மக்கள் வாழ்வு ‘உள்ளம்-உரை-செயல்’ என்ற இம்மூக்கூறுகளால் ஆனது. இம்மூக்கூறுகளின் புல்பாடே மக்கள் வாழ்வு என்று கூறலாம். பெரியாரும் தமக்கென அமைந்த இம்முக்கூறுகளாலும் நீண்ட நெடிய வாழ்வு வாழ்ந்தார். அவர் வாழ்ந்த வாழ்வே மக்கள் பின்பற்றத் தக்கதாகும். மேலும் அவர் மக்கள் வாழ்க்கை இவ்வாறு அமையவேண்டுமென எண்ணி வகுத்த வழிமுறைகளும் சிறந்த வாழ்க்கை நெறிகளாக விளங்குகின்றன. இந்த இருவகையாலும் பெரியார் மக்களினத்துக்கு ஒரு தவறுபடா வழிகாட்டியாக (infallible guide) விளங்குகின்றார்.

பெரியாரின் வாழ்க்கையின் அடிப்படைக் கோட்பாடுகள்

இவ்வுலகும் இவ்வுலக வாழ்வும் உண்மையானவை. இவ்வுலக வாழ்க்கைக்குப் பின்னர் வாழ்க்கையில்லை. இவ்வுலக வாழ்க்கையில் பற்றுவைத்து முயன்றால் இன்னல்களைக் கடந்து இன்பமெய்தி வாழமுடியும். வாழ்க்கையைத் தொடங்கும்போதே “ஊரும் சதமல்ல! உற்றார் சதமல்ல! ஆண்டவா! என்னை அழைத்துக்கொள்!” என்று தாமரை இலைத் தண்ணீர் போல வாழ்ந்தால் வாழ்வையும் வகையாக நடத்த முடியாது. துன்பம் தோல்விகளைக் கொண்டு துவண்டுவிடாமல் முன்னேறவும் முடியாது. வாழ்நாள் தானாகவே குறைந்து போகும்.

நம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை – சீரிய சிந்தனையோடு கூடிய பகுத்தறிவு -சோர்வற்ற முயற்சி -ஆகிவற்றோடு முனைந்து செயலாற்றினால் வெற்றி பெற்றுவிட முடியும் என்ற கொள்கையடிப்படையில் வாழ்ந்தவர் பெரியார். அதனால் வரலாற்றுக்கால புத்தரும், பெரியார் கண்டு ஒன்றன்பின் ஒன்றாக்க் குவித்தார். நீண்டநாள் வாழ்ந்தார். உறங்குவது போலும் சாக்காடு என்பார்களே! அந்த வண்ணம் நிம்மதியாக நீண்ட உறக்கத்தை மேற்கொண்டு விட்டார். பெரியாரின் மேற்காட்டிய வாழ்க்கைக் கோட்பாடு நமக்கு வழிகாட்டியாக அமைகின்றது.

பெரியார் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை நெறிகள்:

பெரியாரை முதன் முதல் காணுகின்ற ஒருவருக்கு அவருடைய கவர்ச்சியான தோற்றம்தான் நினைவுக்கு வரும்.

“பொன்னிறமேனி, பூரித்த வெண்முகம், பூவெனத் திரண்டிருண்டு எதனையும் கூர்ந்து நோக்கும் விழிகள். அவ்விழிகளில் காணும் துடிதுடிப்பு. அடர்ந்த புருவம். அசைகின்ற வெண்தாடி காண்டற்கு எளிமை. கருத்துக்கு அடிமை. எடுத்த குரலில் இனிமை தவழும் பேச்சு..”

பெரியாரின் இந்த தனித்த இயல்புகளுக்கு ஆட்படாத மனிதர் உலகில் இல்லை. ஆண்டால் முதியோர் இளையோர் கொள்கையால் மாறுபட்டோர்-உடன்பட்டோர்யாவராயினும் அவர்மனிதர் என்ற நிலையில் மதிப்புக் கொடுத்துப் பழகும் பழக்கம், பெரியாரிடம் நின்று நிலைத்துப்போன சாதி-மதங்களை -பழக வழக்கங்களை வேரொடு பெயர்க்க வந்த இந்த வீர்ருக்கமைந்த அடக்கமும் பொறுமையும் அளவிடற்கரிய இயல்புகளாகும். எந்த ஒன்றிலும் பெரியார் காட்டும் அடக்கமும், பொறுமையும் அவர மன்னிலும் வலுவைப் பெற்றுக்கொண்டு பகையை முற்ற முறியடத்தற்கு உதவிய முன்னோடிக் கருவிகள் என்பதை நாமுணர வேண்டும். இதன் கருத்து எந்த வொன்றிலும் பெரியார்காட்டிய பொறுமையும், அடக்கமும் “பொருதகர் தாக்கத்திற்குப் பெயரும் தன்மைத்து” என்பதை அறிதல் வேண்டும். மானமும் அறிவும் மங்கிய மக்கட்கு நல்வழிகாட்டத் தன்னந்தனியாராய்ப் புறப்பட்டுத் தனைகள் பல கடந்து, உடன் வருவொரு உண்டா? இல்லையா? என்பதைத ஒரு பொருளாக மதியாது அவர் ஊன்றிச் சென்ற காலடிச் சுவடுகள் உலகவரலாற்றில் உயர்த்திப் பேசும் உயர்திறத்தன. இத்தகைய வாழ்வுக் கூறுகள் நமக்குப் பல்லாற்றலும் வழிகாட்டியாக விளங்கும் என்பதில் அய்யமில்லை.

