவதால், உண்மைநென நம்பி இப்பிறப்பைப் பாழாக்கிக் கொண்டவர்கள் மிகப்பலராகும். அடுத்த பிறப்பில் குறிப்பிட்ட இந்தக் கணவனுடன் வாழலாம் என்ற நம்பிக்கையில்தான், வழிவழியாகப் பல ஆயிரக்கணக்கான பெண்கள் உடன்கட்டை ஏறினர்; அல்லது ஏற்றப்பட்டனர். இந்த நம்பிக்கையால் உடன்கட்டை ஏறுதல் அல்லது ஏற்றுதல் ஒழிக்கப்பட்ட இக்காலத்தில் விதவத் தன்மையப்பணகளுக்உக மட்டும் சுமத்தி அல்லற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

கணவனை இழந்த பெண்கள் எரிபுகுதலை தலைக் கற்பாகவும், கைம்மை நற்றலை கடைக் கற்பாகவும் மக்கள் கருதினர். புறநானூற்றில் “பல் சான்றீரே! பல் சான்றீரே!” என்று தொடங்கும் பெருங்கோப்பெண்டின்பாடல் கணவன் இற்நுவிட்டபின் தீப்பாய்ந்து உயிர்விடுதல் கைம்மை நோற்றலைவிடச் சிறந்தத என்று சிறப்பித்துப் பேசுகிறது மணிமேகலையில் ஆதிரை என்ற ஒரு கறுபுடைய பெண் சிப்பித்துப் பேசப்படுகின்றாள். இவள் வரலாற்றைச் சீத்தலைச் சாத்தானார் தீப்புகுதலைச் சிறப்பிக்க வேண்டுமென்பதற்காகவே பொய்யும் புளுகுமாக்க்கற்பனை செய்து பாடியுள்ளார்.

பெரியார் காலத்தில் உடன்கட்டை ஏறுதல் ஒழிந்துவிட்டது. ஆனால் குழந்தை மணம்-விதவைத் தன்மை-பொட்டுக்கட்டி விடுதல் அல்லது தேவதாசியாக்குதல் பொருந்தாமணம் போன்ற பெண்களைப் பற்றிய கொடுமைகள் நம் நாட்டில் நடந்த வண்ணமாகவே இருந்தன. இவை எல்லாவற்றையும் எதிர்த்து முதற்குரல் கொடுத்தவர் பெரியார்தான் என்று நாம் எண்ண வேண்டும் இக்கருத்துக்களைப் பெரியார் வெளியிட்டபோது இந்த நாட்டில் உள்ள படித்தவர்களும் பாமர்ர்களும் யாவருமே தலைகீழாகப் புரட்சி செய்கின்றாரே என்று நடுங்கினார்கள். தங்களால் முடிந்த அளவு எல்லா வகையாலும் எதிர்த்தார்கள்.

பெரியார் பேசிய அளவில் நில்லாமல் எண்ணற்ற விதவைத் திருமணங்களை எதிர்ப்புக்கிடையேதான் முன்னின்று நடத்தி வைத்தார். பெரியாரின் இத்தகைய புரட்சிக் கருத்துக்களையும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரும் பேரறிஞர் அண்ணாவும், மற்றவர்களும் கவிதையாகவும் நாடகமாகவும் ஆக்கிக்காட்டினார்கள்.

விதவைத் தன்மை பற்றிப் புரட்சிக் கவிஞர்

“எனைமணந்தார் இறந்தாரென் குற்றமல்ல-இறந்தவுடன்
மங்கலநாண் நல்லாடைகள்
புனைமலர் குங்கும மணிகள் போன துண்டு
பொன்னுடலும் இன்னுயிரும் போனதுண்டோ?

என்றும்,

“வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால்பின் மணத்தல் தீதோ?
பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்
பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ?”