1924ல் பார்ப்பன மேல்சாதித் தன்மையை அவர்கள் கூடாரமாக விளங்கும் காங்கிரசுக்குள்ளே இருந்த கொண்டே ஒவ்வொரு கூட்டத்திலும் எதிர்த்துப் பேசினார். இதுமட்டுமல்ல. கடவுள்-மதம்-சாத்திரம்-பொருளற்ற சடங்குகள் யாவற்றையுமே எதிர்த்தார். இருந்தும் பெரியாரிடம் அளவற்ற பற்றுக் கொண்டிருந்தனர். காரணம், அவருக்கமைந்த நுண்ணறிவு-பேச்சாற்றல்-செல்வ்வாழ்வு- செயலாற்றும் திறம்- உண்மை-நேர்மை ஆகிய உயர்ந்த மனிதப் பண்புகட்காக போற்றினர்.

இருந்தும் பெரியார் தொடர்ந்து தன்னுடைய கருத்துக்களை வற்புறுத்தியே வந்தார். அப்பொழுது காங்கிரசிலிருந்த பெரிய படித்த அரசியல் மேதைகளான பார்ப்பனர்கள் பின்பவருமாறு பெரியாருக்கு அறிவுரை கூறினர்.

“நாயக்கரே! (அந்நாளில் அய்யாவை இவ்வாறே அழைப்பர்) பார்ப்பன உயர்நிலையென்பது மனிதவாவில் நிலைத்தப்போன ஒன்று. வரலாற்றுக்கால புதன் எதிர்த்தான். தோற்றான். புராண கால இரணியன், இராவணன் முதலியோர் முயன்று தோற்றனர். நீங்கள் வெற்றி பெறப் போகின்றீர்கள்? இது வீண் வேலை. வேண்டாம். எங்களுடன் இருங்கள். உங்கட்கு எல்லாமும் இங்கு உண்டு” என்று கூறினார்கள்.

பெரியார் கூறினார்:

“நீங்கள் சொல்லுவது உண்மை. அவர்கள் தோற்றார்கள். நான் தோற்க மாட்டேன். காரணம் அவர்கள் தோற்ற வழிகளை நான் நன்றாக அறிவேன்” என்று தன்னம்பிக்கையோடு, துணியை உதறித் தோளில் போட்டுக் கொண்டு அப்போது சேர்ந்த சிலருடன் 1925 – இல் காங்கிரசு கூடாரத்தைவிட்டு வெளியேறினார். இந்தக் காலத்திற்கு முன்னர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆரியம் எங்கும் எதிலும் அரசோச்சியது. பெரியார் தொடுத்த அறிவடிப்படையிலான உரிமைப் போராட்டத்தின் விளைவாக ஆரியத்தின் சமுதாய ஆதிக்கம் சாய்ந்தது. பத்து வயது பார்ப்பனப் பையன் என்பது ஆண்டு முதிர்ந்த பெரியவரை

“அடே! முனியா! வாடா!”

என்று அழைப்பதும், ‘சூத்திரன்-சூத்திரச்சி” என்ற இழிந்த பொருளைக் கொடுக்கும் சொற்களால் பேசிக் கொண்டதும் ஆகிய கீழ்மைகள் சமுதாயத்தினின்றும் அறவே ஒழிந்தன. சமுதாய மதிப்பும் ஒழிந்ததும், சோழ நாட்டுக் காவிரிக் கரைக்குப் பக்கத்தில், அரசர்கள் அக்கிரக்காரங்களை அமைத்து, வளமிக்க நிலங்களை மானியமாக்க் கொடுக்க வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் அந்தந்த ஊர்களிலுள்ள நிலங்களையும், வீடுகளையும் விட்டுவிட்டு வடபுலம் நோக்கியோ, பெரிய நகரங்களை நோக்கியோ ஓடிவிட்டனர்.

தமிழக அரசியலில் இருக்கும் இடம்தெரியாமல் ஒடுங்கி வாழும் நிலை ஏற்பட்டுவிட்டமு. அப்படிய ஏவெளிப்பட்டாலும் திராவிடர் இயக்கங்களைப் பங்கு போட்டுக் கொண்டு வெளிப்படமு நிலை இன்உ தமிழகத்தில் இருக்கின்றது. இன்னும் பெரியாரின் முடிந்த முடிபான கொள்கையாகிய ஆரியம் ஒழிந்த பார்ப்பனீயம் ஒழிந்த மனிதர்களே வாழும் நிலை ஏறபட வேண்டுமானால் நம்மவர்கட்குப் பதவிப்பித்துக் கூடாது. குறிக்கோளில் கண்ணுங்கருத்துமாக இருந்து செயல்பட்டால் நிச்சயம் முடியும் என்று கூறியுள்ளர்.

இங்கே காட்டப்பெற,பெரியார் வாழ்க்கைநெறி நமக்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் பயக்கும் என நாம் நம்புவோமாக!

கருத்துக்களில் மாறுபாடு-மனிதரில் இல்லை

பெரியாருடைய வாழ்க்கை நெறியாக, நாம் கடைப்பிடிக்க வேண்டிய மிக இன்றியமையாத வாழ்க்கை நெறி இது. மனிதர் என்ற நிலையில் பெரியாருக்கு யாரும் பகையில்லை. எவ்வளவு வேறுபட்ட கொள்கையுடையவர் வந்தாலும், உதவி வேண்டினாலும், அவர் மனிதர் என்ற நிலையில் உரிய மதிப்புக்கொடுத்து வேண்டிய உதவிகளைச் செய்வது பெரியாருடைய இயல்பாகும். அவருடைய வாழ்க்கையின் வெற்றிக்கு இது மிகவும் அடிப்படையானது என்பதை நாமுணர வேண்டும் இந்த வாழ்க்கை நெறி எல்லோருக்கும் வேண்டியது என்றாலும், பொதுவாழ்க்கையில் ஈடுபடும் யாருக்கும் வேண்டிய தலைசிறந்த நடைமுறையாகும்.

அவருடைய நீண்ட நெடிய பொதுவாழ்வில் அவரால் மிக அதிகமாகத் தாக்குண்டவர்கள் பார்ப்பனர்க்ள் அல்லது “பிராமணர்கள்.” இந்தத் தாக்குதல் என்பது அவர்கள் கொள்கை அல்லது கோட்பாடு என்ற அளவில் நின்றதே தவிர பார்ப்பனர் என்ற மனிதரையல்ல என்பதை நாம் தெளிவாகவுணர வேண்டும்.

பார்ப்பனைரை மட்டும் ஏன் குறை கூறவேண்டும்?

வரலாறு தெரிய ஆண்ட மன்னர்களான பாண்டியர், பல்லவர், பிற்காலச் சோழர், நாயக்கர், ஆங்கிலேயர் ஆகிய மன்னர்கள் கால ஆட்சிகளின் அரசியல் பொறுப்பும், சமுதாயப் பொறுப்பும் பார்ப்பனர்கள், கையிலிருந்தன. ஆங்கில அரசுக்காலத்தில் கொஞ்சம் வேறுபாடு இருந்திருக்கலாம். மற்ற மன்னர்கள் யாவரும் பராப்பன மந்திரிகளின் யோசனைப்படி மனுநீதியை வைத்து அரசாண்டவர்களே. இவர்கட்குப்பிறகு அரசும் சமுதாயமும் ஒக்க வீழ்ந்து நாடோடிகளாக வந்த ஆங்கிலேயர்-பிரெஞ்சுக்காரர்-டச்சுக்காரர்-போர்த்துக்கீசியர்கள் ஆகிய அந்நிய நாட்டார்கள் கைப்பற்றி ஆளுதற்கு நாட்டையும் சமுதாயத்தையும் கீழான நிலையில் வைத்திருந்ததற்குப் பார்ப்பனர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். நம்நாடு உரிமையடைவதற்கு மன்னும், உரிமையடைந்த பின்னும் சமுதாய நலன்களைக் கருதிக் கொண்டுவந்த சீர்திருத்த முறைகள் எல்லாவற்றையும் எதிர்த்தவர் பார்ப்பனர்களே. இராசாராம் மோகன்ராய் பார்ப்பனராக இருந்தும், உலகளாவிய தமது கல்வியறிவால் உடன்கட்டை ஏறுவதோ அலது ஏற்றுதலோ கூடாது என்று சொன்னதறகுப பார்ப்பனர்கள் எதிர்த்தனர்.

குழந்தை மணத் தடைச்சட்டம் – பெண்களுக்கு சொத்துரிமை-தேவதாசி விலக்குச் சட்டம்- கோயில் நுழைவுச் சட்டம் போன்றவற்றுக்கெல்லாம் எதிர்ப்புச் செய்தவர்கள் பார்ப்பனர்களே. தேசீயவாதிகள் என்று சொல்லப்பட்ட பார்ப்பனர் திரு. வ.வே.சு அய்யர் தலைமையில் சேரன்மாதேவியில் அமைந்த குருகுலத்ததில் பார்ப்பனப் பிள்ளைகளுக்குத் தனியே உணவும் , பார்ப்பனரல்லாத பிள்ளைகளுக்குத் தனியே உணவும் சமைத்துப்போட ஏற்பாடு செய்திருந்தார். இதனால் பெரிய வேறுபாடு தோன்றி, முடிவில் குருகுலத்தை மூடுபடியாக ஆகிவிட்டது.