என்றும்,
“கோரிக்கை யற்றுக் கிடக்கு தண்ணே – இங்கு
வேரிற் பழுத்த பலா – மிகக்
கொடியதென் றெண்ணிடப் பட்டதண்ணே-குளிர்
வடிக்கின்ற வட்டநிலா”

என்றாற் போன்ற பொருள் பொதிந்த கவிதைகளைப்பாடியுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள் தன்னுடைய “குமாஸ்தாவின் பெண் அல்லது கொலைகாரியின் குறிப்புக்கள்” என்னும் நாவலில் பின்வருமாறு எழுதுகின்றார்.

“தாலியிழந்தேன்! சமுதாயத்தில் சனியனானேன். பெற்றோர் கண்களில் நீர்வழியும் நிலை பெற்றேன். சாய்ந்த தளிர்போல் இருந்தேனேயன்றிச்சருகாக இல்லை. பொட்டிடாத என் நெற்றியும், பொலிவுடன்தான் இருந்தது. வாடாத பூவாக இருந்தேன். விஷ வாடையுள்ள மலர் என்று உலகம் என்னைக் கருதிற்று. மாளிகை இடிந்தால் மண்டபதில் பாதியும் மதிற் சுவருமாவது மிஞ்சும் என்பார்களா! என் வாழ்வில் கோபுரம் இடிந்து குப்பை மேடாகிவிட்டதே!”

-என்று விதவை புலம்புவது போக்கருத்தும் உணர்ச்சியும் கலந்த பாங்கில் எழுதியுள்ளமையைக் காணுகின்றோம்.

பிள்ளைப் பேறு.

கருத்தடை பற்றிய கருத்தை முதன் முதல் பெரியார்தான் துணிந்து கூறினார். ‘கர்ப்ப ஆட்சி’ என்ற நூலையும் உலகில் யாரும் சிந்திக்காத நாளிலேயே சிந்தித்து வெளியிட்டார். ஆணும், பெண்ணும் கூடி வாழும்போது பெண்களின் வயிற்றில் கருத்தரிப்பதென்பது இயற்கையாக அமையும் ஒழுங்கு முறைதான். அதனை யாரும் மீறமுடியாது என்ற அளவில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் இயற்கையாக அமைவது என்பதற்காக, கடவுள் கொடுக்கின்றான் நாமென்ன செய்ய முடியும்? என்று பொறுப்பற்ற முறையில் பொய் பேசிக்கொண்டு, அளவுக்கு மீறிய பிள்ளைகளைப் பெற்று அதனால், மனித இனம் அவதிப்பட வேண்டுமா? என்பதுதான் பெரியார் கேள்வி.

பள்ளத்தை நோக்கி வெள்ளம் பாய்ந்தோடுவது இயற்கைதான் என்று மழை நீரை ஓடவிடுகின்றோமா? இல்லையே. குளமாகவும், ஏரியாகவும், அணைக்கட்டாகவும் தேக்கி பயிர் செய்யவில்லையா? இதனைப் போன்றே

பிள்ளைகள் அளவிற்கு மீறும்பொழுது பிள்ளைப் பேற்றை ஏன் கட்டுப்படுத்தக்கூடாது? இதுதான் பெரியார் சிந்தனை. பெரியாரின் இக்கருத்தைப் புரட்சிக் கவிஞர் பின்வருமாறு சுருக்கிக் கருத்தும் நயமும் கலந்த பாங்கில்,

“காலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக்
கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன குற்றம்?”
என்று பாடியுள்ளார்.

கழுவாய் இல்லாத பெரிய குற்றங்களில் ஒன்றாக “மாணிழை மகளிர் கருச்சிதைத்தலை” புறநானூற்றுப் பாடலொன்று கூறகின்றது. எல்லா மதச் சார்பான நடவடிக்கைகளிலும் உலகியல் சார்பான பழக்க வழக்கங்களிலும் கருச்சிதைத்தல் மிக்க் கொடுமையான குற்றமாக்க் கருதப்பட்டே வந்துள்ளது.

இவை எல்லாவற்றையும் மீறித்தான் பெரியார் பிள்ளைப் பேற்றைக் கட்டுப்படுத்த வேண்டுமென்ற புரட்சியான கருத்தை வெளியிட்டார்.