அரசு செலவில் அமைந்த, பொது உணவு விடுதிகளில் தம்மவர் சமைத்துப்போட, ஏற்பாடு செய்துகொண்டனர். சாப்பிடு இடத்திலும் தனியே இருந்து சாப்பிட வழிசெய்து கொண்டனர் புகைவண்டி நிலையங்களில் அமைந்துள்ள உணவுவிடுதிகள் இவ்வாறே நடந்தன. பெரியார் தலையிட்டு அந்த வேறுபாடுகளை நீக்கினார்.

சாதி வேறுபாடுகள்:

சாதிவேறுபாடுகள் இந்தியச் சமுதாயத்தின் கட்டுக்கோப்பை குலைத்துவிட்டது. இந்தக் கொடுமையை சைவ அடியவர் நாவுக்கரசர் முதல் இராமலிங்க அடிகள் காலம் வரை மிக விளக்கமாகவும், குறிப்பிட்டும் சாதி வேறுபாடுகளைக் கண்டித்துள்ளனர்.

“சாத்திரம் பல பேசும் சழக்கர்கள்!
கோத்திமும் குலமும்கொண் டென் செய்தீர்!”

என்று திருநாவுக்கரசர் 1400 ஆண்டுகட்கு முன்னர் பார்ப்பனைரைத்தான் வெளிப்படையாகச் சுட்டிப் பாடியுள்ளார். இன்னமு மற்றவர்களும் பாடியுள்ளனர். அவைகளையெல்லாம் எடுத்துக்காட்டி விரித்துப் பேசவிரும்பவில்லை. இன்று இந்திய நாட்டின் ஆட்சிமுறைக்கு அடிப்படையான அரசியல் சட்டத்தை வகுத்துக் கொடுத்தவர்களும் பார்ப்பனர்களே! இந்த அரசியல் சட்டத்தில் தீண்டாமையை விலக்கிவிட்டுச சாதிவேற்றுமைக்குப் பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளனர். அரசியல் சட்டம் 17-வது பிரிவு “Untouchablity is abolished’ என்று கூறுகின்றது. ஆனால் தீண்டாமைக்குக் காரணமான “Caste is abolished’ – என்று கூறவில்லை.

இந்துக்கள் யார்? என்று விளக்கும் போது இந்திய நாட்டில் வாழ்கின்ற கிறிஸ்துவர் – முசுலீம் அல்லாதவர் யாவரும் இந்துக்களே என்று கூறுகின்றனர். கோவில் அர்ச்சகராகும் உரிமை தங்களுக்கே உண்டு என்று வாதிடுகின்றனர். தமிழ் நாட்டு சட்டமன்றம் இந்து மத்த்தைச் சார்ந்த எல்லோருக்குமே அதற்குரிய சாத்திரப் பயிற்சி முதலிய தகுதிகளைப் பெற்றால் அர்ச்சகராகும் உரிமையுண்டு – என்று ஒருமனதாக யாருமே எதிர்க்காமல் நிறைவேற்றியிருந்தும் அச்சட்டம் செல்லாதென உச்சநீதி மன்றத்துக்கு வழக்கைக் கொண்டுபோய் தோற்கடித்தவர்கள் பார்ப்பனர்களே ஆவார்கள்.

வகுப்புவாரி உரிமை

வகுப்புகள் இருக்க வேண்டும். அதாவது சாதிகள் இருக்க வேண்டும் என்று அரசியல் சட்டம் கூறுகின்றது. சாதிகள் உள்ள நாட்டில் அந்தந்த சாதிகளின் மக்கள்தொகை அடிப்படையில் அரசாங்கத்தின் கல்வி வாய்ப்புகள் – வேலை வாய்ப்புகள்-அளிக்கப்டவேண்டும் என்பதுதான் முறையாகும்- நீதியும் ஆகும். இந்த அடிப்படையில் இந்த நாட்டில் வாழும் மக்களுக்கு வாய்ப்புக் கொடுக்காமல் திறமை என்னும் பொருத்தமில்லாத காரணங்களைக் கூறிக்கொண்டு 100க்கு 3 பேரே உள்ள பார்ப்பனர்கள் கலவி – ஏலை வாய்ப்புகளைத் தமதாக ஆக்கிக் கொண்டு பன்னெடுங்காலமாக வாழ்கின்றனர்.

உண்மையாக, இந்த நாட்டில் வாழும் பெரும்பாலான ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கென எதை எண்ணினாலும் – பேசினாலும்- செய்தாலும் -அது பார்ப்பன எதிர்ப்பாக மூடிகின்ற மேற்கொண்ட பார்ப்பனர் எதிர்ப்பென்பது முழுக்க முழுக்க நீதியோடும் நேர்மையோடும் பட்டது என்பதை நாமுணர வேண்டும். சாதிகள் ஒழிந்து எல்லோரும் மனிதர் என்ற நிலை வரும்வரை பார்ப்பனர் பற்றி அய்யா அவர்களின் கணிப்புக்கள் கல்லில் எழுதிய எழுத்துப்போல அழியாத இயல்புள்ளவே என்பதை நாமுணர வேண்டும்.

பெரியாருடைய வாழ்க்கைநெறி பார்ப்பனர் அல்லாத மக்களிடையே ஒரு பெரிய வரலாறு காணாத விழிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பான்மையோராக வாழும் இந்த நாட்டு மக்கள் தங்களுக்குள் உயர்வு தாழ்வு பேசிக்க கொண்டு சின்னாபின்னமாகச் சிதறுண்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இழிந்த ஏழ்மையுடைய தன்மதிப்பற்ற வாழ்க்கையில் ஆழ்ந்து கொண்டிருந்தனர். இந்த நாட்டில் நாம் முன்னேற வேண்டுமானால் நமக்களு இருக்கும் சின்னஞ்சிறிய வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டுமென்ற உணர்வை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்திக் காட்டியவர் பெரியோரேயாகும். தவத்திரு. குன்றக்குடி அடிகளார் இக்கருத்தைப் பின்வருமாறு கூறுகின்றார்.

தமிழர்கள் சாதி கருதியோ, மதம் கருதியோ, கட்சி கருதியோ-பகை பாராட்டாமல் தமிழர் என்கின்ற இனமானங்காக்கும் பண்பினராக வளர வேண்டும். வாழவேண்டும் என்ற சங்க காலம் முதற்கொண்டு இல்லாத ஒரு புதுத் த்த்துவத்தை உருவாக்கித் தானே நடத்திக் காட்டி மற்றவர்களையும் அவ்வாறு வாழுமாறு தூண்டியபெருமை பெரியாரையே சாரும்,”

பெரியார் காண விரும்பிய வாழ்க்கை நெறி;

“என்னைப் பொறுத்தவரையில் என்னைப்ப பற்றி யார் என்ன நினைத்துக்கொண்டு இருந்தபோதிலும் எனது முடிவான லட்சியம்-அதாவது எண்ணம் ஈடேறுமானால்அது உச்ச ஸ்தானம் எற்ற உயரிய கூட்டு வாழ்க்கை முறையாகத்தான் இருக்கும் என்பது என் அபிப்ராயம்.”

இந்த கூட்டு வாழ்க்கை முறையை பெரியார் இந்நாட்டு நிலைமைக்கேற்ப எண்ணுகின்றார். இந்தியாவில் சாதி உண்டு. உலகில் சாதி இல்லை. அங்கெல்லாம் இரண்டு வகுப்புக்கள் உண்டு. ஒன்று உழைக்கும் வகுப்பு. இரண்டு, உழைப்பைச் சுரண்டும் வகுப்பு–இந்தியாவில் உள்ள சாதி அமைப்பு முறையானது-மக்களுடைய அறிவையும் உழைப்பையும் உயர்சாதியினர் சுரண்டிவாழும் அடிப்படைத் தன்மை உடையது. இந்தச சாதியுணர்வு இங்குமதம்-கடவுள்-சாத்திரம் இவைகளோடு பின்னிப் பிணைந்த ஒன்றாக அனுபவிக்க வேண்டிய உரிமைகள் பொருந்தாத காரணங்களைக் காட்டி மறுக்கப்படுகின்றன. மத்த்துறையில் கோடிக்கணக்கான வருவாய் உடைய கோயில்களிலெல்லாம் பிறவியால் உயர்சாதி என்று ணொல்லிக்கொண்டு வாழுகின்ற பார்ப்பன இனம் தமக்கே உரிமையுடையதாகப் பல்லாண்டுகளாக அனுபவித்துக் கொண்டிருக்கிறது. பார்க்கும் வேலைக்குத்தொடர்பில்லாத -தகுதிகளைத் தகுதியாக வைத்துக் கொண்டு உயர் சாதியினரே வேலை வாய்ப்புக்களையும் கல்வி பயிலும் வாய்ப்புக்களையும் பெற்றுக்கொண்டு வாழும் அவல நிலை இருக்கின்றது.

ஆகவே, இந்த நாட்டில் உடைமைகளைப் பொதுவாக்குவதற்குமுன் உரிமைகளைப் பொதுவாக்க வேண்டிய ஒருநிலை இருப்பதைக்கண்டார். உடைமை பொதுவாக்கினால் அந்த உடைமைகள் தனி உரிமையுடையவர்களுக்கே போய்ச் சேர்ந்துவிடும். இக்கருத்தினைப “பொது உரிமையா? பொதுவுடைமையா?” என்ற தலைப்பில் விரிவாக ஆய்ந்து விளக்கியுள்ளார்.