அடுத்து இதற்கு மேலும் சென்று பிள்ளைப்பேற்றால் ஒரு பயனும் இல்லை என்று கூறுகின்றார். ஆணும் பெண்ணுமாக்க் கூடிவாழும் உயிரினங்களில எந்த உயிரினமும் பிள்ளைபெற வேண்டும் என்று நோக்கில் கூடுவதே இல்லை என்று கூறிவிட்டுப் பின்வருமாறு எழுதுகின்றார்.

“மனிதன் பகுத்தறிவுக்காரன் என்ற ஆணவத்தால் மனிதனுக்கு ஏற்படும்அநேக முட்டாள்தனமான செய்கைகளைப்போலக் குழந்தை பெறவேண்டுமென்ற முட்டாள் தனமும் ஏற்பட்டு அது ஒரு ஆசையாகி, சொத்தாகி மோட்சத்திற்கு உதவும் காரியமாகி கடைசியாய் வீண் துன்பமும் பட்டு மற்றவர்களுக்கும் தொந்தரவு கொடுப்பதைத் தவிர வேறு ஒரு பயனும் இல்லை.

இக்கருத்து மிக்க்கடுமையானதாகத் தோன்றலாம். குழந்தையே வேண்டாம் என்கின்றாரே! குழந்தை வேண்டும் என்று எண்ணத்தில் பெண்ணோடு கூடுவது என்பது முட்டாள்தனமான செய்கை என்கிறாரே என்று தோன்றலாம். பின்னே பல்வேறு இடங்களில் பெரியார் சொல்லியுள்ள இடங்களை ஆய்ந்தால் இக்கூற்றின் உண்மை புலப்படும். இக்கருத்தையே புரட்சிக்கவிஞர் பின்வருமாறு பாடியுள்ளார்.

“தோன்றியுள்ள மக்கள் நலம் யாவரும் பல்வேறு வகையான இன்பங்களை அனுபவிக்கின்றார்கள். இந்த இன்ப்கள் அல்லது நன்மைகள் யாவும் நம்மைப்போல இங்கு இன்னும் மக்கள் தோன்றாமையால்தான் என்பதை நாமுணரவேண்டும். நம்மைப்போல்மக்கள் தோன்றியிருப்பார்களானால் நம் அடைந்து அனுபவிக்கும் நன்மைக்கூறுகள் யாவும் நமக்கு முழுமையாக்க் கிடைக்காது.

ஒன்று பங்கிட்ப்பட்டுக்குறையும் அல்லது இன்னும்மக்கள்அதிகமாகப்போனால் நமக்கு கிடைக்க்காமலே கூடப்போகலாம். ஆகையால் மக்களுக்கு நன்மைகள் என்பன நம்மைப்போல மேலும் பிறவாத மக்கள் நமக்குக்கொடுத்த கொடை என்று பாடினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். இதன் கருத்து பிள்ளை வேண்டியதில்லை என்பதாகும்.

உலகத்தில் நாம் பிள்ளை வேண்டும் என்று விரும்புவது எதற்காக என்பதைப் பெரியார் பிறிதோரிடத்தில் பட்டியல் போட்டுக் கட்டி அதற்கு விளக்கமும் தந்துள்ளார்.

1. தான் தேடி வைத்துள்ள சொந்துக்கு தனக்குப் பிறகு வாரிசு வேண்டும்.

2. வயது ஆகி நமக்கு முடியாமல் போகிறபோது பாதுகாக்க வேண்டும்.

3. மோட்சத்திற்குப் போகத் திதி திவசம் கொடுக்கப் பிள்ளை வேண்டும்.

இவைகளைத் தவிர வேறு காரணம் கூற முடியாது.