மேலும் இந்திய நாட்டில் கடவுள் மதம் பற்றிய மூட நம்பிக்கைகள் மிகவும் அதிகமாக இருக்கின்றன. உலக மதங்கள் எதிலும் கடவுள் பிறப்பதில்லை. இந்து மதத்தில்தான் கடவுள் பிறக்கின்றார். பிறந்தது மட்டுமல்ல, பிறந்து செய்த செயல்கள் மிகவும் கீழ்த்தரமானவைகளாக்க் கற்பனை செய்து அந்தக் கற்பனைகளே கடவுளுக்குப் பெருமை என்று புகழ்ந்து கொண்டிருக்கின்றனர். “எல்லாம் கடவுள் செயல், நம்மால் ஆவது ஒன்றுமில்லை”-என்ற கோட்பாடு மத நம்பிக்கையுடைய கோடானு கோடி மக்களின் உள்ளத்தில் ஊறிக்கிடக்கும் எண்ணமாகும். இந்த வாழ்வில் துன்ப்ப்புட்டால் அடுத்த பிறவியில் உயர்ந்த வாழ்வு கிடைக்கும் என்ற பொய்யான நம்பிக்கையுடையவர்களாக மக்களில் பெரும்பாலோர் வாழுகின்றனர். அறிவியல் வளர்ந்துள்ள இக்காலத்திலும் நோய் வந்தால் அதற்குரிய மருத்துவம் செய்யாமல் கடவுள் செயல் என்று பூசாரிகளை நாடும் மக்கள் மிக அதிகமாகவுள்ளனர். திருப்பதியிலும் சபரிமலையிலும் பழநி மலையிலும் நிகழும் விழாக்களில் கலந்து கொண்டு கடவுளுக்குக் காணிக்கை செலுத்திவரும் மூட மக்கள் நிறைந்த நாடாக நம்நாடு இருக்கின்றது. உள்ளபடியே நாம் செலுத்தும் பணம் அல்லது காணிக்கைப் பொருள் கடவுளுக்குப் போகிறதா என்று பகுத்தறியும், அறிவற்ற மக்கள் நிறைந்துள்ள நாடு இது.

இத்தகைய மூடநம்பிக்கைகள், கடவுட் கோட்பாடுகள் மக்கள் உள்ளத்திலிருந்து அகலுமானால் நாடு நன்னிலை அடையும் என்பது பெரியார் கண்ட வாழ்க்கை நெறியாகும்.

பொருளுடைமை – சொத்துடைமை பற்றிப் பெரியார் எண்ணங்கள்:

எந்த தனிமனிதருக்கும் சொத்துரிமை இருக்க்கூடாது. எல்லா நிலங்களும் எல்லா உடைமைகளும் அரசாங்கத்துக்கு உரிமையுடையதாக ஆக்க வேண்டும். தனிஉடைமை முறை இருப்பதால் நாட்டில்போட்டி போட்டுக் கொண்டு எதைச் செய்தாவது பொருளைச் சம்பாதிக்க வேண்டும் என்ற முனைப்பில் மக்கள் பாடுபடுகின்றனர். இந்த போட்டிக்கு ஒரு எல்லையே இல்லை. “ஏதிருந்தும் உள்நிறைவில்லார் உலகத்தில் எண்ணிலார்” என்று புரட்சிக் கவிஞர் பாடியுள்ளது போல மனம் நிறைவில்லாமல் அலையும் செல்வர் நம்நாட்டில் மிகுதி.

செல்வமுடையவனும் கவலைப்பட்டுக் கொண்டு அலைகிறான். மனிதனுக்கு இல்லாமை போதாமை போன்றவைகளால் ஏற்படும் கவலை ஒழிந்து வாழ வேண்டுமானால் அது பொதுவுடைமை கொண்ட வாழ்க்கை நெறியால்தான் ஆகும் என்பது பெரியார் கருத்து.

மனிதனுடைய கவலைக்கு அடிப்படை பேதநிலையே:

மனிதன் தனக்குத் தேவையுள்ள அளவுக்குக் கிடைக்கவில்லை என்றால்கூட கவலைப்பட மாட்டான். அவன் தனக்குள்ள தேவையை வேறு வழியில் சரிக்கட்டிக் கொள்ளவும், அவனால் முடியும். ஆனால் அவன் கவலைப்படுவதற்குக் காரணம், ஒருவனுக்குத தேவையுள்ள அளவுக்குக் கிடைக்கின்றது. தான் பாடுபட்டும் தனக்குத் தேவையான அளவுக்குக்கிடைக்கவில்லையே, அவன் நம் அவளு பாடுபடா விட்டாலும் தேவைக்கு அதிகமாக்கிடைக்கின்றதே என்ற பேதநிலையை எண்ணும்போது மனிதன் மிக்க கவலை அடைகின்றான். இந்த மனநிலையை விளக்கப் பெரியார் பின்வரும் உவமையைக் கூறுவார்.