மனிதனுக்குத் எவ்வளவு சொத்திருந்தாலும் ஒவ்வொரு மனிதனுக்கும் அது கவலையையும் தேவையையும் பெருக்கிக் கொண்டே இருக்கிறது. சிறிய வீடும் கொஞ்ச நிலமும் அல்லது ஏதோ ஒரு அலுவல் பிழைப்பை நடத்துகின்ற அளவுக்கு இருந்தால் போதும் என்பாள். அது கிடைத்துவிட்டால் அதற்கு மேலும் வசதியுடைவர்களை அல்லது ஊதியம் பெறுகின்றவர்களைப் பார்த்து அவர்களைப் போல தனக்கும் பெறகின்றவர்களைப் பார்த்து அவர்களைப் போல தனக்கும் ஊதியம் வேண்டும் என்ற தேவை உடையவனாகி அவைகளைத் தானும் அடைய மிக்க கவலை கொண்டு அலைவான். இதனைப் போலவே இலட்சம், கோடி என்ற அளவில் சொத்துடையவனும் அவனுக்கு மேலும் சொத்துடையவனைப் பார்த்து, அவனளவு அடைய வேண்டுமெனத் தேவையும் அது காரணமாக்க் கவலையும் உடையவனாகவே அலைவான். அல்லது தனக்கென உள்ள சொத்து பறிபோகாமல் இருக்க வேண்டுமே என்ற தேவையுணர்வால் எப்போதும் கவலையுள்ளவனாகவே இருப்பான். ஆகவே தனிஉரிமை என்பது மனிதனுக்குத் தேவையையும் அது காரணமாக்க் கவலையையும் அளிக்க்கூடியது என்பதை நாம் உணரவேண்டும். இந்த நிலை மாறி சொத்தெல்லாம் அரசிற்குச் சொந்தம். அல்லது எல்லா மக்களுக்கும் சொந்தம். எல்லோருக்கும் கட்டாய வேலை உண்டு. எல்லோருக்கும் வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாமும் அரசாங்கத்தின் மூலம் அல்லது மக்களுக்குப்பொதுவான அமைப்பின் மூலம் கிடைகுமென்று ஆகிவிட்டால் மனிதனுக்கு கவலையோ தேவையோ நிச்சயம் இருக்காது. தனக்கென சொத்திருந்தால்தானே இவன் வாரிசு தேட வேண்டும். சொத்தே இல்லாதபோது வாரிசுக்குக வேலையே இல்லை. வயதானவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கியோ அல்லது முதியோர் காப்பகத்தின் மூலமோ முதுமை வாழ்வை நடத்திக்கொள்ள வழியுண்டு. ஆகவே இரண்டாவது தேவைக்கும் இடமில்லை.

மூன்றாவது உள்ளது, மோட்சம், அடைதல், புத்தென்ற நரகத்தில் போய்விழுந்து தொல்லைப்படாமல் காப்பாற்றப் படுதல்-திதி திவசம் கொடுத்தல் எல்லாம் புரோகிதர்கள் பணம் பறிக்கக்கட்டிச் சொன்ன பொய்மூட்டைகள். அறிவுடைய எவரும் இதில் நம்பிக்கை வைக்கமாட்டார்கள். மனித வாழ்வில் இந்த நிலை வரும்போது பிள்ளை தேவையா எனபதைச் சிந்தித்துப் பாருங்கள். மக்களின் இனப்பெருக்கம் என்னவாவது, குறைந்துபோகுமே என்று எண்ணலாம். இதற்குப் பெரியார் பின்வருமாறு கூறுவார். எலோரும் பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதில்லை. மாடுகளில் பொலிகாளைகளைத் தேர்ந்தெடுத்துக் கூடி வாழ்வதன் மூலமோ, சிறந்த ஆண்மகனின் விந்துவை எடுத்து பெண்ணின் கருப்பையில் செலுத்துவதன் மூலமோ நாட்டுக்கு வேண்டிய நன்மக்களைப் பெற்றுக் கொள்ளலாம்.இந்த நிலை நடைமுறையில் வருமா என்று சிலர் எண்ணலாம். பெரியார் பல எதிர்ப்புக்கிடையே பேசியதும் மாநாடுகளில் முடிவுகளாக உருவாக்கி நிறைவேற்றியதும் ஒவ்வொன்றாகச் சட்டமாகிக் கொண்டு வருவதை நீங்கள் எண்ண வேண்டும். குழந்தை மணம்கூடாது; பெண்களுக்குத் திருமண வயது வரும்பு வேண்டும் என்றார். இப்பொழுது சட்டமாக ஆகிவிட்டது. தேவதாசி ஒழிப்பைப்பற்றிப் பேசினார். வைதீகர்களும், தேசியவாதிகளும் எதிர்த்தனர். முடிவில்முன்னர்க்கூறிய கருத்தடை பற்றிய பெரியார் கருத்தே உலகில் வென்றது; சட்டமாக்கியது, ஆய்வுக்குழாய் குழந்தை பற்றி (Test Tube Baby) “இனி வரும் உலகம்” என்ற நூலில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதியுள்ளார். உலகில் அக்கருத்து நடைமுறைப் படுத்தப்பட்டது.