“மனிதனுக்கு முதுகில் கையில்லை. முதுகில் ஒரு கையிருந்தால் முதுகுப் பக்கம் சொரிந்து கொள்ளவோ அல்லது பயன்படுத்தவோ முடியும். இந்த வகையில் எண்ணினால் அது ஒரு தேவைதான். ஆனால் இந்தத் தேவையை எண்ணி யாரும் கவலைப்படுவதில்லை. காரணம் தேவையில்லை என்பது இல்லை. மக்கள் எல்லோருக்கும் ஒரே மாதியாக முதுகில் கையில்லை. ஆகவே இதுபற்றி யாரும் எண்ணி கவலைப்படுவது இல்லை. முதுகில் கை மக்களில் சிலருக்கு இருந்தால் இல்லாதவருக்கு பெருங்கவலையாக இருக்கும். ஆகவே மக்கள் போதாமையால் கூடக்கவலைப்பட மாட்டார்கள். ஒருவனுக்குப் போதவில்லை,பிறிதொருவனுக்கு நிறைந்திருக்கின்றது என்றால் இயல்பாகவே மனிதன் கவலை அடைய வேண்டியவனாகின்றான். ஆகவே, மனிதனின் கவலையை ஒழிப்பதற்கு வழி பேதநிலையை ஒழிப்பதுதான்” -என்பது பெரியார் கருத்து.

குடியிருப்புக்கள்:

ஆண் பெண் ஆகியவர்களின் வாழ்க்கை முறைகள் பற்றிய பெரியார் கருத்துக்களை முற்பகுதியில் விவரித்துக் கூறியுள்ளேன். மக்கள் குடியிருப்பதற்குத் தேவைக்கு மேல் பெரிய பெரிய வீடுகளைக் கட்டிக்கொணொடு வாழுகின்றோம். பெரிய மாட மாளிகளைகள் தேவையில்லை. இருவர் இருவராக வாழுவதற்கேற்கும் சிறிய வீடுகளாகவோ அல்லது இத்தகைய பல வீடுகள் கொண்ட பெரிய குடியிருப்புக்களாகவோ அமைத்துக்கொள்ள வேண்டும். இதனை அரசாங்கமே கட்டிக் கொடுத்து, குறைந்த வாடகை பெற்றுக் கொள்ளலாம். இந்த முறை நடைமுறைக்கு வருமானால் பல கோடிக்கணக்கான ரூபாய்கள் மிச்சமாகும்.

நகரத்தார் வீடுகள்:

நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் வாழும் முகவை மாவட்டத்தில் சென்று பார்த்தால், பெரிய அளவுக்கு பணம் வீடுகளில் வீணா முடங்கிக்கிடக்கின்ற நிலையைக் காணலாம். ஒரு தெருவுக்கும் இன்னொரு தெருவுக்குமாகப்பெரிய பெரிய வீடுகளாக ருக்கும். வீட்டுக்குரியவர்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளிலோ அல்லது வெளியூர்களிலோ இருப்பார்கள். வயதானர்கள் இரணொட்ரு பணியாட்களுடன் அந்தப் பெரிய வீட்டில் இருப்பபார்கள். வீடு முழுவதையும் கூட்டிச் சுத்தம் செய்யப் பல ஆட்கள் வேண்டும். இதனால் பல பகுதிகள் திறக்காமலேயே பூட்டப்பட்டு இருக்கும். இவர்களைப் பார்த்து அந்த நாட்டில் வாழும் மற்றவர்களும் போட்டி போட்டுக் கொண்டு பெரிய வீடுகளைக் கட்டியுள்ளனர. இவ்வாறு வீடுகளில் முடங்கிக் கிடக்கும் பணத்தைக் கொண்டு தமிழகத்தையே தொழில் வளமுடைய நாடாக ஆக்கிவிடலாம்.

சமையல் கூடங்கள்:

வீட்டுக்குவீடு அடுப்பு: வீட்டுக்கு வீடு பெண்கள் சமைப்பது என்பது வீணான வேலையும், பெண்ணினத்துகப்பெரிய தொந்தரவும் பொருள் இழப்பும் ஆகும். மக்கள் வேண்டிய உணவுகளை உண்ணுவதற்கு ஏற்ற எல்லா வசதிகளையும் உடைய பொதுச் சமையற் கூடங்களை நூற்றுக்கணக்காகவோ, ஆயிர்கணக்காகவோ அமைத்துக் கொள்ள வேண்டுமெனப் பெரியார் கூறுவார். எல்லாவற்றிற்கும் எந்திரங்களைப் பயன்படுத்தி எளிதில் உணவுப் பொருள்களை நல்ல சுவையோடு தயாரித்துக்கொள்ளலாம்.