வைதீகத் திருமணமுறை, புரோகித்த் திருமணமுறை இரண்டையும் நீக்க வேண்டும் என்றார். புதியதொரு திருமணமுறை கொண்டு வந்தார். இதற்காக அவர் அடைந்த இன்னல் எவ்வளவு? இந்தத் திருமண முறையே ணசட்டப்படி செல்லாது என்று கட்டுப்பாடாக ஆட்சியாளர் கூறிக்கொண்டே வந்தனர். நாட்டு மக்களும் பெரியாரும் இதைப் பற்றிக் கவலைப்படாமல், திருமணங்களை ஆயிரக்கணக்கில் நடத்திக்கொண்டே வந்தனர். ஒன்றரண்டு திருமணங்கள் வழக்கு நிலைக்கு வரும்போது நீதிமன்றங்கள் செல்லாது என்றே தீர்ப்பு எழுதின. இதைப் பற்றியும் மக்கள் கவலைப்படவில்லை. பிறகுபேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக வந்தவுடன் சட்டமாக்கினார். இதிலொரு விந்தை என்னவென்றால் முன்னர் நடந்த திருமணங்களும், இனி நடக்கும் திருமணங்களும் சட்டப்படி செல்லுபடியாகும் என்றாக்கினார். விதவை மணம் வேண்டும் என்றார்.

ஆயிரக்கணக்கான இளம் பெண்களை விதவைகளாக வைத்துக்கொண்டு கற்புப் பெருமையையும் விபச்சார தாழ்ச்சியையும் பேசிக்கொண்டிருப்பதில் பொருள் இருக்கின்றதா என்று கேட்டார்- எழுதினார். விதவை மணம் தாராளமாக நடந்து கொண்டிருக்கின்றது. . மேலும் விபசாரம் கற்பு இரண்டும் பெண்களை அவமிது அடிமைகொள்ளும் நடைமுறைகள் என்று கூறினார். நடுவணரசு திருமதி. புல்குரேணுகா தேவி தலைமையில் அமைந்த “அனைத்திந்திய, பெண்கள் நிலை ஆய்வுக்குழு” அய்யாவின் மேற்குறித்த கருத்தை வலியுறுத்தியது. அது வரும் காலத்தில் சட்டமாகலாம். தொழிலாளர்கள் தொழில் செய்யும் நினுவனங்களில் ஊதியம் வாங்குபவராக இருக்க்கூடாது. அது அவமானம். தொழிலமைப்பில் முதலாளிகளைப் போல் பங்குதாரராக ஆக வேண்டும். முதலாளிகள் உழைப்பதில்லை. பணம் போடுகின்ற்னர். தொழிலாளர்கள் பணம் போடுவதில்லை. உழைப்பைக்கொடுக்கின்றனர். பொருள்கள் உருவாகுகின்றன. இதனால் முதலாளிகளும் தொழிலாளிகளும் ஒத்த இயல்புடையவர்களே. ஆகவே, இலாபத்தில் பங்கு வேண்டும் என்றார். இக்கருத்து தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் முதன் முதலாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்னரே பேசினார்-எழுதினார். இன்று தமிழக அரசு ஏற்றுக்கொண்டது.

அவர் கருத்து நிறைவேறும் காலம்தான் நாம் உலகில் மற்றவர்களோடு ஒத்த நிலையில் முன்னேறியவர்களாவோம் என்று உறுதியாக நம்புவோமாக.