உணவுப் பழக்கம்:

அரிசிச் சோற்றையே உண்ணும் பழக்கம் நன்மையுடையதல்ல. நம்முடலுக்கு வேண்டிய ஊட்டச் சத்துக்கள் முழுவதையும் நாமுண்ணும் உணவு வழங்கவில்லை. புலால் உண்ணும் பழக்கத்தை எல்லோரும் கடை பிடிக்கவேண்டும். நம்நாட்டில் சிறப்பாக மாட்டுக்கறி உண்ணும் பழக்கத்தைக் கொண்டு வருதல் வேண்டும். ஆட்டுப் பண்ணை-கோழிப்பண்ணை-மாட்டுப்பண்ணைகளை அமைக்க வேண்டும். கடலில் மீன்களை நிறையப் பிடித்தற்கு வேண்டிய வழிவகைகளைப் பெருக்கிக் கொள்ளவேண்டும். பல்வேறு தானியங்களாகிய உணவுப் பொருள்களை உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

ஆடை அணிகலன்கள்:

ஆண்களுக்கும் பெண்களுக்கும் எளிய பகட்டில்லாத ஆடைகள் வேண்டும். ஆணும் பெண்ணும் ஒரே வகையான ஆடைகளை உடுத்திக்கொள்ள வேண்டும். ஆணா? பெண்ணா? என்று எளிதில் அடையாளம் தெரியாத வகையில் ஆடைகள் அணிந்து கொள்ள வேண்டும். இதனால் ஆண்களும் பெண்களும் சம்ம் என்ற உணர்வு இயல்பாக ஏற்படும்.

பெண்களுக்கு நகைப் பைத்தியம் கூடாது. விலையுயர்ந்த ஆடைகளிலும் அணிகலன்களிலும் பெண்கள் விருப்பங்கொள்ளுவார்களானால் அது பெண்ண்டிமையில் கொண்டுபோய் விடும். மனித வாழ்வில் நாம் மேற்கொள்ளும் எந்த சிறுசெயலும், பயனில்லாமல் வாழ்க்கைக்குச் சுமையாக இருத்தல் கூடாது. வாழ்வில் மக்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு சிறு கூறுகளும் இயல்பானதாக – அல்லது தவிர்க்க முடியாத்தாக இருத்தல் வேண்டும்.

அய்யா எண்ணுகின்ற அளவுக்கு நம்நாட்டில் கூட்டுறவுப் பாங்கு-அல்லது பொது உடைமைப்பாங்கு-எல்லா நிலைகளிலும் நிலைபெறுமானால் மனித வாழ்வு இன்பமயமாக இருக்கும். அப்பொழுதும் சில கவலைகள் தோன்றலாம். மக்கள் துறைதோறும் நான்கு மணி நேரம் வேலை செய்தால் போதும். எல்லா வகையான மனித வாழ்வின் தேவைகளும் நிறைவு செய்யப்பட்டு விடும். மனித வாழ்விலன் தேவைகளும் நிறைவு செய்யப்பட்டுவிடும். அப்போது நான்கு மணி போக, எஞ்சிய பொழுதைக் கழிப்பது எப்படி என்ற கவலை தோன்றலாம்.

ஆகவே பெரியார் அவர்கள் அழிவு வேலைக்காரர் மட்டுமல்ல. ஒழிக என்று கூறுபவர் மட்டுமல்ல. அளவற்ற இன்ப வாழ்வை நல்கும் ஆக்க நெறிகள் பலவற்றையும் சிந்தித்து நல்லவண்ணம் முழுமைப்படுத்தியிருக்கின்றார்கள். அய்யா அவர்களி கருத்துக்கள் முழுவதும் புத்தகப் படிப்பாலோ அல்லது மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதாலோ பெற்றுக் கொண்டவையல்ல. அவையெல்லாம் பெரியார் அவர்களின் நேரிடையான அனுபவங்கொண்டு உருவானவை. எவ்வகையான அய்யத்திற்கும் இடமின்றி நடைமுறைப்படுத்தக்கூடியவை. பெரியார் அவர்களின் கருத்துக்கள் கடல்போலப் பரந்தும் விரிந்தும் உள்ளன. அவைகளை நீங்களும் ஒல்லும் அளவுக்குச் சிந்தித்து செயற்படுத்தக் கேட்டுக்கொள்கின்றேன்.

வயதில் அறிவில் முதியார் -நாட்டின்
வாய்மைப் போருக்கு என்றும் இளையார்
உயர் எண்ணங்கள் மலரும் சோலை
ஓதும் இராமசாமி வாழ்க!

ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டியவள்
அணிந்தறியா அணியாவார்
அறிந்தறியா அறிவாவார்
இப்பெரிய தமிழர்நாடு
கணந்தோறும் எதிர்ப்பார்க்கும் தலைவராவார்
கழறவோ அவர் பெயர்தான்
இராமசாமி!

தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிற்த்தை எழும்

அவர்தாம் பெரியார் – பார்
அவர்தாம் பெரியார்.

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்


நீதிமன்றத்தின் நீதிக்கும் நீதி சொல்வார்
நெறிகெட்டு வளைந்த தெல்லாம் நிமிர்த்தி வைப்பார்
சாதியென்னும் நாகத்தைக் தாக்கித்தாக்கிச்
சாகடித்த பெருமை அவர்தடிக்கே உண்டு
நாதியிலார் நாதிபெற நாப் படைத்தார்
நாற்பத்து அய்யங்கோடி மக்களுக்கும்
பேதமிலா வாழ்வுதரப் பிறந்து வந்தார்.
பிறப்பினிலே பெரியாராய்த் தான் பிறந்தார்.

- கவியரசு கண்ணதாசன்